வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

கமலுடன் கடைசியாக இந்தியன் 2 படத்தில் நடித்து உயிரை விட்ட 5 பிரபலங்கள்.. இது என்ன ஆண்டவருக்கு வந்த சோதனை?

Indian 2: பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் மற்றும் உலக நாயகன் கமல் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் தான் இந்தியன் 2. இப்படம் கடந்த ஜூலை 12ஆம் தேதி அனைத்து திரையரங்களிலும் ரிலீஸ் ஆனது. ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு படம் ஒன்றுமே இல்லை என்று நெகட்டிவ் விமர்சனங்களை வாங்கி கேளிக்கும் கிண்டலுக்கும் படம் ஆளாகிவிட்டது.

இது ஷங்கர் இயக்கிய படமாகவும் தெரியவில்லை, கமல் நடித்த படமாகவும் தெரியவில்லை என்று பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் கழுவி ஊத்தினார்கள். அந்த அளவிற்கு படம் ரொம்பவே அடிவாங்கி விட்டது. ஆனால் இப்படம் கிட்டத்தட்ட ஐந்து வருடங்களுக்கு மேல் பல பிரச்சினைகளை சந்தித்து வெளிவந்தது. அதிலும் இதில் நடித்த சில பிரபலங்களுக்கு இதுதான் கடைசி படமாகவும் முடிந்து விட்டது. அப்படி இப்படத்தில் நடித்துவிட்டு உயிரிழந்த ஐந்து பிரபலங்கள் பற்றி பார்க்கலாம்.

விவேக்: நகைச்சுவை நடிகராக தமிழ் சினிமாவிற்குள் நுழைந்த விவேக் கிட்டத்தட்ட 200 படங்களுக்கும் மேல் நடித்து சிறந்த நகைச்சுவை நடிகர் விருதுகளை பெற்றிருக்கிறார். அத்துடன் இந்திய அரசால் பத்மஸ்ரீ விருதையும் பெற்றார். அப்படிப்பட்ட இவருடைய இழப்பு கடந்த 2021 ஆம் ஆண்டு ஒட்டுமொத்த மக்களுக்கும் பெரிய துக்கத்தை ஏற்படுத்தியது. மேலும் இவர் கடைசியாக நடித்த படம் கமலுடன் இணைந்து இந்தியன் 2. இதில் சிபிஐ அதிகாரி இளங்கோவாக நடித்திருக்கிறார். ஆனாலும் பாதி படத்துக்கு மேல் விவேக் நடிக்க முடியாது என்பதால் படத்தில் மீதி பகுதியில் சில கிராபிக்ஸ்கள் பயன்படுத்தப்பட்டு காட்சிகள் அமைக்கப்பட்டது.

மாரிமுத்து: பிரியா பவானி சங்கர் மாமாவாக சொக்கலிங்கம் என்ற கதாபாத்திரத்தில் மாரிமுத்து இந்தியன் 2 படத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் தான் இவருடைய கடைசி படம் என்பதற்கு ஏற்ப இந்தியன் 2 படத்திற்கு பிறகு எதிலும் நடிக்க முடியாத அளவிற்கு இவருடைய உயிர் மாரடைப்பால் பிரிந்து விட்டது.

நெடுமுடி வேணு: இந்தியன் படத்தை தொடர்ந்து இந்தியன் 2 படத்தில் இவருடைய கேரக்டர் கொண்டுவரப்பட்டது. அந்த வகையில் ஓய்வு பெற்ற சிபிஐ அதிகாரி கிருஷ்ணசாமியாக இவருடைய காட்சிகள் இருந்திருக்கும். ஆனால் பாடம் முடிவதற்குள் இவருடைய உயிர் பிரிந்ததால் இவருக்கான காட்சிகள் கிராபிக்ஸ் பண்ணி எடுக்கப்பட்டிருக்கிறது.

மனோ பாலா: தயாரிப்பாளர், இயக்குனர், நகைச்சுவை நடிகர் போன்ற பல திறமைகளை வைத்துக்கொண்டு தமிழ் சினிமாவில் வலம் வந்தார். கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக திரைப்படத்துறையில் பணியாற்றி இருக்கிறார். அப்படிப்பட்ட இவருடைய கடைசி படமாக இந்தியன் 2 .

டெல்லி கணேஷ்: கமலுக்கு மிகவும் பிடித்த ஒரு நடிகராகவும் மனிதராகவும் டெல்லி கணேஷ் கமல் மனதில் இடம் பிடித்திருக்கிறார். அப்படிப்பட்ட இவருடைய இறப்பு பலருக்கும் துக்கத்தை ஏற்படுத்தியது. ஆனாலும் இவருடைய இறப்பில் கலந்து கொள்ள முடியாத அளவிற்கு கமல் வெளிநாட்டில் இருந்ததால் டெல்லி கணேஷ் உடலுக்கு அஞ்சலி செலுத்த வர முடியாமல் போய்விட்டது. மேலும் டெல்லி கணேசன் கடைசியாக நடித்த படமாக இந்தியன் 2.

இப்படி இந்த ஐந்து பிரபலங்களும் ஒரே படத்தில் கடைசியாக நடித்து இந்த மண்ணை விட்டு பிரிந்திருக்கிறார்கள். இது என்ன ஆண்டவருக்கு வந்த சோதனை என்பதற்கு ஏற்ப கமலுடன் கடைசியாக நடித்து உயிர் பிரிந்து இருக்கிறது.

Trending News