வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

மன அழுத்தத்தில் சிக்கித் தவித்த ஐந்து 80ஸ் நடிகைகள்.. ரஜினி, கமல் தவறவிட்ட இரண்டு ஹீரோயின்

Actress Kanaga : ஒரு காலகட்டத்தில் சினிமாவில் கோலோச்சி இருந்த நடிகைகள் சில காரணங்களினால் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். அவ்வாறு 80, 90களில் சினிமாவை கலக்கிய நடிகைகள் தங்களது சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக மன அழுத்தத்தில் சிக்கி உள்ளனர். அதில் ஐந்து நடிகைகளை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

கனகா : கரகாட்டக்காரன் படத்தின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானவர் தான் கனகா. பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்த இவர் கலிபோர்னியாவை சேர்ந்த முத்துக்குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமணம் ஆன சில நாட்களிலேயே கனகாவின் கணவர் காணாமல் போன நிலையில் சினிமாவை விட்டு கனகா ஒதுங்கி விட்டார். இப்போது கனகா வீட்டை விட்டு வெளியே வராமல் தனிமையில் இருந்து வருகிறார்.

ஷோபா : குழந்தை நட்சத்திரமாகவே சினிமாவில் அறிமுகமான ஷோபா மலையாளம், தமிழ் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். தன்னுடைய 17 வயதினிலே பசி என்ற படத்தில் நடித்ததற்காக தேசிய விருதை பெற்றிருந்தார். இயக்குனர் பாலு மகேந்திராவை ஷோபா திருமணம் செய்து கொண்டார். மிகுந்த மன அழுத்தத்தில் இருந்த ஷோபா 1980 ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார்.

Also Read : கரகாட்டக்காரன் பட கனகாவா இது.? வெயிட் போட்டு ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போன புகைப்படம்

ஸ்ரீதேவி : தமிழ் மற்றும் பாலிவுட்டில் மிகவும் பேர் பெற்ற நடிகை தான் ஸ்ரீதேவி. ரஜினி மற்றும் கமல் என்று இரு நடிகர்களுடனும் அதிக படங்களில் ஜோடி போட்டு நடித்தார். அப்போது இந்த இரு நடிகர்களுடனும் கிசுகிசுக்கப்பட்டார். ஸ்ரீதேவியின் வாழ்க்கையில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது பிளாஸ்டிக் சர்ஜரி விவகாரம் தான். ஒவ்வொரு காலகட்டத்திலும் ஸ்ரீதேவியின் முகத்தோற்றத்தில் மாறுதல் ஏற்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து ஸ்ரீதேவி இதை மறுத்து வந்த போதும் இந்த சர்ச்சை முடிந்த பாடி இல்லை. அதோடு ஸ்ரீதேவியின் மரணமும் இப்போது வரை விடை தெரியாத புதிராக தான் இருக்கிறது.

சில்க் ஸ்மிதா : சில்க் படத்தில் நடிக்கிறார் என்றாலே போதும் அந்த படம் 90% ஹிட். அதுவும் ரஜினி, கமலின் படங்களில் ஒரு பாடலிலாவது நடனம் ஆடுவது வழக்கமாக இருந்தது. சில்க்கின் சொந்த வாழ்க்கையில் பல கசப்பான அனுபவங்கள் நிறைந்து இருந்தது. சிறுவயதிலேயே திருமணம் செய்து கொண்டு அந்த வாழ்க்கை சரியாக அமையாததால் சினிமாவிற்கு வந்தார். அப்போதும் ஒரு தாடிக்கார நடிகரால் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகி தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி வெளியானது.

மனிஷா கொய்ராலா : பம்பாய், இந்தியன், முதல்வன் என சூப்பர் ஹிட் படங்களில் நடித்தவர் தான் மனிஷா கொய்ராலா. இவர் சாம்ராட் தேகல் என்பவரை திருமணம் செய்து கொண்டு இரண்டே வருடத்தில் விவாகரத்து பெற்றார். இதனால் மிகுந்த மன வருத்தத்தில் இருந்து மதுக்கு அடிமையாகி இருந்தார். அதோடு மட்டுமல்லாமல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சை பெற்று மீண்டு வந்திருக்கிறார்.

Also Read : அழகுக்காக சர்ஜரி செய்து பொம்மை போல் மாறிய 5 நடிகைகள்.. ஆபத்தில் முடிந்த ஸ்ரீதேவியின் வாழ்க்கை

Trending News