கிரிக்கெட் வீரர்கள் சினிமாவில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். அந்த வகையில் சர்வதேச அளவில் கிரிக்கெட் போட்டியில் கலந்து கொண்ட 5 வீரர்கள் தமிழ் சினிமாவில் நடித்துள்ளனர்.
இர்பான் பதான்: இந்தியாவின் மிகச் சிறந்த ஆல்ரவுண்டர் ஆவார். இடது கை வேகப்பந்து வீச்சாளர் இர்பான் பதான் அதிரடியாக விளையாடி ரன்களை குவிப்பார். இவர் தற்போது சீயான் விக்ரம் நடிப்பில் வெளிவர காத்துக்கொண்டிருக்கும் கோப்ரா படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதனை ஞானமுத்து இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹர்பஜன் சிங்: இந்திய அணியின் நம்பிக்கையான சுழற்பந்து வீச்சாளர். ஹர்பஜன் சிங் இக்கட்டான சூழ்நிலையில் இந்தியாவை வெற்றி பெறச் செய்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்காக நிறைய சாதனைகளை புரிந்தவர். இவர் பிரண்ட்ஷிப் என்ற படத்தில் நடித்து வருகிறார், விரைவில் இந்த படம் வெளிவர காத்துக் கொண்டிருக்கின்றது. அர்ஜுன் சார்ஜா மற்றும் லாஸ்லியா இந்த படத்தில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சடகோபன் ரமேஷ்: டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகள் குறைவாக விளையாடினாலும் நட்சத்திர கிரிக்கெட் வீரராக வலம் வந்தவர். இடது கை பேட்டிங்கில் அசத்துவார், அதேபோல் ஸ்பின் பவுலிங் போட்டு ஆல்-ரவுண்டராக இந்திய அணிக்காக விளையாடியவர். ஜெயம் ரவி நடித்த சந்தோஷ் சுப்பிரமணியம் படத்தில் அண்ணனாக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் சடகோபன் ரமேஷ்.
வருண் சக்கரவர்த்தி: இவர் ஒரு ஸ்பின் பவுலர் மற்றும் ஆரம்பத்தில் பஞ்சாபின் ஐபிஎல் தொடரில் விளையாட தொடங்கினார். இந்த அணியில் சிறப்பாக விளையாடி இந்திய அளவில் பிரபலமானார். இவர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளிவந்த ஜீவா என்ற படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அந்த படத்தில் ஒரு கிரிக்கெட் வீரராக நடித்திருப்பார் என்பது இன்னும் சிறப்பு அம்சம்.
டுவைன் பிராவோ: டி20 தொடரில் ஒரு மிகச் சிறந்த ஆல்ரவுண்டர் என்றால் பிரபுவுக்கு முக்கியமான இடம் உண்டு. ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக பல போட்டிகளில் விளையாடி வெற்றி பெறச் செய்துள்ளார். இவருக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் ஏராளம். தமிழக ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான இவரை சித்திரம் பேசுதடி இரண்டாம் பாகத்தில் ஒரு பாடலில் ஆட வைத்துள்ளனர். இந்த பாடல் தமிழகமெங்கும் வைரல் ஆனது குறிப்பிடத்தக்கது.