கிரிக்கெட் வரலாற்றில் 50 ஓவர் போட்டிகளில் 250 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது என்பது அரிதான ஒன்று. ஒரு காலத்தில் ஒருநாள் போட்டிகளில் 200 ரன்களை கடப்பதே சவாலான ஒன்று. ஆனால் தற்போது நடைமுறையிலுள்ள கிரிக்கெட் போட்டிகளில் 350, 400 ரன்களை கூட சர்வ சாதாரணமாக அடிக்கின்றனர். அதையும் எதிரணியினர் எளிதாக துரத்திப் பிடிக்கின்றனர்.
இப்பொழுது கிரிக்கெட் என்பது பேட்ஸ்மேன்கள் கேம் என்றாகிவிட்டது எவ்வளவு பெரிய பந்துவீச்சாளர்கள் ஆனாலும் எளிதாக அடித்து துவம்சம் செய்கின்றனர். அவ்வாறு முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது அதிக ரன்கள் அடித்து இமாலய வெற்றி பெற்ற அணிகளை இதில் காண்போம்,
நியூசிலாந்து மற்றும் அயர்லாந்து: இவ்விரு அணிகளுக்கும் இடையே நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 402 ரன்கள் குவித்தது. மார்சல் 161 ரன்களும் மெக்கல்லம் 166 ரன்களும் குவித்தனர். பின்னர் ஆடிய அந்த அணி 20 ஓவர்களில் 112 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. முடிவில் நியூசிலாந்து அணி 290 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான்: இந்த போட்டியில் முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 417 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 142 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. 275 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி எளிதான வெற்றியை ருசித்தது.

தென்னாபிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே: ஏபி டிவில்லியர்ஸ் 109 ரன்களும், ஜேபி டுமினி 129 ரன்களும், குவித்து ஜிம்பாவே அணிக்கு 399 என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தனர்.ஆனால் ஜிம்பாவே அணி 127 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி 272 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

தென்னாபிரிக்கா மற்றும் இலங்கை: இலங்கை அணி தோல்விகளில் இது ஒரு மோசமான தோல்வி. வெறும் 43 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. மொத்தமாக 20 ஓவர் வீசிய தென்ஆப்பிரிக்க அணி இலங்கையை சுருட்டியது. முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி 301 ரன்கள் எடுத்திருந்தது. இதனால் 288 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடியது .

இந்தியா மற்றும் பெர்முடா: 2007 ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியில் பெர்முடா அணிக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 413 ரன்கள் குவித்தது. விரேந்திர சேவாக் சதம் விளாசினார் .பின்னர் 413 என்ற இமாலய இலக்கை நோக்கி ஆடிய பெர்முடா அணி 156 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இறுதியில் இந்திய அணி 257 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.
