சுந்தர் சி இயக்கத்தில், விஷால் நடிப்பில் 12 வருடங்களுக்கு முன்பு கிடப்பில் போடப்பட்ட மத கஜ ராஜா வரும் பொங்கலுக்கு வெளிவர உள்ளது.
இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக வரலட்சுமி சரத்குமார் மற்றும் அஞ்சலி நடித்துள்ளனர். இதைத் தவிர முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த 5 பேர் இந்த 12 வருடத்திற்குள் இறந்து விட்டனர்.
மணிவண்ணன், மனோபாலா, மயில்சாமி, சிட்டிபாபு, சீனு மோகன் ஆகிய 5 நடிகர்களும் தற்போது உயிரோடு இல்லை. இந்த படத்தில் விஷால் பாடிய பாடல் அப்போது Hit அடித்தது.
விஷாலுக்கு ஜோடியாக நடித்த முன்னாள் காதலி வரலட்சுமி சரத்குமாருக்கு சமீபத்தில் அவர் ஆண் நண்பருடன் திருமணமே முடிந்து விட்டது.
இப்படி இருக்கும் பட்சத்தில் விஷாலுக்கு இன்னும் சிங்கிளாகவே சுற்றித் திரிகிறார். 11 படங்களுடன் இந்த படமும் போட்டி போட்டு வெளியிட்டுள்ளனர். ஆனால் வருஷம் தாண்டியதால் எந்த அளவுக்கு வரவேற்பு இருக்கும் என்பதில் சந்தேகம் தான்.
சுந்தர் சி, சந்தானம் காம்போவை நம்பி ஒருவாட்டி போலாம் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் இந்தியன் 2 படத்திலும் இது போன்ற ஒரு அசம்பாவித சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.