எதிர்காலத்தில் சினிமாவிற்கு வர போகும் பிரபலங்களின் வாரிசுகள்.. கோலிவுட்டை மிரட்டும் நெப்போடிசம்

Kollywood Nepotisam: இந்தி திரை உலகை பொறுத்த வரைக்கும், சில குறிப்பிட்ட குடும்பங்கள் தான் தொடர்ந்து நடித்து வருவார்கள். இதைத்தான் பாலிவுட் உலகில் நெப்போடிசம் தலைவிரித்து ஆடுவதாக மீடியாக்களில் எழுதுவதுண்டு. தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை இது போன்ற வாரிசு பிரச்சனை இருந்தது கிடையாது. ஆனால் சமீப காலமாக இந்த நெப்போடிசம் கலாச்சாரம் கோலிவுட்டிலும் தலை தூக்குகிறது. எதிர்காலத்தில் தமிழ் சினிமா உலகில் தலை தூக்க இருக்கும் பிரபலங்களின் வாரிசுகளை பற்றி பார்க்கலாம்.

பிரபலங்களின் வாரிசுகள்

விஜய்: நடிகர் விஜய் சினிமாவுக்கு வரும்போது ஆரம்ப காலத்தில் அவருக்கு பெரிதாக உதவியது அவருடைய அப்பா எஸ் ஏ சந்திரசேகர் தான். விஜய் மகன் ஜேசன் சஞ்சய் ஹீரோவாக களமிறங்குவார் என ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் தன்னுடைய தாத்தா போல் இயக்குனராக தமிழ் சினிமாவில் களம் இறங்குகிறார். லைகா ப்ரொடக்ஷன் தயாரிப்பில் இயக்குனராக அறிமுகமாகும் ஜேசன் சஞ்சய் சினிமாவில் அவருடைய அப்பா மற்றும் தாத்தா போல் ஜொலிப்பாரா என காலம் பதில் சொல்லும்.

தனுஷ்: நடிகர் தனுஷின் அப்பா கஸ்தூரிராஜா கிராமத்து ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர். அவருடைய அண்ணன் செல்வராகவன் கூட இயக்குனர் மற்றும் நடிகராக தன்னுடைய பரிமாணங்களை காட்டி வருகிறார். அவருடைய முன்னாள் மனைவி ஐஸ்வர்யா இயக்குனர். தற்போது அவருடைய மகன் யாத்ரா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போல் இருப்பதாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார். விரைவில் அவரை சினிமாவில் எதிர்பார்க்கலாம்.

ஷங்கர்: தமிழ் சினிமா பட்ஜெட்டுகளில் பிரம்மாண்டம் என்ற வார்த்தையை அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் ஷங்கர். அவருடைய மகள் அதிதி மருத்துவருக்கு படித்திருந்தாலும், சினிமா துறையை தேர்ந்தெடுத்து களம் இறங்கி இருக்கிறார். நடிகை ஆக, பாடகியாக தன்னுடைய பயணத்தை தொடங்கி இருக்கும் அதிதி அடுத்தடுத்து நிறைய முன்னணி ஹீரோக்களுடன் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மணிரத்னம்: இந்திய சினிமா இயக்குனர்களில் முக்கியமானவராக இருப்பவர் மணிரத்தினம். அவருடைய மனைவி சுகாசினி பன்முக திறமை கொண்ட நடிகை என்பது எல்லோருக்கும் தெரியும். அவருக்கு அடுத்து இந்த தம்பதிகளின் ஒரே மகன் நந்தன் இயக்குனராகும் முயற்சியில் இறங்கி இருக்கிறார். அப்பாவை போல் தமிழ் சினிமாவில் தனக்கான அடையாளத்தை உருவாக்குவாரா என்பது இனி தான் தெரியும்.

அம்பிகா: நடிகைகள் அம்பிகா மற்றும் ராதா ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவை தங்கள் கைவசம் வைத்திருந்தவர்கள். வீட்டில் ராதா தன்னுடைய மகள்கள் கார்த்திகா மற்றும் துளசி இருவரையும் சினிமாவில் அறிமுகப்படுத்தியிருந்தார். இவர்களை தொடர்ந்து அம்பிகாவின் மகன் ராம்கேஷ் விரைவில் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாக இருக்கிறார்.

அஜித்: நடிகர் அஜித்குமாரின் மனைவி ஷாலினி, மச்சினிச்சி ஷாமிலி, மச்சான் ரிச்சர்ட் எல்லோருமே சினிமா துறையை சேர்ந்தவர்கள் தான். அஜித்தின் மகள் அனோஷ்காவுக்கு இப்போதைக்கு சினிமாவில் ஆர்வம் இருப்பதாக தெரியவில்லை. இருந்தாலும் இனி வரும் காலத்தில் அஜித்தின் மகன் அல்லது மகள் யாராவது ஒருவர் சினிமாவுக்கு வர வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது.

Advertisement Amazon Prime Banner