Silk Smitha : சில்க் ஸ்மிதா மறைந்து பல வருடங்கள் ஆனாலும் அவரது ரசிகர்கள் தற்போது வரை அவரது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்கள். அந்த வகையில் இன்று சில்க் ஸ்மிதாவை பற்றி பல விஷயங்கள் வெளியே வரும் நிலையில் அவர் முத்திரை பதித்த ஐந்து கதாபாத்திரங்களை பார்க்கலாம்.
வண்டிச்சக்கரம் : சில்க் ஸ்மிதா அறிமுகமான வண்டிச்சக்கரம் படம் அவருக்கு மிகப்பெரிய பெயரை பெற்று தந்தது. மேலும் இந்த படத்தின் மூலம் தான் அவருக்கு சில்க் என்ற பெயர் கிடைத்தது. இந்த படம் அவரது வாழ்க்கையில் மிகவும் மறக்க முடியாத ஒன்று.
சகலகலா வல்லவன் : எஸ் பி முத்துராமன் இயக்கத்தில் கமல், அம்பிகா, சில்க் ஸ்மிதா ஆகியோர் நடிப்பில் வெளியான படம் தான் சகலகலா வல்லவன். இந்த படம் தமிழில் வரவேற்பு கிடைத்தவுடன் பாலிவுட்டிலும் ரீமேக் செய்யப்பட்ட நிலையில் அதில் லலிதா என்ற கதாபாத்திரத்தில் சில்க் நடித்திருந்தார்.
பாயும் புலி : எஸ் பி முத்துராமன் இயக்கத்தில் ரஜினி, சில்க் ஸ்மிதா, ராதா ஆகியோர் நடிப்பில் உருவான படம் தான் பாயும் புலி. இன்றளவும் ரசிகர்களால் மறக்க முடியாத ஆடி மாச காத்தடிக்க பாடல் இந்த படத்தில் தான் இடம் பெற்றது. இப்படத்தில் சில்க் ஸ்மிதாவின் கிளாமர் நடனம் பலரையும் சுண்டி இழுத்தது.
மூன்றாம் பிறை : கமல், ஸ்ரீதேவி, சில்க் ஸ்மிதா ஆகியோர் நடிப்பில் வெளியான படம் தான் மூன்றாம் பிறை. இதில் திருமதி விஸ்வநாதன் என்ற கதாபாத்திரத்தில் சில்க் நடித்திருந்தார். இந்த படம் பாலிவுட்டில் ரீமேக் செய்யப்பட்ட நிலையில் அதிலும் சில்க் ஸ்மிதா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜானி தோஸ்த் : கே ராகவேந்திரா ராவ் இயக்கத்தில் சில்க் ஸ்மிதா, தர்மேந்திரா, ஸ்ரீதேவி மற்றும் பலர் நடிப்பில் பாலிவுட்டில் வெளியான படம் தான் ஜானி தோஸ்த். இந்த படத்தில் லைலா என்ற அற்புதமான கதாபாத்திரத்தில் சில்க் ஸ்மிதா நடித்து இருந்தார்.