திங்கட்கிழமை, டிசம்பர் 16, 2024

அந்தந்த மாநிலங்களில் காமெடியில் கலக்கிய 5 நடிகர்கள்..தமிழிலும் பட்டையை கிளப்பிய தெலுங்கு காமெடியன்

சினிமாவில் படம் எடுப்பதின் முக்கிய காரணம் ரசிகர்களுக்கு 3 மணி நேரம் நல்ல பொழுதுபோக்கு கொண்ட படத்தை தரவேண்டும் என்பதுதான். தொழில் பிரச்சினை மற்றும் குடும்ப பிரச்சினை உள்ளவர்களுக்கு சினிமா ஒரு மன ஆறுதலாக உள்ளது. அதிலும் வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டுப் போகும் என்பார்கள். அவ்வாறு ஒவ்வொரு மொழி படங்களிலும் சில நடிகர்கள் காமெடியில் புகுந்து விளையாடுவார்கள். அவ்வாறு 5 மாநிலங்களில் ரசிகர்கள் கொண்டாடும் 5 காமெடி நடிகர்களை பார்க்கலாம்.

வடிவேலு : தமிழ்சினிமாவில் கொடிகட்டி பறந்த நகைச்சுவை நடிகர் வைகை புயல் வடிவேலு. பொதுவாக எந்த ஒரு விஷயத்தை எடுத்துக் கொண்டாலும் முதலில் மீம்ஸ் கிரியேட்டர்ஸக்கு ஞாபகம் வருவது வடிவேலுவின் காமெடி தான். தற்போது வடிவேலுவின் ரெக்கார்ட் தடை நீங்கி மீண்டும் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

பிரம்மானந்தம் : தெலுங்கு சினிமாவில் பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் பிரம்மானந்தம். இவர் அதிகப் படங்களில் நடித்ததற்காக கின்னஸ் சாதனையையும் பெற்றுள்ளார். இவர் தமிழிலும் பல படங்களில் நடித்துள்ளார். மொழி, பயணம், லிங்கா, அஞ்சான் போன்ற படங்களில் பிரம்மானந்தம் நடித்துள்ளார்.

ஸ்ரீனிவாசன் : மலையாள திரையுலகில் காமெடி ஜாம்பவானாக வலம் வருபவர் சீனிவாசன். இவர் இயக்குனர், எழுத்தாளர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவர். இவர் கிட்டத்தட்ட 225 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இவர் தமிழில் லேசா லேசா படத்தில் பாண்டி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

சாது கோகிலா : கன்னட சினிமாவில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், இசைக்கலைஞர் என பன்முகத்தன்மை கொண்டவர் சாது கோகிலா. அதுமட்டுமல்லாமல் திரைக்கதை எழுத்தாளராகவும், பாடலாசிரியராகவும் பணியாற்றியுள்ளார். இவர் பெரும்பாலான படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் சிறந்த காமெடியன் என பல விருதுகளையும் பெற்றுள்ளார்.

ஜானி லீவர் : பாலிவுட் சினிமாவில் புகழ்பெற்ற காமெடி நடிகர் ஜானி லீவர். இவர் சிறந்த நகைச்சுவை நடிகருக்கான பிலிம்பேர் விருதை மூன்று முறை பெற்றுள்ளார். மேலும், இவர் கிட்டத்தட்ட 300 க்கும் மேற்பட்ட ஹிந்தி படங்களில் நடித்துள்ளார். வெள்ளித்திரை மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் இவரது பங்களிப்பு இருந்துள்ளது.

- Advertisement -

Trending News