புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

விஜயகாந்துக்கு இறுதி மரியாதையை செலுத்த வராத 5 நடிகர்கள்.. ஒரே ஊர்ல இருந்துட்டு எட்டிப் பார்க்காத துரோகி

5 Actors not come last respect to Vijaykanth:  தமிழ் சினிமாவில் நடிக்கும் சக கலைஞர்களுக்கு மரியாதை கொடுக்கும் உத்தமமான மனிதர் விஜயகாந்த். அத்துடன் சின்ன நடிகர்கள் முதல் பெரிய நடிகர்கள் வரை ஒரே மாதிரி பார்த்து அவர்களுக்கு வரவேற்பு கொடுக்கும் தங்கமான மனசு. தயாரிப்பாளர் சங்கத்தின் பொறுப்பில் இருந்து கடனை அடைக்க பாடுபட்ட நல்ல தலைவர்.

நல்ல கதாபாத்திரங்களை மட்டுமே நடித்து மக்களுக்கு சமூக விழிப்புணர்வை ஏற்படுத்துவேன் என்று தேர்ந்தெடுத்து நடித்து மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தவர். இப்படி இவரைப் பற்றி விஷயங்கள் அடுக்கிக் கொண்டே போகலாம். ஆனால் அப்படிப்பட்டவர் தற்போது நம்முடன் இல்லை என்கிற ஒரு விஷயத்தை மனது ஏற்க மறுக்கிறது.

ஆனாலும் இவரை கடைசி ஒரு தடவையாவது பார்த்து விட வேண்டும் என்று தமிழ்நாடு மக்கள் அனைவரும் ஏக்கத்துடன் இருக்கிறார்கள். இதற்கு இடையில் இவருடன் நடித்த அனைத்து கலைஞர்களுமே விஜயகாந்தின் இறுதி அஞ்சலிக்கு மரியாதை செலுத்தி வந்திருக்கிறார்கள். ஆனால் சில நடிகர்கள் படப்பிடிப்புக்காக வெளிநாட்டில் மாட்டிக் கொண்டதால் அவர்களால் நேரில் அஞ்சலி செலுத்த வர முடியாமல் போய்விட்டது.

Also read: ஏவிஎம் கூட்டணியில் கேப்டன் வெற்றி கண்ட 4 படங்கள்.. ஆக்ரோஷமான நடிப்பை வெளிக்காட்டிய விஜயகாந்த்

இந்நிலையில் சில நடிகர்கள் விஜயகாந்தை பற்றி பேசி கண்ணீர் அஞ்சலி செலுத்தி வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள். மேலும் அஜித் விடாமுயற்சி படப்பிடிப்புக்காக துபாயில் இருப்பதால் விஜயகாந்தின் மனைவி மகனுடன் போன் மூலமாக பேசி ஆறுதல் சொல்லி இருக்கிறார். இவரால் நேரில் வர முடியாமல் போய்விட்டது. அதேபோல சிம்புவும் துபாயில் மாட்டிக் கொண்டார்.

அதற்கு பதிலாக இவருடைய அப்பாவிற்கு ஃபோன் பண்ணி கண்டிப்பாக நீங்கள் போக வேண்டும் என்று அனுப்பி வைத்திருக்கிறார். அடுத்து தனுஷ் ஜெர்மனியில் இருக்கிறார், கார்த்தி ஆஸ்திரேலியாவில் படப்பிடிப்புக்காக இருக்கிறார். இப்படி இந்த நான்கு நடிகர்களும் வெளிநாட்டில் இருப்பதால் வர முடியாமல் போய்விட்டது. ஆனால் உள்ளூரில் ஒரே ஊரில் இருந்து கொண்டே வடிவேலு வராமல் இருப்பது தான் ரொம்பவும் கேவலமாக இருக்கிறது.

வடிவேலுவை ஆரம்பத்தில் கை கொடுத்து தூக்கி விட்டு பெரிய ஆளாக்கி அழகு பார்த்ததே விஜயகாந்த் தான். அதன்பின் இவர்களுக்குள் ஏற்பட்ட மனக்கசப்பு எவ்வளவு தான் இருந்தாலும், இந்த சமயத்துல கூட எட்டிப் பார்க்க வரமுடியாத துரோகியாக போய்விட்டார். இந்த ஒரு விஷயத்திலேயே வடிவேலுவின் வன்மம் எந்த அளவுக்கு இருக்கிறது என்பது அப்பட்டமாக தெரிந்து விட்டது.

Also read: கேப்டன் திரையில் மறைந்து அழ வைத்த 5 படங்கள்.. தூக்குமேடையை புன்னகையோடு ஏற்று கொண்ட ரமணா

Trending News