திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

சினிமாவில் அஜித்தின் நட்பு பாராட்டிய 5 பிரபலங்கள்.. ஷாலினிக்காக பற்ற வைத்து பல்பு வாங்கிய நடிகர்

5 celebrities who appreciate Ajith’s friendship in Tamil cinema: தமிழ் சினிமாவில் எந்த ஒரு பலமான பின்புலமும் இல்லாமல் தனக்குரிய இடத்தை தானே வடிவமைத்தவர் அஜித். இன்று பொது இடங்களுக்கு வர மறுத்து கெத்து காட்டுபவர் ஆகவே அறிந்த இளசுகளுக்கு, தனது திறமையோடு தனது பெருந்தன்மையான குணத்தினாலேயே இந்த இடத்திற்கு வந்தார் என்பது தெரிய வாய்ப்பில்லை. இவரிடம் பழகும் அனைவரும் கூறும் ஒரே வாக்கியம் ஹி இஸ் சோ ஸ்வீட்!  ரொம்ப நல்லவரு! என்பதுதான்

வெங்கட் பிரபு: அஜித் இயக்குனர் என்று சொல்லும் அளவிற்கு வெங்கட் பிரபு மற்றும் அஜித் அவர்கள் ரொம்ப குளோசாக உள்ளனர். “தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்” படத்தில் விஜய்யுடன் கைகோர்த்த வெங்கட் பிரபுவை முதலில் வாழ்த்தியது அஜித் தானாம். இவர்களது நட்பு மங்காத்தாவில் தொடங்கியது அல்ல அதற்கு முன்பாகவே ஏதோ பிக்னிக் செல்வது போல் கங்கை அமரன் வீட்டிற்கு அடிக்கடி சென்று வெங்கட் பிரபு மற்றும் பிரேம்ஜியுடன் பேசி மகிழ்வதை அஜித் வாடிக்கையாகக் கொண்டிருந்தாராம்.

சிறுத்தை சிவா: எவர்கிரீன் சென்டிமென்ட் கதைகளை கையில் எடுத்து குடும்பங்கள் கொண்டாடுமாறு அஜித்தை தரம் உயர்த்தியவர் சிறுத்தை சிவா. அஜித்துடன் ஒர்க் பண்ண இயக்குனர்களின் அடுத்த சாய்ஸ் அஜித் ஆகவே தான் இருப்பார். அதற்கு உதாரணம் சிறுத்தை சிவா. அஜித்தை விடாமல் துரத்தும் வேதாளமாக அஜித்துடன் வீரம், விவேகம், விசுவாசம் போன்ற வெற்றி படங்களை கொடுத்துள்ளார்.

Also read: AK 63-இல் நடிக்க போட்டியிடும் 3 முக்கிய வில்லன்கள்.. அஜித்தின் டார்லிங்க்கு அதிக வாய்ப்பு

கே எஸ் ரவிக்குமார்: அஜித் மற்றும் கே எஸ் ரவிக்குமார் இவர்களின் நட்பு சுவாரஸ்யமானது. கே எஸ் ரவிக்குமாரின் வரலாறு படத்தில், நாயகனுக்கு பெண்மை கலந்த வேடம் என்று கூறியதும் பல நடிகர்கள் முடியாது என்றனர். தைரியமாக இந்த வேடத்தை ஏற்றதுடன் ரிலீஸிங்கின் போது ஏற்பட்ட பிரச்சனையில் பில்லா படத்தின் அட்வான்ஸை கொடுத்து வரலாற்றை ரிலீஸ் செய்து ரவிக்குமாரின் இதயத்தில் நீங்கா இடம் பிடித்தார் அஜித்.

ரமேஷ் கண்ணா: அஜித்துடன் தொடர்ந்து நட்பு பாராட்டி வரும் ரமேஷ் கண்ணா அவர்கள் அமர்க்களம், வீரம் போன்ற பல படங்களில் இவருடன் நடித்துள்ளார். அமர்க்களம் படப்பிடிப்பின் போது அஜித் மற்றும் ஷாலினி காதல் விவகாரம் தெரியாமல் நடிகையை கல்யாணம் பண்ண வேண்டாம் என்று அட்வைஸ் கூறி பின்பு தெரியாம சொல்லிட்டன்னு பல்பு வாங்கினாராம் ரமேஷ் கண்ணா.

பிரகாஷ்ராஜ்: ஆசை படத்தில் துவங்கிய இவர்களது நட்பு குரு சிஷ்யன் உறவைப் போன்றது. ஆசை படத்தின் போது அஜித் அவர்கள், “நான் நல்லா நடிக்கிறேனா என்று பிரகாஷ்ராஜை கேட்டு  ரொம்ப தொல்லை பண்ணுவாராம். அவரும் பிரியமுடன் அஜித்திற்கு நிறைய டிப்ஸ் கொடுத்து அஜித்தை கை தூக்கி விட்டார் என்பது தகவல்.

Also read: பழக்கவழக்மெல்லாம் வீட்டு வாசப்படியோடு இருக்கணும்.. அஜித் அசிங்கப்படுத்தி விரட்டி அடித்த நட்பு

Trending News