புதன்கிழமை, ஜனவரி 8, 2025

கழுவுற மீன்ல நழுவுற மீனாக இருந்த ஹீரோயின்கள்.. அட்ஜஸ்ட்மெண்ட் செய்யாமல் நடித்து திருமணமாகி சென்ற 5 நடிகைகள்

சினிமாவை பொறுத்தவரையில் சின்ன நடிகைகள் மூலம் எவ்வளவு பெரிய நடிகைகளாக இருந்தாலும் அட்ஜஸ்ட்மெண்ட் செய்தால் மட்டுமே வாய்ப்பு கிடைக்கும் என்ற ஒரு பேச்சு போய்க் கொண்டிருக்கிறது. ஆனால் கழுவுற மீன்ல நழுவுற மீனாக சில ஹீரோயின்கள் அட்ஜஸ்ட்மெண்ட் செய்யாமல் நடித்து காட்டியுள்ளனர். அவ்வாறு உள்ள 5 நடிகைகளை பார்க்கலாம்.

நதியா : 90களில் முன்னணி நடிகைகள் ஒருவராக வலம் வந்தவர் நடிகை நதியா. ரஜினி, பிரபு, சத்யராஜ் என முன்னணி நடிகர்களுடன் நதியா ஜோடி போட்டு நடித்துள்ளார். ஆனால் தனது திறமையை மட்டுமே நம்பி படங்களில் நதியா நடித்திருந்தார். திருமணத்திற்கு பிறகு வெளிநாட்டில் செட்டிலாகி இருந்த நதியா இப்போது மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்து கலக்கி வருகிறார்.

Also Read : பிரபு இடத்தை பிடித்த ஜெயராமின் 5 படங்கள்.. தேவயானி, மந்த்ராவை மயக்கிய கோபாலகிருஷ்ணன்

தேவயானி : குடும்பப் பாங்கான கதாபாத்திரங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வந்த நடிகை தேவயானி. இவர் ஜோடி போட்டு நடிக்காத நடிகர்களே இல்லை என்று சொல்லலாம். அப்படி புகழின் உச்சியில் இருந்த இவருக்கு நடிப்பின் காரணமாக பட வாய்ப்பு வந்தது. தேவயானி இயக்குனர் ராஜகுமாரனை மட்டுமே காதலித்து அவரை திருமணம் செய்து கொண்டார்.

மோனிகா : குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மோனிகா. சில படங்களில் கதாநாயகியாக நடித்த இவர் முத்துக்கு முத்தாக படத்தில் ஜோடியாக நடித்திருந்தார். இவர் பட வாய்ப்புக்காக எப்போதுமே அட்ஜஸ்ட்மென்ட் செய்ததில்லை. தன்னுடைய திறமைக்காக வரும் வாய்ப்புகள் மட்டுமே நடித்துவிட்டு அதன் பிறகு திருமணம் செய்து கொண்டார்.

Also Read : ஆசை பட சுவலட்சுமியை ஞாபகம் உள்ளதா? கணவருடன் வைரலாகும் புகைப்படம்

சுவலட்சுமி : விஜய், அஜித் போன்ற நடிகர்களுடன் சுவலட்சுமி ஜோடியாக நடித்துள்ளார். பொதுவாக இவர் தேர்ந்தெடுத்து நடிக்கும் படங்கள் குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களாக தான் இருக்கும். அதேபோல் தான் உண்டு, தன் வேலை உண்டு என்று மட்டுமே இருக்கக்கூடியவர். சுவலட்சுமி மார்க்கெட் இருக்கும் வரை நடித்துவிட்டு அதன் பிறகு திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார்.

கௌசல்யா : பல மொழி படங்களில் நடித்து தனது திறமையை நிரூபித்தவர் நடிகை கௌசல்யா. இவர் விஜய், அஜித், பிரபுதேவா போன்ற நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். கௌசல்யாவை பொறுத்தவரையில் சினிமா பிரபலங்களின் விழாக்கள், பார்ட்டி போன்றவற்றில் கலந்து கொள்ள மாட்டாராம். அட்ஜெஸ்ட்மென்ட் செய்யாமல் தனக்கு கிடைத்த வாய்ப்பை மட்டுமே பயன்படுத்தி நடித்த கௌசல்யா தற்போது வரை திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார்.

Also Read : 50 வயசு ஆகியும் கல்யாணம் ஆகாத 6 நடிகைகள்.. ஜோதிகாவின் குழந்தைகளுக்கு தாயாக இருக்கும் நடிகை

Trending News