திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

சம்மந்தமே இல்லாமல் பேசி அசிங்கப்பட்ட 5 நடிகைகள்.. குஷ்புவுக்கு எதிராக தூக்கிய போர்க்கொடி

தவளை தன் வாயால் கெடும் என்ற பழமொழிக்கு ஏற்றார் போல, பல நடிகர், நடிகைகள் மைக்கை அவர்கள் முன் நீட்டிய உடன் என்ன பேசுகிறோம் என்றே தெரியாமல் பல சர்ச்சையான கருத்துக்களை உளறி விடுவர். அவர்கள் பேசியது ஒரு பக்கம் சர்ச்சை ஆனாலும் ஒரு பக்கம் நெட்டிசன்களிடம் சிக்கி ட்ரோலாகும். அப்படிப்பட்ட பிரச்சனைகளை உருவாக்கி வரும் பெண் பிரபலங்களை பற்றி பார்க்கலாம்.

வனிதா விஜயகுமார்: விஜயகுமாரின் மூத்த மகளான வனிதா விஜயகுமார், மூன்று திருமணங்கள் செய்துகொண்டு விவாகரத்து பெற்றவர்.விஜயகுமார் வனிதாவை வீட்டை விட்டு விரட்டிய நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் வனிதா கலந்துகொண்டு சர்ச்சைக்குரிய பிரபலமாக வலம் வந்தார். கொளுத்திப் போடுவதில் தில்லாலங்கடி வனிதா என அவரின் பின் பல அடைமொழிகளை வைத்து நெட்டிசன்கள் ட்ரோல் செய்தாலும் திறந்த வாயை மூடாமல் வலம் வருகிறார்.

Also read:  வத்திக்குச்சி வனிதாவிடம் வசமாக சிக்கிய சிம்பு பட தயாரிப்பாளர்.. கொண்டாடும் நெட்டிசன்கள்

கஸ்தூரி: கஸ்தூரி 90 காலகட்டத்தில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நாயகியாக நடித்து வந்தவர். சமீபத்தில் ஒரு சில திரைப்படங்களில் ரீஎன்ட்ரி கொடுத்த கஸ்தூரி, பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது என பல்வேறு வேலைகளை செய்துவருகிறார். இவர் வாயைத் திறந்தாலே சர்ச்சையாக தான் முடியும் என்று சொல்லும் அளவிற்கு கஸ்தூரியின் பேச்சு அனைவருக்கும் முகம் சுளிக்க வைக்கும்.

குஷ்பூ : 80களில் கனவுக்கன்னியாக தோன்றி தற்போது வரை நடிகையாகவும், அரசியல்வாதியாகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார் குஷ்பூ. அரசியல்வாதியாக பேசும்போதும் சரி, ஒரு நடிகையாக பேசும் போதும் சரி ஏதாவது ஒரு தேவையில்லாத வார்த்தையை விட்டு விடுவார். அப்படித்தான் திருமணம் ஆவதற்கு முன்பாகவே பாலியல் உறவில் ஈடுபடுவது தவறல்ல என அவர் கூறிய சர்ச்சையான பதிவு இன்று வரையில் பலராலும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாக பார்க்கப்படுகிறது.

Also read: வத்திக்குச்சி வனிதாவை விட இவர் என்ன பிஸ்தா.. பிக்பாஸ் அல்டிமேட்டில் நடக்கும் பித்தலாட்டம்

ரஞ்சிதா: 90 காலகட்டத்தில் ரஞ்சிதாவின் நடிப்பு அனைவரையும் ஈர்த்தது. பல திரைப்படங்களில் முன்னணி நாயகியாக வலம் வந்த ரஞ்சிதா, சாமியார் நித்யானந்தாவின் பிடியில் சிக்கி அவரது பெயரை அவரே டேமேஜ் செய்துள்ளார் என்று சொல்லலாம். அவரும் நித்யானந்தாவும் ஒரு ஹோட்டல் அறையில் ஒன்றாக இருக்கும் வீடியோ வெளியாகி பலரையும் அதிர வைத்தது. அதன்பின்பு ரஞ்சிதாவின் மார்கெட் அப்படியே இழுத்து மூடப்பட்டது.

சோனா: சினிமாவில் பல திரைப்படங்களில் கவர்ச்சி நடிகையாகவும், காமெடி நடிகையாகவும் வலம் வந்த நடிகை சோனா, ஒரு பேட்டியின் போது ஆண்களை எல்லாம் நான் டிஷ்யூ பேப்பர் போல பயன்படுத்துவேன் எனக் கூறி பெரும் சர்ச்சையில் மாட்டிக் கொண்டார். தற்போது சில சீரியல்களில் நடித்து வரும் சோனா, சர்ச்சையான கருத்துக்களை பேசுவதிலிருந்து சற்று ஒதுங்கி உள்ளார்.

Also read: இப்படி யாருக்கும் நடக்கக்கூடாது.. வில் ஸ்மித்க்கு ஆதரவாக களமிறங்கிய வனிதா

Trending News