விஜய் டிவியால் நொந்து போன 5 பிரபலங்கள்.. கண்ணீர் விட்டு கதறி அழுத அச்சுமா

VJ Archana: விஜய் டிவியில் வேலை செய்ததன் மூலம் பெரிய பெரிய வாய்ப்புகளை பெற்ற ஒரு சிலர் இருக்கிறார்கள். சிவகார்த்திகேயன், சந்தானம், ரோபோ சங்கர் போன்றவர்கள் எல்லாம் அப்படித்தான். ஆனால் ஒரு சிலர் இந்த சேனலில் முகத்தை காட்டியதன் மூலம் மொத்தமாக காலியும் ஆகி இருக்கிறார்கள். கீழ்கண்ட இந்த ஐந்து பிரபலங்கள் எதற்கு விஜய் டிவிக்கு போனோம் என்று நொந்து போகும் அளவுக்கு சம்பவங்கள் நடைபெற்று இருக்கின்றன.

விஜய் டிவியே வேண்டாம் என தெரித்து ஓடிய 5 பேர்

ஜூலி: ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் ஒட்டுமொத்த தமிழர்களின் மனதிலும் இடம்பெற்றவர் தான் ஜூலி. பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு இவருடைய தலையெழுத்தே மொத்தமாக மாறிவிட்டது. ஏழு வருடங்கள் கழித்து இன்று வரை ஜூலியை எங்கு பார்த்தாலும் கடுமையாக விமர்சிக்கும் மக்கள் தான் அதிகமாக இருக்கிறார்கள். அவர் மீது இருக்கும் நெகட்டிவ் விமர்சனத்தை அவரால் இன்று வரை மாற்ற முடியவில்லை.

அர்ச்சனா: சின்னத்திரையில் பல வருடங்களாக தொகுப்பாளனியாக மக்கள் மனதை வென்றவர் தான் அர்ச்சனா. ஏற்கனவே இவர் தன்னுடைய வீட்டை சுற்றிக் காட்டுகிறேன் என்ற பெயரில் யூடியூபில் டேமேஜ் ஆகி இருந்தார். போதாத குறைக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் மக்கள் இவரை ரொம்ப விமர்சிக்கும் அளவுக்கு போய்விட்டது. சமீபத்தில் நடைபெற்ற ஒரு விருது விழாவில் அர்ச்சனா இரண்டரை வருடங்கள் வீட்டில் அப்படியே இருந்து விட்டதாகவும், நெகட்டிவ் விமர்சனங்களை மட்டுமே கேட்டதாகவும் கதறி அழுது கொண்டே சொல்லி இருக்கிறார்.

Also Read:பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல் செய்யும் அட்டூழியங்கள்.. ஆண்டவரே உங்க அரசியலை எங்க கிட்ட காட்டுறீங்களே!

ரட்சிதா மஹாலக்ஷ்மி: சின்னத்திரை சீரியல் நடிகைகளின் வரிசையில் முதலிடத்தில் இருந்தவர் ரட்சிதா. இவர் விஜய் டிவியின் சரவணன் மீனாட்சி இரண்டாவது சீசனில் நடித்த பொழுது அதிகமாக கொண்டாடப்பட்டவர். அதே சமயம் ரியோ உடன் இணைந்து சரவணன் மீனாட்சி மூன்றாவது சீசனில் நடித்த பொழுது அதிகமாக ட்ரோல் செய்யப்பட்டார். அந்த சீரியல் மூலம் நான் அதிகமாக கஷ்டப்பட்டேன் என்று அவரே ஒரு பேட்டியில் சொல்லி இருக்கிறார்.

பாவனா: இந்திய அளவில் நிறைய சேனல்களில் தொகுப்பாளராக பணியாற்றியவர் தான் பாவனா. நிறைய விளையாட்டு சேனல்களுக்கு கிரிக்கெட்டில் தொகுப்பாளராகவும் வேலை செய்து இருக்கிறார். இவர் விஜய் டிவியில் சில வருடங்கள் பணியாற்றினார். விஜய் டிவியில் கலாய்ப்பதற்காக காட்டப்படும் தொகுப்பாளர்களை என்னால் நடந்து கொள்ள முடியாது என்று சொல்லி விஜய் டிவியில் இருந்து விலகி விட்டார்.

கல்யாணி: குழந்தை நட்சத்திரமாக மக்கள் மனதில் இடம் பிடித்தவர் தான் கல்யாணி. ஒரு சில படங்களில் கதாநாயகியாக நடித்த பிறகு இவர் சின்னத்திரைக்கு தொகுப்பாளனியாக திரும்பினார். விஜய் டிவியில் தொகுப்பாளினியாக இவர் பணியாற்றிய போது, உடன் வேலை செய்யும் தொகுப்பாளர்களால் அதிகமாக கிண்டல் அடிக்கப்பட்டிருக்கிறார். மக்கள் முன்னிலையில் இவருக்கு எதுவுமே தெரியாது என்பது போல் நிறைய நிகழ்ச்சிகளில் காட்டப்பட்டிருக்கிறது.

Also Read:ஜோவிகாவை காப்பாற்ற தீயாக வேலை செய்யும் வத்திகுச்சி.. மட்டமான வேலைக்கு விளக்கு பிடிக்கும் பிக்பாஸ்