சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

சைக்கோ மாதிரி பேசி மாட்டிக்கொண்ட 5 பிரபலங்கள்.. நொந்து நூடில்ஸ் ஆன சித்தார்த், ரோபோ சங்கர்

5 celebrities who got caught talking like a psycho: சிலர் என்ன பேசுகிறோம், யாரைப் பற்றி பேசுகிறோம் என்று தெரியாமலேயே பொது இடங்களில் வாய்க்கு வந்தபடி உளறி விடுவார்கள். அந்த மாதிரி சினிமாவில் உள்ள சில பிரபலங்கள் பொது மேடையில் சில கருத்துக்களை கூறுகிறோம் என்ற பெயரில் சைக்கோ மாதிரி பேசி பிரச்சினையில் மாட்டி தவித்து இருக்கிறார்கள். அவர்களைப் பற்றி தற்போது பார்க்கலாம்.

மன்சூர் அலிகான்: இவர் சும்மா இருந்தாலும் வாயை வச்சுக்கிட்டு சும்மா இருக்க முடியாது என்பதற்கு ஏற்ப இவரிடம் கொஞ்சம் கூட நாவடக்கமே இல்லை. 90களில் வில்லனாக நடித்து வந்தவர் ஒரு காலகட்டத்திற்கு பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் இல்லாமல் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார். பிறகு லோகேஷ் மூலம் லியோ படத்தில் மறுபடியும் என்டரி கொடுத்தார். அதன் பின் அதில் நடித்த த்ரிஷாவை அவமரியாதையாகவும், கொச்சையாகவும் பேசி திரிஷாவிடம் இருந்து நல்ல வாங்கி கட்டிக் கொண்டார்.

குஷ்பூ: நடிகையாக இருக்கும் பொழுது இருக்கும் இடம் தெரியாமல் இருந்த இவர், அரசியலில் ஆசை வந்ததால் போற இடத்தில் எல்லாம் இவருடைய கருத்துக்களை தெரிவிக்கும் விதமாக பல விஷயங்களைப் பற்றி பேசி இருக்கிறார். அதில் இந்தியன் கலாச்சாரத்தை பற்றி தவறான கருத்தை வெளியிட்டு இருந்தார். அதாவது பெண்கள் திருமணத்திற்கு முன்னதாக லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருக்கலாம் என்று ஒரு கருத்தை பதிவிட்டு அது சர்ச்சையாக வெடித்ததால் மாட்டி முழித்திருக்கிறார்.

Also read: த்ரிஷாவை தொடர்ந்து ரஜினி ஹீரோயினையும் கொச்சைப்படுத்திய மன்சூர்.. கொந்தளிப்புடன் பேசிய வில்லன்

சித்தார்த்: பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் குறித்து ரொம்பவே கொச்சையாக ஒரு கருத்தை பதிவிட்டு இருந்தார். அதாவது பஞ்சாபில் பிரதமர் மோடியின் பாதுகாப்பு விதிகள் மீறப்பட்ட விஷயமாக சாய்னா நேவல் அவருடைய டுவிட்டர் பக்கத்தில் சில கருத்துக்களை பதிவிட்டு இருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சித்தார்த்தின் பதில் பெண்களை அவமதிப்பதாக இருந்தது. இது மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்து பலரும் இவருக்கு கண்டனம் தெரிவித்து விட்டார்கள். கடைசியாக சித்தார்த் அனைவரது முன்னணையிலும் மன்னிப்பு கேட்டு அவருடைய விளக்கத்தை கொடுத்தார்.

ரோபோ சங்கர்: சிலர் காமெடியாக பேசுகிறோம் என்ற நினைப்பில் என்ன சொல்கிறோம் என்று புரிந்து கொள்ளாமல் சில இடங்களில் பேசி விடுவார்கள். அது போல தான் ரோபோ சங்கரும் பார்ட்னர் மூவி ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் ஹன்சிகா மோத்வானியை ஒரு மெழுகு சிலை. அவர் காலை தொட ஆசைப்பட்டேன் ஆனால் அதற்கு அவர் அனுமதிக்கவில்லை என்று சைக்கோ மாதிரி மேடையில் உளறித் தள்ளி விட்டார். இதனால் இவரை வச்சு செய்யும் அளவிற்கு பலரும் ட்ரோல் செய்து அசிங்கப்படுத்தி விட்டார்கள்.

ராதா ரவி: அதாவது முன்பெல்லாம் சாமி வேடங்களில் நடிப்பதற்கு பார்த்த உடனே கையெடுத்து கும்பிடு மாதிரி இருக்கும் நடிகைகளை தான் கூப்பிடுவார்கள். ஆனால் தற்போது கும்பிடுகிற மாதிரி இல்லை, கூப்பிடுகிற மாதிரி இருக்கிற நடிகைகள் எல்லாம் கூட சீதை வேடத்தில் நடிக்கிறார்கள் என்று நயன்தாராவை தவறாக பேசி அவர் சாமியாராக நடிப்பதற்கு எந்த வித தகுதியும் இல்லை என்று பேசியது சர்ச்சையாக வெடித்தது.

Also read: நானும் ரவுடிதான்னு கோர்ட்டுக்கு போன மன்சூர்.. ரெக்கையை புடுங்கி அனுப்பிய நீதிபதி

Trending News