வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

விடாமுயற்சியின் வில்லன் லிஸ்டில் இருக்கும் 5 நடிகர்கள்.. சிங்கத்தோட மோத சிறுத்தையை தேடும் மகிழ்

Actor Ajith: மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் தனது 42வது படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படம் குறித்த அப்டேட் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த சூழலில் விடாமுயற்சி படத்தில் வில்லனாக நடிக்க வாய்ப்பு அதிகம் உள்ள 5 நடிகர்களின் பெயர் வெளியாகி உள்ளது.

அரவிந்த்சாமி : பெண்களின் விருப்பமான ஹீரோவாக இருந்த அரவிந்த்சாமி ஜெயம் ரவியின் தனி ஒருவன் படத்தின் மூலம் வில்லன் அவதாரம் எடுத்தார். அதன் பிறகு செக்கச் சிவந்த வானம், போகன் படங்களிலும் வில்லன் பாத்திரத்தில் மிரட்டி இருந்தார். எனவே விடாமுயற்சி படத்தின் லிஸ்டிலும் அரவிந்த்சாமியின் பெயர் இடம் பெற்று இருக்கிறது.

Also Read : கண் சிமிட்டாமல் பெண்கள் சைட் அடிக்கும் 5 நடிகர்கள்.. மாப்பிள்ளை நா அது அரவிந்த்சாமி மாதிரி தான்

பகத் பாசில் : மலையாள சினிமாவில் மிகவும் பிரபலமான ஹீரோவான பகத் பாசில் சமீபகாலமாக தமிழ் படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் படத்தில் வில்லனாக மிரட்டி இருந்தார். மேலும் விக்ரம் படத்திலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இப்போது விடாமுயற்சி படத்தில் இவர் நடிக்க அதிக வாய்ப்பு இருக்கிறது.

எஸ்ஜே சூர்யா : இயக்குனர், ஹீரோ என பல அவதாரங்கள் எடுத்த எஸ் ஜே சூர்யா சமீபகாலமாக வில்லன் கதாபாத்திரங்களில் பின்னி பெடல் எடுத்து வருகிறார். அந்த வகையில் மெர்சல், மாநாடு போன்ற படங்களில் வில்லனாக நடித்திருந்தார். இந்நிலையில் விடாமுயற்சியில் அஜித்துக்கு வில்லனாக எஸ் ஜே சூர்யா நடித்தால் வேற லெவலில் இருக்கும்.

Also Read : எஸ்ஜே சூர்யாவுக்கு அடுத்தடுத்து குவியும் பட வாய்ப்பு.. பிரம்மாண்ட படத்தில் இணைந்த சம்பவம்

மிஷ்கின் : இயக்குனராக சில ஹிட் படங்களை கொடுத்த மிஷ்கின் தான் இயக்கிய படங்களில் நடிக்க தொடங்கினார். இப்போது விஜய்யின் லியோ படத்தில் வில்லனாக நடிக்கிறார். இப்போது மகிழ்திருமேனி அஜித்துக்கும் மிஷ்கினை வில்லனாகும் எண்ணத்தில் உள்ளாராம். ஆகையால் விடாமுயற்சியில் மிஷ்கின் நடிக்க அதிக வாய்ப்பு இருக்கிறது.

விஜய் சேதுபதி : கதாநாயகனாக கலக்கி வந்த விஜய் சேதுபதி இப்போது எந்த கதாபாத்திரம் கிடைத்தாலும் நடித்து வருகிறார். அதிலும் தமிழ் சினிமாவில் டாப் ஹீரோக்களான ரஜினி, விஜய், கமல் மூவருக்கும் வில்லனாக நடித்து விட்டார். ஆகையால் அஜித்துக்கும் வில்லனாக இவர் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் ரசிகர்கள் உள்ளனர்.

Also Read : விஜய் சேதுபதியால் அந்தரத்தில் நிற்கும் விடுதலை 2.. கூலாக வெறுப்பேற்றிய வெற்றிமாறன்

Trending News