ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

இதெல்லாம் எதுக்கு.? தேவையில்லாம! உயிரை விட ஏர் ஷோ முக்கியமா.?

சென்னையில் மிகச் சிறப்பான வகையில் விமான சாகச நிகழ்ச்சி நடந்து முடிந்தது. இதை சுமார் 15 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கண்டு ரசித்தனர். இருப்பினும், நிகழ்ச்சி முடிந்த பிறகு மக்கள் வீடு திரும்ப முடியாமல் டிராபிக் நெரிசலில் சிக்கி அவதிப்பட்டார்கள்.

கூட்ட நெரிசலை வீட்டிலிருந்து பார்த்தவர்கள், “நல்ல வேலை, நாம போகல” என்று பெருமூச்சு தான் விட்டார்கள். இந்திய விமானப் படை 92 ஆண்டுகள் நிறைவு செய்ததைக் கொண்டாடும் வகையில் மெரினாவில் விமான சாகச நிகழ்ச்சி நடந்தது. இதைக் காண பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் குவிந்தனர்.

காலை 11 மணிக்குத் தொடங்கிய விமான சாகச நிகழ்ச்சிகள் மதியம் 1- 1.30 மணி வரை நடந்தது. இதை ஆளுநர் ரவி, முதல்வர் ஸ்டாலின், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் நேரில் கண்டுகளித்தனர். மெரினாவில் பொதுமக்கள் இதைக் கண்டுகளிக்க 15க்கும் மேற்பட்ட இடங்களில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.

சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாலும், இத்தனை மக்கள் வருவார்கள் என்று யாரும் எதிர்பார்க்கவே இல்லை. குறிப்பாக ரயில்வே ஸ்டேஷன்களில் இருந்த கூட்டத்தை பார்த்ததும் இது சென்னையா இல்ல மும்பையா என்றே நமக்கு சந்தேகம் வந்துவிட்டது.

உயிரை காவு வாங்கிய ஏர் ஷோ

பல இடங்களில் குடிநீர் மற்றும் கழிப்பிட வசதிகள் கூட இல்லை என்று மக்கள் வேதனை தெரிவித்தார்கள். இது மட்டுமின்றி சாகச நிகழ்ச்சிகள் முடிந்து 4 மணி நேரம் ஆகியும், பல இடங்களில் டிராபிக் பாதிப்பும் மோசமாகவே இருந்தது.

இதற்கிடையே சென்னையில் விமானப் படை சாகச நிகழ்ச்சியைப் பார்க்கச் சென்ற 60 வயதான நபர் உயிரிழந்துள்ளதுள்ளார்.. ஜான் என்ற அந்த நபர் மெரினாவில் சாகச நிகழ்ச்சியைப் பார்த்துள்ளார். நிகழ்ச்சி முடிந்த நிலையில், அவர் மயங்கியதை அருகே இருந்தவர்கள் பார்த்துள்ளனர்.

அங்கிருந்தவர்கள் ஆம்புலன்ஸுக்கு கால் செய்து, சிறிது நேரத்திற்குப் பின்னரே ஆம்புலன்ஸ் அங்குச் சென்றுள்ளது. மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதிலும் சிரமம் ஏற்பட்டது. இதற்கிடையே சென்னையில் விமானப் படை சாகச நிகழ்ச்சியைப் பார்க்கச் சென்ற மேலும் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.

இது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது, அப்படி உயிரை விட முக்கியமா இந்த ஏர் ஷோ பாக்க போனுமா? வயதானவர்களுக்கு ஏன் இந்த விபரீத ஆசை என்று நெட்டிசன்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

Trending News