வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

கொடூர வில்லனாக நடித்து காமெடி பீஸ்ஸாக மாறிய 5 நடிகர்கள்.. மொட்ட ராஜேந்திரனை ஓட ஓட விரட்டிய விஜய்

5 Villains turned Comedian: ஒரு படம் மக்களிடம் ரீச் ஆக வேண்டும் என்றால் எந்த அளவிற்கு ஹீரோ ஹீரோயின்கள் முக்கியமோ அதற்கு இணையாக அந்த படத்தில் ஒரு வில்லன் அமைந்தால் செம ஹிட்டு ஆகிவிடும். அந்த அளவிற்கு வில்லன் கதாபாத்திரம் ரொம்பவே முக்கியமானதாக கருதப்படுகிறது. அப்படி சினிமாவிற்குள் நுழைந்த ஆரம்ப கட்டத்தில் கொடூர வில்லனாக நடித்து போகப் போக காமெடி பீஸ்ஸாக சில வில்லன்கள் மாறியிருக்கிறார்கள். அவர்கள் யார் என்று தற்போது பார்க்கலாம்.

ஆனந்த் ராஜ்: 90 இல் சினிமாவிற்கு நுழைந்த இவர் ஆரம்பத்தில் கிடைக்கிற கதாபாத்திரங்களில் நடித்தும் குணச்சித்திர நடிகராகவும் நடிக்க ஆரம்பித்தார். அதன் பின் கிடைத்த வில்லன் கதாபாத்திரம் இவருக்கு மிகக் கச்சிதமாக பொருந்தியதால் தொடர்ந்து வில்லனாகவே பல படங்களில் நடித்து 90ஸ் கிட்சை நடுங்கும் அளவிற்கு பயமுறுத்து இருக்கிறார். அதுவும் இவருடைய ஃபேமஸ் டயலாக் “தாமிரபரணியில் தலைமுழுக” இதை மறக்கவே முடியாது. இதனை தொடர்ந்து தற்போது நகைச்சுவை நடிகராகவும் இவருடைய பங்களிப்பை கொடுத்து வருகிறார்.

மொட்டை ராஜேந்திரன்: இவர் ஆரம்பத்தில் பிதாமகன் படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார். அதன் பின் நான் கடவுள் படத்தில் ஒரு கொடூர தலைவராக வில்லத்தனத்தை காட்டியிருப்பார். இந்த வில்லன் கேரக்டரில் இவருடைய நடிப்பை பார்த்து பலரும் பாராட்டும் வகையில் மிரட்டி இருப்பார். பின்பு பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் வில்லத்தனமாக நகைச்சுவையை காட்டி இருப்பார். இதனை தொடர்ந்து வில்லன் என்கிற முகத்திரையை அகற்றி காமெடி நடிகராக பல படங்களில் நடிக்க ஆரம்பித்து விட்டார். அதிலும் பைரவா படத்தில் இவரை விஜய் ஓட ஓட விரட்டி அடித்து இருப்பார். அந்த அளவிற்கு சரியான ஒரு காமெடி பீஸ்.

Also read: மணிவண்ணன், ரகுவரன் இறப்பின் பின்னணி.. மதுபோதையால் உயிர் பிரியல, அதிர்ச்சி தந்த ரிப்போர்ட்

சென்ராயன்: பொல்லாதவன் படத்தில் தனுஷின் பைக் திருடராக சினிமாவிற்குள் அறிமுகமானார். அதன் பின் சிலம்பாட்டம், ஆடுகளம், ரௌத்திரம் போன்ற பல படங்களில் நடித்து வந்த இவர் மூடர்கூடம் என்கிற படத்தில் நடித்ததன் மூலம் பரிச்சயமானவராக மாறிவிட்டார். அதன் பின் ஒரு காமெடி நடிகராக வந்து விடலாம் என்று பல படங்களில் போராடி நடித்துக் கொண்டு வருகிறார்.

மணிவண்ணன்: சிறந்த இயக்குனராகவும், காமெடி மற்றும் வில்லனாகவும் தமிழ் சினிமாவில் இவருக்கான முத்திரையை பதித்திருக்கிறார். முக்கியமாக வில்லன் கதாபாத்திரத்தில் பொருந்தக்கூடிய அளவிற்கு ஆசைத்தம்பி, சேனாதிபதி, கொடி பறக்குது, எட்டுப்பட்டி ராசா, தாய்மாமன் போன்ற படங்களில் வில்லத்தனத்தை காட்டி இருப்பார். அதே மாதிரி முக்கால்வாசி படங்களில் காமெடியனாகவும் குணச்சித்திர நடிகர் ஆகவும் நடித்து பெயர் பெற்றிருக்கிறார்.

மன்சூர் அலிகான்: 90களில் பல படங்களில் மன்சூர் அலிகான் கொடூர வில்லனாகவும், முரட்டுத்தனமாகவும் நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். முக்கியமாக கிரிமினல் கேரக்டரை இவரைப்போல் யாரும் நடிக்க முடியாத அளவிற்கு பக்கா ரவுடியாகவும் 90s கிட்ஸ் மனதில் பயத்தை ஏற்படுத்தி இருக்கிறார். அப்படி இவர் வில்லனாக நடித்த படங்கள் எக்கச்சக்கமாக இருந்தாலும் மறக்க முடியாத படங்கள் ருத்ரா, கேப்டன், பிரபாகரன், நாளைய தீர்ப்பு, செம்பருத்தி, நட்புக்காக போன்ற படங்களை குறிப்பிடலாம். அதன் பின் போகப்போக ஒரு காமெடியனாகவும் நடிக்க ஆரம்பித்து விட்டார்.

Also read: அவர் பாணியில் மன்னிப்பு கேட்ட மன்சூர்.. குதர்க்கமாக குத்தி காமிச்ச திரிஷாவின் சேட்டை

Trending News