Singer STR: இசையை பிடிக்காதவர்கள் எவரேனும் இருக்க முடியுமா. அதற்கு உதாரணமாக சினிமாவில் நடிப்பின் மூலம் தன் திறமையை வெளிக்காட்டும் ஹீரோக்கள் தன் ஆசையை பூர்த்தி செய்யும் விதமாக தான் நடிக்கும் படங்களில் ஒரு சில பாடல்களை பாடவும் செய்கிறார்கள்.
அக்கால சினிமா முதல் இக்கால சினிமா வரை பாடல்களுக்கு ஏற்ப நடனமும் நடனத்துக்கேற்ற பாடலும் மிக முக்கியமான ஒன்றாகும். அவ்வாறு தன் ஹாபியாய் பாடல்களை விருப்பப்பட்டு பாட முயற்சிக்கின்றனர் ஹீரோக்கள். மேலும் இவர்கள் பாடும் பாடல்கள் மக்களிடையே நல்ல விமர்சனங்களையும் பெற்று வருகிறது.
Also Read: நின்னுபோன படத்தை தூசி தட்டும் எஸ் ஜே சூர்யா.. ரஜினி நண்பருக்கு மீண்டும் விடுத்த அழைப்பு
அவ்வாறு தமிழ் சினிமாவில் நடனத்தோடு பாடல்களிலும் அசத்திய 5 பிரபலங்களை பற்றி இங்கு காணலாம். அவ்வாறு ஒரு பின்னணி பாடகர் ஆகவும், நடிகராகவும் திகழ்பவர்தான் சித்தார்த். பாய்ஸ் படம் மூலம் பெரிதும் பேசப்பட்ட இவர் சந்தோஷ் சுப்பிரமணியம் என்னும் படத்தில் அடடா அடடா என்ற பாடலை பாடி நல்ல விமர்சனங்களை பெற்றார்.
அதிலும் தமிழை விட தெலுங்கில் பல படங்களில் பாடல்களை பாடி அசத்தி வருகிறார். அடுத்து இந்த வரிசையில் சிவகார்த்திகேயன், நடிப்புக்கு பேர் போனவர் இவர் சமீப காலமாக பாடலுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். அவ்வாறு இவர் தன் படமான வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே, காக்கி சட்டை, ரஜினி முருகன், மிஸ்டர் லோக்கல் போன்ற படங்களில் ஒரு சில பாடல்களை பாடியுள்ளார்.அவ்வாறு தமிழ் சினிமாவில் எஸ் டி ஆரின் முதல் பாடல் தான் சொன்னா தான் காதலா.
Also Read: 2023 இல் முதல் படத்திலே முத்திரை பதித்த 5 இயக்குனர்கள்.. கவினை தூக்கிவிட்ட டாடா பட கணேஷ்
அதன்பின் இவர் பல பாடல்கள் பாடியிருந்தாலும் அதிலும் குறிப்பாக எவன் டி உன்னை பெத்தான் என்ற பாடல் சூப்பர் ஹிட் கொடுத்தது. சமீபத்தில் வாரிசு படத்தில் விஜய்க்கு என்ட்ரி கொடுக்கும் மாஸ் பாடலை பாடியுள்ளார். மேலும் ஒய் திஸ் கொலவெறி என்னும் பாடலின் மூலம் மிகவும் ட்ரெண்ட் ஆனவர் தனுஷ். சமீபத்தில் விடுதலை படத்திலும் ஒரு பாடல் பாடியுள்ளார். இவர்களுக்கு முன்னோடியாக திகழ்ந்தவர் தான் விஜய். பல திறமை கொண்ட இவர் பாட்டையும் விட்டு வைக்காமல் பாடி அசத்திய பாடல்கள் ஏராளம். வெறித்தனம், குட்டி ஸ்டோரி, ஜாலியோ ஜும்கானா, ரஞ்சிதமே போன்ற பாடல்கள் இவர் குரலில் வெற்றி கண்டது.
அவ்வாறு நடிப்பில் பிரபலமான இவர்கள் தன் படத்தில் ஒன்று இரண்டு பாடல்களையாவது பாடி ட்ரெண்டாகி வருகின்றனர். மேலும் குறிப்பாக இவர்கள் படங்களில் இவர்களே பாடுவதால் சம்பளம் கொடுக்கும் வேலை கூட தயாரிப்பாளர்களுக்கு இல்லை. அதிலும் லாபம் அடைந்து வருகின்றனர் தயாரிப்பாளர்கள்.
Also Read: மாமன்னன் வடிவேலுவால் அப்செட் ஆன உதயநிதி.. பிள்ளையார் பிடிக்க குரங்காய் மாறிய கதை