சமீபகாலமாக 40 வயதை தாண்டிய நடிகைகள் அனைவருமே இளம் வயதில் ஒரு நடிகரை உஷார் செய்து தன்னுடைய வாழ்க்கையை செம்மையாக என்ஜாய் செய்து வருகின்றனர். அதற்கு உதாரணமாக பாலிவுட் நடிகைகளை சொல்லலாம்.
தமிழ் சினிமாவில் ரட்சகன் படத்தின் மூலம் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றவர் தான் சுஷ்மிதா சென்(45). பிரபல தெலுங்கு நடிகையான இவர் ஹிந்தி சினிமாவில் நுழைந்து வேற லெவல் உயரத்திற்கு சென்றார்.
அதுமட்டுமல்லாமல் தமிழில் ஷங்கர் மற்றும் அர்ஜுன் கூட்டணியில் உருவான முதல்வன் படத்தில் ஷக்கலக்க பேபி என்ற பாடலுக்கு நடனம் ஆடினார். அதன் பிறகு பெரிதாக தமிழ் பக்கம் ஆர்வம் காட்டாத சுஷ்மிதா சென் ஹிந்தியில் செட்டிலானார்.
இந்நிலையில் சுஷ்மிதா சென்னுக்கு தற்போது 45 வயதைத் தாண்டிவிட்டது. இந்த வயதிலும் தன்னைவிட 15 வயது குறைவான ரெஹ்மான் ஷால் என்பவரை கடந்த சில வருடங்களாக காதலித்து வந்துள்ளார். இருவரும் சேர்ந்து கொண்டு சமூக வலைதளங்களில் யோகா செய்கிறேன் என்ற பெயரில் நெருக்கமான வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டைக் கிளப்பி வந்தனர்.
இந்நிலையில் சமீபத்தில் சுஷ்மிதா சென் மற்றும் ரெஹ்மான் ஷால் இருவருக்குமிடையே இருந்த காதல் முடிவுக்கு வந்ததாக செய்திகள் வெளிவந்துள்ளன. கடந்த சில மாதங்களாகவே இருவரும் மாறி மாறி தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒருவரை ஒருவர் கிண்டல் செய்தபடி போஸ்ட் வெளியிட்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வயதுதான் 45, ஆனால் இன்னமும் இளம் நடிகைகளுக்கு சவால் விடும் வகையில் படங்களில் நெருக்கமான காட்சிகளிலும் முத்தக் காட்சிகளில் நடித்து பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார் சுஷ்மிதா சென். சமீபத்திய பிரேக்கப்பை பார்த்து, ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் என்ற பழமொழி இவருக்கு சரியாக இருக்கும் என்கிறார்கள் சினிமா வாசிகள்.