42 வயது மதிக்கத்தக்க பிரபல நடிகரின் மனைவி ஒருவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட டிவி நடிகர் ஒருவருடன் இரண்டாவது முறையாக காதலில் விழுந்துள்ள சம்பவம் தான் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
பாலிவுட் சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகராக வலம் வருபவர் ரித்திக் ரோஷன். இவருக்கும் சூசன் கான் என்பவருக்கும் கடந்த 2000ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. கிட்டத்தட்ட 14 வருடங்கள் சந்தோஷமாக இல்லற வாழ்க்கையை நடத்தி வந்தவர்கள் 2014 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.
ரித்திக் ரோஷன் மற்றும் சூசன் கான் என்ற தம்பதியினருக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த ஊரடங்கு சமயத்தில் கூட தனது மகன்களுக்காக ரித்திக் ரோஷன் வீட்டில் சில மாதங்கள் சூசன் தங்கியிருந்தார்.
இதைப்பார்த்த ரசிகர்கள் மீண்டும் இருவரும் ஒன்று சேர்ந்து விடுவார்கள் என ஆனந்தத்தில் கொண்டாடினார்கள். ஆனால் ஹிந்தியில் கடைசியாக நடைபெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அர்ஸ்லம் கோனி என்பவருடன் காதலில் விழுந்துள்ளாராம் ரித்திக் ரோஷன் முன்னாள் மனைவி சூசன்.
சமீபத்தில் ஒரு பார்ட்டியில் சந்தித்த நண்பர்கள் ஆனவர்கள் அடுத்த சில வாரங்களிலேயே காதலித்து வெளியில் ஊர் சுற்றும் அளவுக்கு அவர்களது காதல் வளர்ந்து விட்டதாக பாலிவுட் வட்டாரங்களில் தெரிவிக்கின்றனர்.
இந்த செய்தியை ரித்திக் ரோஷன் ரசிகர்களால் கொஞ்சமும் ஏற்றுக் கொள்ள முடியவில்லையாம். அவ்வளவு பெரிய நடிகரின் மனைவி என்ன இப்படி செய்கிறார் என தற்போது அவருக்கு எதிராக கருத்துக்கள் இணையத்தை வட்டமிட்டு வருகின்றன.
![sussanne-khan-hrithik-roshan-cinemapettai](https://www.cinemapettai.com/wp-content/uploads/2021/08/sussanne-khan-hrithik-roshan-cinemapettai.jpg)