திங்கட்கிழமை, ஜனவரி 27, 2025

யாருக்கும் தெரியாத 5 கேமியோ ரோல் கதாபாத்திரங்கள்.. மிர்ச்சி சிவா, சங்கர் நடித்த முதல் படம்

5 celebrities cameo appearance: எந்த ஒரு விஷயத்திலும் படிப்படியாக முன்னேறிப் போனால் வெற்றி நிச்சயம் என்று சொல்வார்கள். அதே போலவே சினிமாவிலும் சாதிக்க வேண்டும் என்று நினைத்த பிரபலங்கள் ஆரம்பத்தில் உள்ளே நுழைவதற்கு படாத பாடு பட்டு இருக்கிறார்கள். அதிலும் அவர்களுக்கு கிடைத்த ஒரு சான்சியையும் மிஸ் பண்ணி விடக்கூடாது என்பதற்காக சின்ன சின்ன கதாபாத்திரத்திலும் சினிமாவில் அவருடைய பங்களிப்பை கொடுத்திருக்கிறார்கள். அப்படி யாருக்கும் தெரியாமல் தலை காட்டிட்டு போன சில பிரபலங்களை பற்றி தற்போது பார்க்கலாம்.

மிர்ச்சி சிவா: ரேடியோ ஜாக்கியியாக இருந்து சென்னை 28 படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அப்படிப்பட்ட இவர் அடுத்தடுத்து நகைச்சுவை படங்களிலும் மொக்கை காமெடியிலும் இவருடைய தலையை அடிக்கடி காட்டிக் கொண்டு பிரபலமாகிவிட்டார். அப்படிப்பட்ட இவர் சென்னை 28 படத்தில் தான் அறிமுகமானார் என்று நினைத்திருந்தோம். ஆனால் அதற்கு முன்னதாக 12B, ஆளவந்தான் மற்றும் விசில் படத்தில் அங்கீகரிக்கப்படாத கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

சித்தார்த்: இவர் எந்த அளவிற்கு ஹீரோவாக அனைவருக்கும் பிரபலமாகி இருக்கிறாரோ, அதே அளவிற்கு ஏகப்பட்ட கிசுகிசுகளிலும் சர்ச்சக்களிலும் இவருடைய பெயர் ரொம்பவே அடிபட்டு இருக்கிறது. இருந்தாலும் இப்பொழுதும் இவர் ஹீரோவாக ஜொலிப்பதற்கு காரணம் இவர் தேர்ந்தெடுக்கும் கதையும், நடிக்கும் கதாபாத்திரம் தான். அந்த வகையில் கடைசியாக இவர் நடிப்பில் வெளிவந்த சித்தா திரைப்படம் சமூகத்திற்கு ஒரு நல்ல மெசேஜ் கொடுக்கும் படமாக வெற்றி பெற்றது. அப்படிப்பட்ட இவர் ஹீரோவாக பாய்ஸ் படத்தில் அறிமுகம் ஆவதற்கு முன் கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் பஸ்ஸில் பயணம் செய்யும் நபராக நடித்திருக்கிறார்.

Also read: கொஞ்ச நஞ்ச பேச்சா பேசினீங்க சித்தார்த்.. பில்டப் கொடுத்து சூடான தோசை கல்லில் உட்கார்ந்த 5 நடிகர்கள்

இயக்குனர் சங்கர்: இவர் சினிமாவிற்குள் நுழைந்ததே ஹீரோவாக ஆகிவிட வேண்டும் என்ற ஆசையில் தான். அதன் காரணமாகத்தான் விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்த வசந்த ராகம் படத்தில் அச்சக ஊழியர் கேரக்டரில் முதன் முதலாக நடிக்க ஆரம்பித்தார். ஆனால் அது இவருக்கு பெருசாக கை கொடுக்கவில்லை என்பதால் விஜய்யின் அப்பா எஸ்ஏ சந்திரசேகருக்கு உதவி இயக்குனராக எல்லா வேலைகளையும் பார்த்த பின்பே ஜென்டில்மேன் படத்தின் மூலம் இயக்குனராக அடி எடுத்து பிரம்மாண்ட இயக்குனராக வெற்றி பெற்று வருகிறார்.

ஏஆர் முருகதாஸ்: இவர் ஆரம்பத்தில் எஸ்ஜே சூர்யாவுக்கு உதவி இயக்குனராக சினிமாவிற்குள் நுழைந்தார். அதன் பின் எஸ்ஜே சூர்யா மூலமாக அஜித்திடம் பரிந்துரைக்கப்பட்டு தீனா படத்தின் இயக்குனராக அறிமுகமானார். அப்படிப்பட்ட இவர் ஆரம்பத்தில் மதுரை மீனாட்சி மற்றும் பூச்சூடவா படங்களில் அங்கீகரிக்கப்படாத கதாபாத்திரத்தில் நடித்த பின்பே உதவி இயக்குனராக பணிபுரிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அப்படிப்பட்ட இவர் தற்போது முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வெற்றி பெற்றுவிட்டார்.

பிக் பாஸ் ஆரவ்: இப்படி ஒரு கேரக்டர் இருக்கிறது என்ற விஷயமே பிக் பாஸ்க்கு இவர் போட்டியாளராக பங்கேற்ற பின்பு தான் பரிச்சயமானார். ஆனால் அதற்கு முன்னே அமர காவியம் மற்றும் ஓ காதல் கண்மணி படங்களில் கேமியோ தோற்றத்தில் நடித்திருக்கிறார். ஆனால் அப்பொழுதெல்லாம் இவருக்கு கிடைக்காத அங்கீகாரம் பிக் பாஸ் போயிட்டு வந்த பிறகு ஹீரோவாக மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ் படம் மூலமாக கிடைத்தது. அதன் பின் கலகத் தலைவன், மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன் படங்களில் நல்ல கதாபாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றிருக்கிறார்.

Also read: பாலிவுட் ஹீரோயினுடன் ஜோடி போடும் சிவகார்த்திகேயன்.. ஏஆர் முருகதாஸ் கூட்டணியில் அனல் பறக்கும் அப்டேட்

Trending News