வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

அரசியல் பிளானோடு காத்திருக்கும் 5 நடிகர்கள்.. 2026 தேர்தலை நோக்கி நகரும் தளபதி

Thalapathy Vijay: சினிமாவில் நடிகர்கள் ஓரளவுக்கு புகழ் பெற்று விட்டாலே அவருடைய ரசிகர்கள் அடுத்த அந்த நடிகரை அரசியலுக்கு தான் அழைப்பார்கள். சினிமாவையும் அரசியலையும் மக்கள் ஒன்றாக பார்ப்பது தான் இதற்கு காரணம். இப்போதைய முன்னணி நடிகர்களில் இந்த ஐந்து பெயர் அரசியல் பிளானோடு இருக்கிறார்கள்.

விஜய்: நடிகர் விஜய் அரசியலுக்கு வரப்போவது கிட்டத்தட்ட 90 சதவீதம் உறுதியான ஒன்றுதான் அவருடைய ஒவ்வொரு அரசியலை நோக்கி தான் இருக்கிறது. வரும் 2026 ஆம் ஆண்டு நடக்க இருக்கும் தேர்தலில் விஜய் போட்டியிட இருக்கிறார். அதற்காக தான் தன்னுடைய கட்சி நிர்வாகிகளை ஆயத்தப்படுத்தி கொண்டு இருக்கிறார். விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பூத் கமிட்டி அமைக்கும் பணிகளும் தொடங்கிவிட்டதாக சொல்லப்படுகிறது.

தனுஷ்: சினிமாவில் ஹீரோவாக தனுஷ் அறிமுகமான போது சந்திக்காத எதிர்மறை விமர்சனங்களே இல்லை. அதையும் தாண்டி, இன்று ஹாலிவுட் வரை நடித்துக் கொண்டிருக்கிறார். தனுஷின் அசுர வளர்ச்சி என்பது அவருடைய கடின உழைப்புக்கான பரிசாகும். தனுசுக்கும் அரசியலில் வர மிகப் பெரிய பிளான் இருக்கிறது. திட்டமிட்ட காலத்தில் அவருடைய அரசியல் நகர்வுகள் இருக்கும் என சொல்லப்படுகிறது.

Also Read: முன்னணி ஹீரோக்களின் 25வது படங்கள்.. இந்த விஷயத்தில் விஜய்யை முந்திய அஜித்

ஜி வி பிரகாஷ்: இசை அமைப்பாளராக இருந்து ஹீரோவாக ஆனவர் தான் ஜிவி பிரகாஷ். இவர் நிஜ வாழ்க்கையிலும் ஹீரோவாக தான் இருக்கிறார். சமூகத்தில் நடக்கும் நிறைய பிரச்சினைகளுக்கு இவர் குரல் கொடுத்து இருக்கிறார். முன்னணி நடிகர்களே பேச தயங்கும் நிறைய விஷயங்களை அது அரசுக்கு எதிரானதாக இருந்தாலும் பேச அவர் தயங்கியதே இல்லை.

சித்தார்த்: நடிகர் சித்தார்த் தென் இந்திய சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கிறா.ர் சமூகப் பிரச்சனைகளுக்கு தைரியமாக குரல் கொடுப்பவர்களில் முக்கியமானவர். மத்திய அரசை எதிர்த்து ஆளும் கட்சியை எதிர்த்து நிறைய சமூக நீதிகளுக்காக இன்று வரை குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார். இதனால் இவர் அரசியலுக்கு வர வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

பிரகாஷ்ராஜ்: நடிகர் பிரகாஷ்ராஜ் கர்நாடகா அரசியலில் முக்கிய புள்ளியாக இருக்கிறார். தேர்தலிலும் போட்டியிட்டு இருக்கிறார். நிறைய சமூக நீதிப் பிரச்சனைகளுக்கு குரல் எழுப்பி இருக்கிறார். சாதி மற்றும் மத அரசியலுக்கு எதிராக தன்னுடைய கண்டனங்களை தைரியமாக தெரிவிக்கக் கூடிய நடிகர் இவர். கண்டிப்பாக கர்நாடகா அரசியலில் முக்கியமான இடத்தையும் எதிர்காலத்தில் பெறுவார்.

Also Read:விஜய்க்கு அஜித் சப்போர்ட் கண்டிப்பாக வேணும்.. சர்ச்சையை கிளப்பிய தயாரிப்பாளர்!

Trending News