5 Demands after Vijayakanth’s death: நடிகரும் மற்றும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் பல வருட காலங்களாக உடல்நிலை சரியில்லாமல் ரொம்பவே அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் கடந்த வாரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் சிகிச்சை பலனின்றி டிசம்பர் 28ஆம் தேதி காலை உயிரிழந்து விட்டார். இவருடைய இறப்பை கேட்ட தமிழ்நாட்டு மக்கள் கடலென திரண்டு வந்து விஜயகாந்த்-க்கு அஞ்சலி செலுத்தி வந்தார்கள்.
அத்துடன் திரைப்பட கலைஞர்களும், அரசியல் தலைவர்களும் விஜயகாந்துக்கு நேரிலும் இணையதளத்திலும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொண்டார்கள். இந்த நிலையில் விஜயகாந்த் மனைவியும், தேமுதிக பொதுச்செயலாளருமான பிரேமலதா விஜயகாந்த் சில கோரிக்கைகளை விடுத்திருக்கிறார்.
அதில் விஜயகாந்துக்கு பொது இடத்தில் சிலை வைத்து மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்று முதலமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். அத்துடன் இதைக் கூடிய விரைவில் தமிழக அரசு செயல்படுத்தும் என்று நம்புகிறேன் என பிரேமலதா கூறியிருக்கிறார். அடுத்ததாக நடிகர் சங்கத்துக்கு அவர் பெயரை வைக்க வேண்டும் என்றும் ஆசைப்படுகிறார்.
Also read: விஜயகாந்த், ராவுத்தரை பிரிக்க நடந்த சூழ்ச்சி.. கேப்டன் எடுத்த முடிவின் பின்னணி
காரணம் நடிகர் சங்கம் ஏகப்பட்ட கடனில் இருக்கும் பொழுது விஜயகாந்த் மட்டுமே நிறைய பொது நிகழ்ச்சிகளை நடத்தி அந்த கடனை அடைத்திருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். அப்படிப்பட்ட நல்ல விஷயத்தை செய்த நன்றி கடனுக்காக அவருடைய பெயரை வைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்து வருகிறது.
இதனைத் தொடர்ந்து ஃபிலிம் இன்ஸ்டியூட்-ல ஏதாவது ஒரு இடத்துக்கு அவர் பெயர் வைக்க வேண்டும். அத்துடன் நடிகர் சங்கத்தில் அவருக்கு சிலை வைக்க வேண்டும் மற்றும் விஜயகாந்தின் சொந்த ஊரான மதுரையில் அவருடைய ஞாபகார்த்தமாக ஒரு சிலை வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.
இப்படி விஜயகாந்த் இறப்பிற்கு பின் ஐந்து கோரிக்கைகள் நிறைவேற வேண்டும் என்று கேப்டனின் குடும்பமும் ஆசைப்பட்டு வருகிறார்கள். ஆனால் இவர்கள் கேட்கும் கோரிக்கைக்கு நடிகர் சங்கமும் தமிழ்நாடு அரசும் செவிசாய்க்குமா என்று பல கேள்விகள் எழுந்து வருகிறது.
Also read: விஜயகாந்தை படிப்படியாக செதுக்கிய ராவுத்தர்.. கேப்டனின் கோட்டை சரிய காரணமாக இருந்த இரண்டு பேர்