சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

5 நாட்கள் மட்டும் கால்ஷீட் கொடுத்த ரேவதி.. பாண்டியராஜன் இயக்கிய சூப்பர் ஹிட்டடித்த படம் எது தெரியுமா.?

80-களில் ரஜினிகாந்த், கமல், விஜயகாந்த் என ஜோடி போட்டு ரேவதி ரொம்ப பிஸியாக நடித்துக் கொண்டிருந்த காலம். அப்போது பாண்டியராஜன் இயக்கத்தில் நடிப்பதற்கு கால்ஷீட் கேட்டுள்ளனர்.

கால்ஷீட் இல்லை என்று ரேவதி தெரிவித்துள்ளார். பின் தயவு செஞ்சு கதையை கேளுங்கள் என கூறி, அது பிடித்துப்போக 5 நாட்கள் தான் கால்ஷீட் இருக்கு இதுக்குள்ள முடித்து விடுங்கள் என்று பாண்டிராஜுக்கு கட்டளை போட்டுள்ளார் ரேவதி.

பாண்டியன், பாண்டியராஜன், சீதா, ரேவதி, விகே ராமசாமி, ஜனகராஜ் போன்ற பிரபலங்கள் நடிப்பில் 1985-ல் உருவான படம் தான் ஆண்பாவம். இன்றளவும் காமெடி நிறைந்த இந்த படம் ரசிகர் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று வருகிறது.

சினிமாவின் உச்சத்தில் இருந்த போது ரேவதிக்கு கிடைத்த இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு படப்பிடிப்பை 5 நாட்களுக்குள் முடித்துள்ளனர். ரேவதி எதிர்பார்த்ததை விட 100 மடங்கு இந்தப்படம் ஒரு மைல் கல்லாக அமைந்தது.

பாண்டியராஜன் சவால் விட்டபடி இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது மட்டுமல்லாமல் 150 நாட்களுக்கும் மேல் ஓடி பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமாவில் பாண்டியராஜனுக்கு இயக்குனராக ஆண்பாவம் படம் ஒரு அங்கீகாரத்தை கொடுத்தது.

revathi
revathi

Trending News