வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

இமேஜ் பார்க்காமல் வாயை புண்ணாக்கி கொண்ட 5 பிரபலங்கள்.. விஷாலை பொறுக்கியாக்கிய மிஸ்கின்

5 Celebrites: எனக்கு நான் தான் ராஜா, எனக்கு நான் தான் மந்திரி என எதற்கும் கவலைப்படாது தன் கருத்தை வெளிப்படுத்தியே தீர வேண்டும் என்பதற்கு எந்த லெவலுக்கும் இறங்கி அலசி பார்க்க தயாரான 5 பிரபலங்களை பற்றி இத்தொகுப்பில் காண்போம்.

மிஸ்கின் தயாரிப்பில் விஷால் நடிப்பில் வெற்றி கண்ட படம் தான் துப்பறிவாளன். இப்பட வெற்றிக்கு பிறகு விஷாலுக்கு எந்த படமும் கை கொடுக்காத நிலையில், தற்போது இப்படத்தின் பாகம் 2வை மேற்கொண்டு வருகிறார். இப்படத்தை தானே இயக்கப் போவதாகவும், தயாரிக்கப் போவதாகவும் கூறிய இவரின் நடவடிக்கை குறித்து, மிஸ்கின் கருத்தை தெரிவித்தார்.

Also Read: 2வது முறையும் அவருடன் பாடும் வாய்ப்பை இழந்த ரஜினிகாந்த்.. ஒத்திகை பார்க்கும் பொழுது ஏற்பட்ட சங்கடம்

அதுவும் வெளிப்படையாக அவன் பொறுக்கி அவன் கூடலாம் வேலை பார்க்க முடியாது சார் என பப்ளிக்காய் போட்டு உடைத்தார். அதன் பின் தன் தவறை உணர்ந்து இது போன்ற எமோஷன் ஆன பேச்சுக்களை தவிர்க்க வேண்டும் என ஒப்புக்கொண்டார். இவரைத் தொடர்ந்து வடிவேலு, அவரிடம் எவ்வளவு திறமை இருக்கிறதோ அதே அளவிற்கு ஈகோவும் இருக்கிறது. என்னுடைய காமெடியால் தான் படம் ஓடுகிறது, படம் வெற்றி பெறுகிறது எனவும் தனக்குள் இருக்கும் கர்வத்தை வெளிக்காட்டி பல வாய்ப்புகளை தவற விட்டார்.

மேலும் அவற்றை வெளிப்படையாக பேசியும் இருக்கிறார். இவரைத் தொடர்ந்து மன்சூர் அலிகான், தன் மனதில் தோன்றும் எண்ணத்திற்கு, முரண்பாடாக இருக்கும் எந்த ஒரு செயலையும் செய்ய விருப்பப்பட மாட்டார். அதை பப்ளிக்காகவே போட்டு உடைத்து தன் எதிர்ப்பை தெரிவிக்கும் தன்மை கொண்டவர்.

Also Read: மெர்சலில் பற்ற வைத்த நெருப்பு.. ரிலீசுக்கு முன்பே தயாரிப்பாளர்களின் கல்லாவை நிரப்பிய தளபதியின் 6 படங்கள்

இவரைத் தொடர்ந்து பழம்பெரும் நடிகரான ராதா ரவி, தன் அப்பாவின் செல்வாக்கில் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பினை பெற்ற இவர் மீது பல புகார்களை முன்வைத்து வருகின்றனர். எதையும் வெளிப்படையாக பேசும் தன்மை கொண்டு முகத்திற்கு நேராய் பேசி பல இடங்களில் மாட்டிக்கொண்டு வருகிறார்.

இவரைத் தொடர்ந்து 80, 90 காலகட்டத்தில் தொடர் ஹிட் படங்களை கொடுத்தவர் தான் ராமராஜன். அவ்வாறு இருக்க, சினிமாவிற்கு இடைவெளி விட்டு காணப்படும் இவர் 14 வருடத்திற்கு பிறகு சமீபத்தில் படம் ஒன்றை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. இப்படத்தில் இவர் ஏற்க இருக்கும் கதாபாத்திரம் குறித்து சில பிரச்சனை வந்ததாக கூறப்படுகிறது. அதற்கு தன் கருத்தை வெளிப்படையாக முன் வைத்து சர்ச்சையில் சிக்கினார்.

Also Read: தம்பிகள் சீசனில் படையெடுக்கும் 5 ஹீரோக்கள் .. லியோவில் நடிப்பு அரக்கனின் தம்பியை களம் இறக்கும் லோகேஷ்

Trending News