குதிரை மாதிரி விழுந்து எழுந்திருத்து ஓடும் 5 நடிகர்கள்.. கோடிகளில் கடன் இருந்தும் அசராத சிவகார்த்திகேயன்

5 Actors Who Lost: ஆசை யாரை விட்டது என்று சொல்வதற்கு ஏற்ப ஒவ்வொரு நிலைமையிலும் ஆசை பேராசையாக தான் மாறிக்கொண்டே இருக்கும். அந்த வகையில் ஆசைக்கு முற்றுப்புள்ளி கிடையாது என்று சினிமா பிரபலங்களில் சிலர் தன்னுடைய அடுத்த கட்ட ஸ்டெப்பை எடுத்து வைப்பதற்காக அகல காலை வைத்திருக்கிறார்கள். அப்படி இருக்கும் பட்சத்தில் தொடர்ந்து நஷ்டப்பட்டு கடனாளியாகி இருக்கிறார்கள். அவர்களைப் பற்றி தற்போது பார்க்கலாம்.

தனுஷ்: பொதுவாக இவர் நடிக்கும் படங்களை விட அந்தப் படங்களில் இருக்கும் ஒரு பாடல் எப்படியாவது சூப்பர் டூப்பர் ஹிட் ஆகி உலகளவில் மாஸ் காட்டி விடுவார். அந்த வகையில் ரவுடி பேபி, ஒய் திஸ் கொலவெறி போன்ற சில பாடல்கள் மில்லியன் தாண்டி பில்லியன் கணக்கில் பார்வையாளர்களை கவர்ந்திருக்கிறது. அந்த வகையில் இவருடைய வொண்டர் பார் கம்பெனியை ஆரம்பித்து அதன் மூலம் பாடல்களை வெளியிட்டார். ஆனால் அது யாரோ ஹேக் செய்து, பாடல்கள் அனைத்தையும் டெலிட் செய்து விட்டார்கள். இதனால் பல கோடியில் நஷ்டம் அடைந்து போனார். ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் வந்து விட்டார்.

சிவகார்த்திகேயன்: சினிமாவிற்கு நுழைந்த சில வருடத்திலேயே ஹீரோவாக ஜொலித்து தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக இடம் பிடித்து விட்டார். ஆனால் இவர் நடிப்பில் வெளிவந்த பிரின்ஸ் திரைப்படம் படுதோல்வி அடைந்தது நஷ்டம் ஆகிவிட்டது. அதனால் தயாரிப்பாளருக்கும் விநியோகத்திற்கும் சிவகார்த்திகேயன் 50% நஷ்டத்தை ஏற்றுக் கொண்டு கடனாளியாகிவிட்டார். ஆனாலும் இதற்கெல்லாம் அசராமல் தொடர்ந்து வெற்றிக்காக போராடி வருகிறார்.

Also read: தனுசுக்கே தண்ணி காட்ட வரும் சிவகார்த்திகேயன்.. கேப்டனுக்கு ஏற்பட்டுள்ள பெரும் சிக்கல்

விஷால்: ஆரம்பத்தில் இவர் நடித்த படங்களுக்கு மக்களிடமிருந்து ஆதரவு கிடைத்தது. ஆனால் போகப் போக இவர் நடிக்கும் படங்கள் அனைத்தும் ஒரே மாதிரியாகவும் பெருசா பார்ப்பதற்கு விருப்பம் இல்லாத மாதிரி ஆகிவிட்டது. அப்பொழுது இவர் நடிப்பில் வெளிவந்த லத்தி, எனிமி படங்கள் பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டதால் அதிக கடன் சுமையை ஏற்கும் நிலைமைக்கு இவர் தள்ளப்பட்டு விட்டார். ஆனாலும் சமீபத்தில் வெளிவந்த மார்க் ஆண்டனி படம் மிகப்பெரிய வெற்றியைத் தேடிக் கொடுத்திருக்கிறது.

விக்ரம்: வேலைன்னு வந்து விட்டால் வெள்ளைக்காரன் போல இறங்க வேண்டும் என்று சொல்வார்கள். அது போல விக்ரமுக்கு நடிப்பு என்றால் அதில் வெளுத்து வாங்கணும் என்பதற்காக உடலையும் தோற்றத்தையும் வருத்திக் கொண்டு நடிக்கக் கூடியவர். அதனால் பல பாராட்டுகளையும் விருதுகளையும் பெற்றார். ஆனால் சமீப காலமாக இவரால் வெற்றிய ருசித்துப் பார்க்க முடியவில்லை. அந்த வரிசையில் இவர் நடிப்பில் வெளிவந்த கோப்ரா படம் மிகப்பெரிய தோல்வியை கொடுத்து கடனில் சிக்கும்படியாக அமைந்துவிட்டது.

விஜய் ஆண்டனி: இசையமைப்பாளராக இருந்தாலும் ஹீரோவாகவும் ஜெயிக்க முடியும் என்று நிரூபித்துக் காட்டியவர். இவருடைய எதார்த்தமான கதையால் பிச்சைக்காரன் படம் மிகப்பெரிய ஹிட் ஆனது. அதனால் பிச்சைக்காரன் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி, எழுதி, அவரை ஹீரோவாக நடித்து தயாரிக்கவும் செய்தார். இப்படி அகல காலை வைத்ததால் இவருடைய கேரியரில் மிக தோல்வி படமாக அமைந்து கடனில் தத்தளிக்கும் அளவிற்கு முடிந்து போய்விட்டது.

இப்படி இவர்கள் அனைவரும் எந்த அளவிற்கு சில சமயங்களில் அடிப்பட்டு விழுந்து இருந்தாலும், உடனே குதிரை மாதிரி எழுந்து ஓடி வெற்றியை நோக்கி பயணித்து வருகிறார்கள்.

Also read: விஜய் ஆண்டனிக்கு நெருக்கடி கொடுத்தா இறுகப்பற்று.? ரத்தம் தெறித்த முதல் நாள் வசூல் விவரம்