வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

2022ஆம் ஆண்டில் குழந்தை குட்டியுமாக மாறிய 5 நடிகைகள்.. சர்ச்சைக்குள்ளான நயன்தாராவின் வாடகைத்தாய் ட்வின்ஸ் பேபி

இந்த வருடம் இந்திய நடிகைகள் பலரும் திருமணம் செய்துக்கொண்டு தங்களது வாழ்வை கணவருடனும் குழந்தையுடனும் வாழ்ந்து வருகின்றனர். அப்படி திருமணமான நடிகைகளில் பலருக்கும் இந்த வருடம் குழந்தை பிறந்துள்ளது. அப்படிப்பட்ட 5 நடிகைகளை பற்றி தற்போது பார்க்கலாம்.

காஜல் அகர்வால்: காஜல் அகர்வால் 2020 ஆம் ஆண்டு கவுதம் கிச்சுலு என்பவரை திருமணம் செய்த நிலையில் இந்த வருடம் ஏப்ரலில் நீல் என்ற ஆன் குழந்தையை பெற்றெடுத்தார். குழந்தை பிறந்த சில மாதங்களிலேயே காஜல் அகர்வால் தன் கர்ப்பகாலத்தில் 3 குழந்தைகள் தனது வயிற்றில் இருந்த நிலையில் 2 குழந்தைகள் உயிரிழந்து விட்டதாக கூறினார். இந்த செய்தி தீயாய் பரவிய நிலையில் காஜல் அகர்வாலின் தைரியரத்திற்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்தனர்.

Also Read: அழகிய குழந்தைக்கு தாயான நடிகை காஜல் அகர்வால்.. சந்தோஷத்துடன் செய்தி வெளியிட்ட தங்கை

அலியா பாட்: இந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் நடிகை ஆலியா பாட் நடிகர் ரன்பீர் சிங்கை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இதனிடையே கடந்த நவம்பரில் இத்தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது.ஆலியா பாட் திருமணத்திற்கு முன்பாகவே கர்ப்பமாக இருந்த நிலையில், திருமணமான 8 மாதங்களில் குழந்தையை பெற்றெடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நமீதா: நடிகை நமீதா 2017 ஆம் ஆண்டு வீரேந்திர சிங் சவுதிரி என்பவரை திருப்பதியில் திருமணம் செய்துகொண்டார். இதனிடையே தனது 41 ஆவது பிறந்த நாளின் போது தான் கர்ப்பமாக உள்ளதாக நடிகை நமீதா அறிவித்தார். இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் நமிதாவிற்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தது.

Also Read: மன உளைச்சலில் தற்கொலை வரை சென்ற நமீதா.. உச்சி குளிர சொன்ன சந்தோசமான செய்தி

நயன்தாரா: நடிகை நயன்தாரா இந்த வருடம் ஜூன் மாதம் இயக்குனர் விக்னேஷ் சிவனை சென்னையில் கோலாகலமாக திருமணம் செய்துகொண்டார். இதனிடையே யாரும் எதிர்பாராத வகையில் விக்னேஷ் சிவனின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தங்களுக்கு இரட்டை ஆன் குழந்தைகள் பிறந்துள்ளது என கடந்த அக்டோபர் மாதம் புகைப்படங்களுடன் பதிவிட்டார்.இதை கண்ட இந்திய சினிமாவே அதிர்ச்சியின் உச்சத்தில் இருந்தது. வாடகை தாய் முறையில் நயன்தாரா இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார் என்ற செய்தி தற்போதும் வைரலாகி வருகிறது.

ப்ரணிதா: கன்னட நடிகையான ப்ரணிதா, தமிழில் சகுனி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். இதனிடையே கடந்த 2021 ஆம் ஆண்டு நிதின் ராஜு என்பவரை திருமணம் செய்துக்கொண்ட நிலையில் , இந்த வருடம் அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. அண்மையில் நடிகை ப்ரணிதா தனது குழந்தையுடன் திருப்பதிக்கு சென்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கு வந்த ஆபத்து.. அடுத்தடுத்த தோல்விகளால் கவனிக்கப்படாமல் போன நயன்தாரா

Trending News