செவ்வாய்க்கிழமை, ஜனவரி 21, 2025

மீடியாவை பார்த்தாலே தெறித்து ஓடும் 5 பிக் பாஸ் விஷ பூச்சிகள்.. காசு போட்டு விளம்பரம் தேடிய பூர்ணிமா

Bigg Boss 5 Poisonous: ஆடிய ஆட்டம் என்ன? பேசிய வார்த்தை என்ன? என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப கொஞ்சநஞ்சமா வீட்டுக்குள் ஆட்டம் போட்டாங்க. யாரைப் பற்றி சொல்லப் போகிறேன் என்று ஓரளவுக்கு தற்போது புரிந்து இருக்கும். ஆமாம் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக பங்கேற்ற 22 போட்டியாளர்களில் வன்மத்தை மட்டுமே விளையாட்டு யுக்தியாக பயன்படுத்தியவர்கள் தான் மாயா, பூர்ணிமா.

இவர்களுடன் சேர்ந்தால் பெரிய ஆள் ஆகிவிடலாம், விளையாட்டிலும் ஜெயித்து விடலாம் என்று கண்மூடித்தனமாக நம்பியவர்கள் தான் ஜோவிகா, சரவணன் விக்ரம் மற்றும் நிக்சன். உன்னால நான் கெட்டேன் என்னால நீ கெட்ட என்பதற்கு ஏற்ப இந்த ஐந்து போட்டியாளர்களும் அவர்கள் தலையிலே அவர்களே மண்ணை வாரி போட்டு விட்டார்கள்.

ஆரம்பத்தில் ஜோவிகா மற்றும் நிக்சன் விளையாட்டு மக்களுக்கு பிடித்தது. அதுவும் தைரியமான பேச்சும் பிரச்சனை என்றால் துணிச்சலாக எதிர்த்து கேட்கும் ஜோவிகா-வின் செயல்கள் அனைத்தும் வெளியே இருந்து மக்கள் வியர்ந்து பார்த்தார்கள். எப்பொழுது மாயா மற்றும் பூர்ணிமா உடன் சேர்ந்தாரோ அப்போமே ஜோவிகா மக்கள் மனதிலிருந்து அவுட் ஆகிவிட்டார்.

Also read: தலைவர் பாட்டை வைத்து மாயாவுக்கு பதிலடி கொடுத்த ஆர்ஜே பிராவோ.. இப்பவும் பற்றி எரியும் பிக் பாஸ்

அடுத்து நிக்சன், மாயாவையும் பூர்ணிமாவையும் நம்பி மற்றவர்களை எதிர்த்து பேசி சண்டை போட்டு காயப்படுத்துவது மட்டுமே செய்து வந்தார். அதனால்யே இவரை எப்பொழுது வெளியே அனுப்பலாம் என்று மக்கள் கண்கொத்தி பாம்பாக காத்துக் கொண்டிருந்து வெளியே தூக்கி விட்டார்கள். இவர்களை எல்லாம் விட சரவணன் விக்ரம் யார் வம்பு தும்புக்கும் போகாமல் இருக்கும் இடம் தெரியாமல் போய்விடுவோம் என்று மிக்சர் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.

ஆனால் அர்ச்சனா போன பிறகுதான் எங்கிருந்து ஒரு பேச்சு வந்ததோ தெரியல சண்டைக்கு மல்லுக்கட்ட ஆரம்பித்து விட்டார். ஆனால் அது அர்ச்சனாவிடம் மட்டும் பேசும் ஒரு கோழையாக போய்விட்டார். இப்படி பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்து ஒவ்வொரு அட்டுழியங்களையும் பண்ணி ஜெயிக்க முடியாமல் இவர்கள் அனைவரும் வெளியே வந்து விட்டார்கள். எப்பொழுதுமே கப்பு ஒருத்தருக்கு தான் என்றாலும், கொஞ்சமாக மக்கள் மனதில் இடம் பிடித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

ஆனால் இவர்கள் செய்த காரியத்தால் வெளியில் தலை காட்ட முடியாமல் சர்வமும் அடங்கி போய் வீட்டுக்குள்ளே ஒடுங்கி விட்டார்கள். முக்கியமாக மீடியா கண்ணுக்கு பற்றவே கூடாது என்பதற்காக இந்த 5 விஷப்பூச்சிகள் நடமாடி கொண்டு வருகிறார்கள். அதுலயும் பூர்ணிமா பணப்பெட்டியை தூக்கியதால் சொந்த காசுலயே இவருக்கான விளம்பரத்தை தேடிக் கொண்டு வருகிறார். அதாவது கீழே விழுந்தாலும் மீசையில் மண்ணு ஒட்டக்கூடாது என்ற ரகத்தில் இருக்கிறார்.

Also read: பிக் பாஸ் அர்ச்சனா விஜய் டிவிக்கு கொடுத்த முதல் பேட்டி.. குதர்க்கமாக பதிலளித்த டைட்டில் வின்னர்

Trending News