வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

ஹோட்டல் முதலீட்டில் கல்லாவை நிரப்பும் 5 நடிகர்கள்.. டி-நகரிலேயே கடையை போட்ட 2 ஹீரோக்கள்

சினிமாவைப் பொருத்தவரை மார்க்கெட் உள்ள போது தான் அந்த நடிகர், நடிகைகள் சம்பாதித்துக் கொள்ள முடியும். மேலும் அவர்கள் சம்பாதித்ததை வேறு தொழில்களில் முதலீடு செய்து அதன் மூலமும் பலர் வருவாயை ஈட்டி வருகிறார்கள். அவ்வாறு ஹோட்டலில் முதலீடு செய்து கல்லாவை நிரப்பும் 5 நடிகர்களை தற்போது பார்க்கலாம்.

கருணாஸ் : நடிகர், இசையமைப்பாளர், அரசியல்வாதி என பல பரிமாணங்களைக் கொண்டவர் கருணாஸ். ஆரம்பத்தில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் மட்டும் நடித்து வந்த கருணாஸ் ஒரு சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். இந்நிலையில் சாலிகிராமத்தில் “karunas naan” என்ற ரெஸ்டாரன்ட் ஒன்றை கருணாஸ் நடத்திவருகிறார்.

ஆர்கே சுரேஷ் : பிரபல தயாரிப்பாளரான ஆர்கே சுரேஷ் தற்போது நடிகராகவும் கலக்கி வருகிறார். இவர் சினிமாவை தாண்டி அரசியலிலும் தனது பங்களிப்பை அளித்து வருகிறார். இந்நிலையில் ஆர்கே சுரேஷ் சென்னையில் உள்ள கேகே நகரில் “வாங்க சாப்பிடலாம்” என்ற ஹோட்டலை நடத்தி வருகிறார்.

ஆர்யா : தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை பிடித்துள்ளார் நடிகர் ஆர்யா. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான சார்பட்டா பரம்பரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்நிலையில் ஆர்யாவும் “sea shell” என்ற உணவகத்தை நடத்தி வருகிறார். இந்த ஹோட்டல் சென்னை அண்ணா நகரில் அமைந்துள்ளது.

சூரி : நகைச்சுவை நடிகராக வலம் வந்த சூரி தற்போது வெற்றிமாறனின் விடுதலை படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாக உள்ளார். இவர் டிநகரில் “அம்மன்” என்ற ஹோட்டலை நடத்தி வருகிறார். சமீபத்தில்தான் அமைச்சர் முன்னிலையில் இந்த உணவகத்தை சூரி தொடங்கினார்.

ஜீவா : தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர் நடிகர் ஜீவா. தற்போது கோல்மால், காபி வித் காதல் போன்ற படங்களில் ஜீவா நடித்து வருகிறார். சினிமாவைத் தாண்டி ஜீவா வேறு தொழில்களில் முதலீடு செய்து வருகிறார். அந்தவகையில் “One mb” என்ற ரெஸ்டாரண்டை டி- நகரில் நடத்தி வருகிறார்.

Trending News