ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

ஹீரோக்களை விட எந்த விதத்திலும் சலச்சவங்க இல்ல.. வரிஞ்சு கட்டி சம்பளத்தை உயர்த்தும் 5 நடிகைகள்

Actress Trisha: சினிமா உலகம் ஆரம்பித்த காலத்தில் இருந்து தற்போது வரை எப்பொழுதுமே நடிகர்களை மட்டும் தான் தூக்கிக் கொண்டாடி வருகிறார்கள். காலம் காலமாக நடக்கிற விஷயமாக பொதிந்து வருகிறது. ஆனால் தற்போது கொஞ்ச காலமாக இதற்கு விதிவிலக்கா ஹீரோயின்கள் பெண்கள் சப்ஜெக்ட் படங்களை எடுத்து அதற்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்து வருகிறார்கள்.

அதே நேரத்தில் ஹீரோக்களை விட நாங்கள் எந்த விதத்திலும் சலிச்சவங்க இல்லை என்று போட்டி போட்டுக்கொண்டு சம்பளத்தையும் அதிகம் வேண்டும் என்று கேட்டு டிமாண்ட் செய்கிறார்கள். ஏற்கனவே பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா மட்டுமே இந்தியாவில் இருக்கும் ஹீரோகளுக்கு சமமான சம்பளத்தை வாங்கி வருகிறார்.

Also read: திரிஷாவுக்கு பின் வந்து காணாமல் போன 6 நடிகைகள்.. 40 வயதிலும் நயன்தாராவை ஓரங்கட்டிய குந்தவை

இதனால் தற்போது பல நடிகைகள் இவரை பின்பற்றும் விதமாக அவர்களுடைய சம்பளத்தையும் உயர்த்தி கேட்டுள்ளனர். அதன்படி முன்னணி ஹீரோயின்களுக்கு சம்பளம் உயர்த்தப்பட்டு வருகிறது. அதில் முதலாவதாக நயன்தாரா இதுவரை 7 கோடி சம்பளத்தை பெற்ற நிலையில் தற்போது நடிக்க இருக்கும் படங்களுக்கு 10 கோடி வாங்கி இருக்கிறார்.

பிறகு இந்த விஷயம் தெரிந்தால் மற்ற நடிகைகள் சும்மாவா இருக்க போறாங்க அவங்களும் வரிஞ்சு கட்டி எங்களுக்கும் சம்பளம் அதிகம் வேண்டும் என்று கேட்டிருக்கிறார்கள். சமந்தா இதுவரை நான்கு கோடி வாங்கிக் கொண்டிருந்த நிலையில் தற்போது 8 கோடி சம்பளத்தை பெற்று விட்டார்.

Also read: த்ரிஷாவுக்கு போட்டியாக களம் இறங்கும் 90ஸ் ஹீரோயின்.. 20 வருடத்திற்கு பிறகு விஜய்யுடன் ஜோடி போடும் நடிகை

அடுத்ததாக த்ரிஷா இரண்டு கோடி சம்பளம் வாங்கி வந்த நிலையில் தற்போது 5 கோடி வாங்கி வருகிறார். ஏனென்றால் தமிழில் இவர் மட்டுமே தற்பொழுது முதன்மையாக நடித்து வருவதால் இந்த நேரத்தை சரியாக பயன்படுத்திக் கொண்டார்.

அடுத்து இவர்களைத் தொடர்ந்து ஐஸ்வர்யா ராஜேஷ், ரகுல் ப்ரீத் சிங் மற்றும் காஜல் அகர்வால் போன்ற அனைத்து ஹீரோயின்களும் ஏற்கனவே இவர்கள் வாங்கும் சம்பளத்தில் இருந்து இரண்டு கோடி வரை அதிகரித்து விட்டார்கள். இதனால் கதாநாயகர்களுக்கு சமமாக கதாநாயகிகளும் தற்போது படையெடுத்து வருகிறார்கள். மேலும் அவர்களைப் போல கூடிய விரைவில் சம்பள விஷயத்திலும் நெருங்கி விடுவார்கள்.

Also read: ஐஸ்வர்யா ராஜேஷ் தேர்ந்தெடுத்த 5 அற்புதமான கதைகள்.. ஆண்களுக்கு சவுக்கடி கொடுத்த கிரேட் இந்தியன் கிச்சன்

Trending News