வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

சம்பளத்திற்கு கூட இவ்வளவு மட்டமா நடிக்க மாட்டேன்.. விஜயகாந்த் நடிக்க முடியாதுன்னு சொன்ன 5 கதாபாத்திரங்கள்

Vijaykanth 5 Character not act: எம்ஜிஆர் ஒரு நடிகராகவும், அரசியல்வாதியாகவும் எப்படி மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்து தற்போது வரை நிலைத்து நிற்கிறாரோ அதேபோல தான் விஜயகாந்த்.  சிறந்த மனிதர், மக்களுக்காக நல்லது செய்ய நினைத்த சொக்கத்தங்கம். சக கலைஞர்களுக்கும் நல்லது கெட்டதை கூடவே இருந்து பார்த்து ஒவ்வொன்றையும் செய்து வந்த நல்ல கலைஞர். அப்படிப்பட்ட இவருடைய இறப்பு தற்போது தாங்க முடியாத துயரத்தை அனைவருக்கும் கொடுத்து இருக்கிறது.

இவர் அரசியலில் வேண்டுமென்றால் ஜெயிக்காமல் இருக்கலாம், ஆனால் ஒவ்வொருவருடைய மனதிலும் ஜெயித்துவிட்டார் என்பதற்கு உதாரணமாக வாழ்ந்து காட்டியிருக்கிறார். அப்படிப்பட்ட இவர் சினிமாவில் அதிக சம்பளத்தை கொடுத்தால் கூட இந்த மாதிரி மட்டமான சில விஷயங்களில் நடிக்க மாட்டேன் என்று உறுதியுடன் இருந்திருக்கிறார். அப்படி நடிக்க முடியாதுன்னு சொன்ன கதாபாத்திரங்கள் என்னவென்று பார்க்கலாம்.

எத்தனையோ நடிகர்கள் ஒரு சில படங்களில் தொடர் வெற்றியை பார்த்ததும் தமிழில் மட்டுமல்லாமல் மற்ற மொழிகளிலும் நடித்து கல்லா கட்ட நினைப்பார்கள். ஆனால் எவ்வளவு கோடி கொடுத்தாலும் மற்ற மொழி படங்களில் நடிக்க மாட்டேன் என்று தமிழில் மட்டும் நடித்து வெற்றி பெற்றவர். அடுத்ததாக ரஜினி, கமல், விஜய், அஜித், சிம்பு, தனுஷ் போன்ற முன்னணி நடிகர்கள் அனைவரும் விளம்பரங்களில் ஒரு காலத்தில் நடித்து வந்தார்கள்.

Also read: விளம்பரம் தேடாமல் நடிகர் உயிரை காப்பாற்றிய கேப்டன்.. மொத்த கடனையும் ஒரே செக்கில் முடித்து விட்ட சின்ன கவுண்டர்

ஆனால் அப்ப கூட விளம்பரப் படங்களில் நடிக்க விருப்பப்படாத ஒரே நடிகர் இவராகத்தான் இருக்க முடியும். அத்துடன் எக்காரணத்தைக் கொண்டும் நடிப்பில கூட நான் வில்லனாக இருக்க மாட்டேன் என்று நெகடிவ் கேரக்டரில் நடிக்காமல் இருந்திருக்கிறார். மேலும் பிளேபாய் கேரக்டரிலும், பெண்களின் மரியாதையை தவறாக சித்தரிக்கும் படங்களில் நடிக்காதவர்.

இதையெல்லாம் தாண்டி ரஜினியை விட அதிக ரசிகர்களை வைத்திருந்தவர். அதனால் தான் அரசியலுக்கு தைரியமாக வர துணிந்தார். மேலும் ரஜினியும் கருப்பு விஜயகாந்த் கருப்பு தான். ஆனால் அந்த டைம்ல ரஜினியை விட விஜயகாந்துக்கு தான் பெண்களிடம் அதிகம் வரவேற்பு இருந்தது. காரணம் இவருடைய நிஜமான கேரக்டரும், ரியல் ஹீரோ மாதிரியான நடிப்பும் பெண்களை அதிகமாகவே கவர்ந்திருக்கிறது.

அத்துடன் சினிமாவில் அதிக சம்பளத்துக்கு ஆசைப்படாத ஒரே ஒரு ஹீரோ விஜயகாந்த் மட்டும்தான். இன்னும் சொல்லப்போனால் பல ஹீரோகளுக்கு பிரமோஷன் செய்து அவர்களை கை தூக்கி விட்ட பெருமையும் இவரை தான் சேரும். அந்த வகையில் சூர்யா மற்றும் விஜய்க்கு மிகப்பெரிய உதவியே பண்ணியிருக்கிறார். இவர்களுக்கு மட்டுமில்லாமல் இன்னும் எத்தனையோ சின்ன நடிகர்களுக்கு பக்கபலமாக இருந்து சப்போர்ட் பண்ணி இருக்கிறார். இப்படி இவரை பற்றிய நல்ல விஷயங்கள் சொல்லிக் கொண்டே போகலாம்.

Also read: கண்ணீர் வெள்ளத்தில் தமிழகம், ஸ்தம்பித்த கோயம்பேடு.. மதுரை மைந்தன் விஜயகாந்த் கடந்து வந்த பாதை

Trending News