வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

எப்படியாவது தலைவர் ரஜினி கூட நடிக்கணும்.. வரிஞ்சு கட்டி வந்த 5 நடிகர்கள் ?

5 Actors Interested to act with Rajini: ரஜினி அவருடைய 72 வயதிலும் ஹீரோவாக நடித்து உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக கொடி கட்டி பறந்து வருகிறார். இந்த ஒரு விஷயம் சினிமாவை பொறுத்தவரை சாதாரணமானது கிடையாது. அதுவும் ஆட்டநாயகனாகவும், வசூல் மன்னனாகவும் சாதனை பெற்று வருகிறார். அப்படிப்பட்ட இவருடன் சேர்ந்து எப்படியாவது ஒரு படத்துலயாவது நடிச்சாக வேண்டும் என்று வரிஞ்சு கட்டிட்டு 5 நடிகர்கள் வந்தார்கள்.

ஆனால் கடைசிவரை அவருடைய ஆசை நிராசையாகவே போய்விட்டது. அப்படி ரஜினியுடன் சேர்ந்து நடிக்க ஆசைப்பட்ட நடிகர்களையும், கேரக்டர்களையும் பற்றி தற்போது பார்க்கலாம். அந்த வகையில் ரஜினியின் வெறித்தனமான ரசிகர்களில் ஒருவராக நடிகர் வைபவ் எப்படியாவது தலைவருடன் சேர்ந்து ஒரு படத்தில்யாவது நடித்து விட வேண்டும் என்ற ஆசையில் இருந்தார்.

அந்த நேரத்தில் ரஜினி நடிப்பில் வெளிவந்த காலா படத்தில் அவருடைய மகனாக நடிக்கும் வாய்ப்பு வந்தது. ஆனால் ரஜினி இந்த கேரக்டருக்கு இவர் சரிப்பட்டு வர மாட்டார் என்று வேண்டாம் என மறுத்துவிட்டார். அதன் பிறகு பேட்ட படத்தில் வில்லன் கேரக்டருக்கு பாபி சிம்ஹா நடிக்கப் போவதாக இருந்தது. ஆனால் இவரை விட இந்த கேரக்டரில் விஜய் சேதுபதி நடித்தால் கச்சிதமாக இருக்கும் என்று ரஜினி தனிப்பட்ட முறையில் ஆசைப்பட்டார்.

Also read: ரஜினி, கமல் தொட கூட பயப்படும் பயோபிக்-கில் நடிக்கும் தனுஷ்.. தேசிய விருது ஆசை கைக்கூடுமா.?

அதனாலேயே பாபி சிம்ஹாக்கு கிடைத்த வாய்ப்பு கைவிட்டு போனது. அடுத்ததாக ஜெயிலர் படத்தில் ரஜினியின் மகன் கேரக்டரில் ஆரம்பத்தில் ஜெய் நடிப்பதாக பேச்சுவார்த்தைகள் நடைபெற்றது. ஏற்கனவே ஜெய் பட வாய்ப்பு எதுவும் இல்லாததால் அவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்தால் அடுத்தடுத்து இவருடைய மார்க்கெட் ஏறுவதற்கு வாய்ப்பாக அமைந்திருக்கும்.

அதே நேரத்தில் ரஜினியின் மகனாக நடித்தால் அடுத்து ஹீரோ வாய்ப்பு போய்விடும் என்ற ஒரு காரணத்திற்காக ரஜினியை இவரை வேண்டாம் என்று ஒதுக்கி விட்டார். அடுத்தபடியாக சிவகார்த்திகேயன் தன்னை ஒரு ரஜினி ரசிகர் என்று பல மேடைகளில் கூறியிருக்கிறார். அப்படிப்பட்ட இவருக்கு ஜெயிலர் படத்தில் நெகட்டிவ் கேரக்டரில் நடிப்பதற்கு வாய்ப்பு வந்தது.

ஆனால் சிவகார்த்திகேயன் தற்போது ஹீரோவாக நடித்துக் கொண்டிருப்பதால் நெகட்டிவ் கேரக்டரில் நடித்தால் தன்னுடைய இமேஜ் போய்விடும் என்ற காரணத்திற்காக வந்த வாய்ப்பை மறுத்திருக்கிறார். அதற்கு பதிலாக வேற கேரக்டர் இருந்தா சொல்லுங்கள் நான் தலைவர் படத்தில் நடிக்கிறேன் என்று கூறியிருக்கிறார். இவர்களை தொடர்ந்து தனுசுக்கும் நீண்ட நாள் கனவாக இருப்பது ரஜினி படத்தில் நடித்து விட வேண்டும் என்பதுதான். அந்த வகையில் இவரோட ஆசையும் இப்பொழுது வரை நிறைவேறாமல் போய்விட்டது.

Also read: வில்லாதி வில்லனாக வேட்டையாட போகும் ரஜினி.. லோகேஷ்க்கு கொடுத்த ஆறு மாசம் கெடு என்ன தெரியுமா.?

Trending News