ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

80ல் கமல் தெறிக்கவிட்ட 5 பாலிவுட் படங்கள்.. நம்ம பொழப்பு போயிடும்னு ஓரங்கட்ட போட்ட சதி தெரியுமா?

Kamal Bollywood Movie: குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் போன்ற மொழி படங்களில் முன்னணி கதாநாயகனாய் வலம் வந்தவர் கமலஹாசன். இந்நிலையில் பாலிவுட்டில் இவர் மேற்கொண்ட படைப்புகளை பற்றி இத்தொகுப்பில் காணலாம்.

அவ்வாறு 80 காலகட்டத்தில் தமிழில் உச்சபட்ச நடிகராய் வலம் வந்த இவர் முதலில் பாலிவுட்டில் தான் பிரபலமாக பேசப்பட்டார். அதற்கு உதாரணமாக 1980 முதல் 1985 வரை சுமார் 13 ஹிந்தி படங்களில் இவர் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: அடுத்த வாரம் வசூல் வேட்டைக்கு தயாரான 5 படங்கள்.. ஜெயிலரால் வாழ்வா சாவா என்ற நிலையில் தயாரிப்பாளர்

அதிலும் குறிப்பாக ஏக் துஜே கே லியே, சனம் தெரி கசம், யே தோ கமல் ஹோ கயா, ஜரா சி ஜிந்தகி, சாகர் போன்ற படங்களில் தன் நடிப்பினை சிறப்பாக வெளிக்காட்டி இருப்பார். 1981ல் ரொமான்டிக் படமாய் வெளிவந்த ஏக் துஜே கே லியே படத்தை இயக்கியவர் கே பாலச்சந்தர்.

தெலுங்கு ரீமேக் படமான இப்படம் சுமார் 50 லட்சம் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டது. அதை தொடர்ந்து மகேஷ் சிப்பி இயக்கத்தில் ரொமான்டிக் படமாய் வெளிவந்த சாகர் கமலஹாசன் நடிப்பில் மாபெரும் ஹிட் கொடுத்த படமாய் அமைந்தது. இப்படத்தில் சிறந்த நடிகர் காண விருதினை பெற்றார். அது மட்டும் இல்லாமல் சனம் தெரி கசம், கமல் நடிப்பில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது.

Also Read: மீண்டும் விஜய் மானத்தை வாங்கிய மக்கள் இயக்கம்.. அதிரடியாக கைது செய்யப்பட்ட செயலாளர்

வறுமையின் நிறம் சிகப்பு இன்னும் படத்தின் ரீமேக் தான் ஜரா சி ஜிந்தகி. இப்படமும் பாலச்சந்தரால் ஹிந்தியில் இயக்கப்பட்டது. மேலும் 1982ல் சட்டம் என் கையில் என்னும் தமிழ் திரைப்படத்தின் ரீமேக்கான யே தோ கமல் ஹோ கயா படத்தில் இரட்டை வேடம் ஏற்று நடித்திருந்தார். அவ்வாறு தொடர்ந்து 1980 முதல் 1985 வரை இவரின் படங்கள் தொடர் வெற்றியை சந்தித்ததன் காரணமாக ஹாலிவுட் பிரபலங்களிடையே ஈகோ வெடிக்க தொடங்கியது.

இப்படியே இவரை விட்டால் நம் பொழப்பு வீணாகிவிடும் என எண்ணி இவர் படங்கள் மீது நெகட்டிவ் பிரமோஷன் கொடுத்து ஹிட் ஆகாமல் பார்த்துக் கொண்டனர். இவர்களின் சதி, கமலுக்கு தெரிய வர இனி ஹிந்தியில் நடிக்கப் போவதில்லை என முடிவெடுத்து சுத்தமாக நிறுத்திவிட்டாராம். அவ்வாறு பாலிவுட்டில் புகழின் உச்சியில் இருந்த கமலை புறக்கணித்ததால் இன்று வரை ஹிந்தி படங்களை ஏற்க மறுத்து வருகிறார்.

Also Read: வேட்டையனை வேட்டையாட காத்திருக்கும் சந்திரமுகி.. ஜோதிகாவையே மிரட்டும் கங்கனா போஸ்டர்

Trending News