வரவிருக்கும் 2021 T-20 உலகக்கோப்பை அக்டோபர் மாதம் 17ஆம் தேதி என்று கோலாகலமாக தொடங்கவிருக்கிறது. இந்த தொடருக்காக அனைத்து நாட்டு வீரர்களும் தங்களை தயார்படுத்திக் கொண்டு வருகின்றனர். இந்தியாவில் கொரோன அச்சம் காரணமாக இந்த தொடர் ஓமன் மற்றும் அமீரக மைதானங்களில் நடக்க இருக்கிறது.
இந்த உலக கோப்பையில் கிட்டத்தட்ட 16 அணிகள் விளையாட உள்ளன. அனைத்து அணிகளுமே, விளையாடவிருக்கும் தங்களது 15 பேர் கொண்ட பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் ஆச்சரியப்படும் வகையில் முக்கியமான சில வீரர்கள் அணியில் இருந்து கழட்டி விடப்பட்டுள்ளனர். அவ்வாறு கழற்றிவிடப்பட்ட ஐந்து முக்கிய வீரர்களை இதில் பார்க்கலாம்.
யுஸ்வேந்திர சஹால்: கடந்த சில வருடங்களாக இந்திய அணியில், ஸ்பின் பவுலிங் யூனிட்டில் சிறந்து விளங்கியவர் சஹால். இவர் இந்த ஆண்டு நடக்க இருக்கும் உலக கோப்பை தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதனால் அணி நிர்வாகம் மீது அதிருப்தியில் உள்ளார் சஹால்.
பப் டூப்ளெசிஸ்: தென்னாபிரிக்கா அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக இருப்பவர் டூப்ளெசிஸ். இவர் 20 ஓவர் உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில், டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். ஆனால் இவருக்கே தென்னாப்பிரிக்கா அணி நிர்வாகம் உலக கோப்பை தொடரில் வாய்ப்பளிக்கவில்லை.
ஷிகர் தவான்: ஐசிசியினால் நடத்தப்படும் தொடர்கள் என்றால் அதில் தவான் பெயர் நிச்சயமாக இருக்கும். ஏனென்றால் அனைத்து போட்டிகளிலும் சிறப்பாக விளையாடுவார். என்ன காரணம் என்று தெரியவில்லை, இந்திய அணியில் இருந்து இந்த உலக கோப்பை தொடரில் நீக்கப்பட்டுள்ளார்.
சோயப் மாலிக்: பாகிஸ்தான் அணியில் விளையாடி வரும் மாலிக் 20 ஓவர் போட்டியில் சிறப்பாக விளையாடக் கூடியவர். முக்கியமான போட்டிகளில் அணிக்கு தேவையானவற்றை செய்யக்கூடிய இவரை பாகிஸ்தான் அணி நிர்வாகம் புறக்கணித்துள்ளது.
5. கிரிஸ் மோரிஸ்: 20 ஓவர் ஐபிஎல் போட்டிகளில் கலக்கி வரும் கிரிஸ் மோரிஸ் இந்த வருடம் உலக கோப்பை தொடரில் இடம் பெறவில்லை. இவர் ஒரு சிறந்த ஆல்ரவுண்டர். கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அதிக ஏலத்துக்கு போன வீரர் இவரே.