சனிக்கிழமை, நவம்பர் 23, 2024

தலையில் மிளகாய் அரைக்கும் 5 தத்தி இயக்குனர்கள்.. 6 வருஷமாக சிக்கித் தவிக்கும் உதயநிதி

5 Directors Making Films for years: ஒரு சிறந்த இயக்குனர் என்பவர் கதை, திரைக்கதை, வசனம் மட்டுமே பெருசாக நினைத்து படத்தை இயக்குவது அல்ல. இயக்குனர்களை நம்பி பல கோடிக்கணக்கான பணத்தை வாரி இறைக்கும் தயாரிப்பாளர்களுக்கு எந்த விதத்திலும் நஷ்டத்தை ஏற்படுத்தாத வகையில் திட்டம் தீட்டுவதும் ஒரு சிறந்த இயக்குனராக கருதப்படுவார்கள். ஆனால் இப்போதைய இயக்குனர்கள் முழுக்க முழுக்க தயாரிப்பாளர்களின் தலையில் மிளகாய் அரைக்கும் விதமாகத்தான் இருக்கிறார்கள்.
அதாவது சமீப காலமாக மல்டி ஸ்டார் படங்கள் என்றும், பெரிய பட்ஜெட் படம், மிகப்பிரமாண்டமாக இருக்கும் வகையில் பல தொழில்நுட்பங்களை வைத்து இயக்குனர்கள் படங்களை எடுத்து வருகிறார்கள். இது ஒரு விதத்தில் காலத்திற்கு ஏற்ப மாறி வந்தாலும் சில விஷயங்களில் சொதப்பிக்கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் ஒரு படத்திற்கான படப்பிடிப்பு ஆரம்பித்து அதை சீக்கிரத்தில் முடித்துவிட்டு ரிலீஸ் பண்ண வேண்டும் என்ற யோசனையே இருக்க மாட்டேங்குது.

6 வருஷமாக சிக்கித் தவிக்கும் உதயநிதி

ஏதாவது ஒரு காரணங்களை சொல்லி படப்பிடிப்பு பல வருடமாக இழுத்தடிக்கப்பட்டு கிட்டத்தட்ட ஆறு வருஷமாக ஆகியும் ரிலீஸ் பண்ண முடியாமல் சில படங்கள் இருக்கிறது. இன்னும் சில படங்களின் படப்பிடிப்பு பாதிலேயே முடங்கி விடுகிறது. அதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக சில இயக்குனர்களை சொல்லலாம். அதாவது இந்தியன் 2 படம் 2017 ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார்கள். ஆனால் படப்பிடிப்பு தொடங்கி ஆறு வருஷமாக ஆன நிலையிலும் இப்பொழுது வரை முடிவுக்கு வராமல் இழுத்தடிக்கிறது.

Also read: ரஜினி படத்தை தள்ளி வைத்த ரெட் ஜெயிண்ட்.. கமுக்கமாக காய் நகர்த்திய சுந்தர் சி

இதனால் கிட்டத்தட்ட 6 வருடங்களாக இப்படத்தின் தயாரிப்பாளரான ரெட் ஜெயிண்ட் மற்றும் லைக்கா ப்ரொடக்ஷன் ரொம்பவே படாத பாடு பட்டு வருகிறது. அத்துடன் அயலான் படமும் கொரோனா காலத்திற்கு முன் ஆரம்பித்து தற்போது வரை முடிவுக்கு வராமல் இருக்கிறது. அதே மாதிரி கௌதமேனன் இயக்கத்தில் துருவ நட்சத்திரம் படமும் பண பிரச்சினையால் முடங்கி கிடக்கிறது. இப்படி பல படங்களை பற்றி லிஸ்ட் போட்டுக் கொண்டே இருக்கலாம்.

இதற்கெல்லாம் காரணம் நிதி நெருக்கடி தான். அதாவது படப்பிடிப்பின் போது ஹீரோக்கள் வரவில்லை என்றால் உடனே ஷூட்டிங் நிறுத்தி விடுகிறார்கள். இதனாலேயே படப்பிடிப்பு தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது. இதற்கு ஒரு தீர்வாக ஹீரோ வரவில்லை என்றால் மற்ற காட்சிகளை எடுத்தோ அல்லது வேறு ஒருவரின் சீனை எடுத்திருந்தால் சரியான நேரத்தில் படப்பிடிப்பை முடித்திருக்கலாம்.

அந்த வகையில் கௌதம் மேனன், சங்கர், வெற்றிமாறன், அயலான் படத்தின் இயக்குனர் ரவிக்குமார், நரகாசுரன் படத்தின் இயக்குனர் கார்த்திக் நரேன் இவர்களெல்லாம் எடுக்கக்கூடிய படங்கள் கிட்டத்தட்ட ஐந்து வருடங்களுக்கு மேலாகியும் ரிலீஸ் பண்ண முடியாமல் தவித்து வருகிறார்கள். இதனால் தயாரிப்பாளர்களுக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டு சிக்கலில் மாட்டிக்கொண்டார்கள்.

Also read: உங்களிடம் கெஞ்சி பொழப்பு நடத்தனும் அவசியம் இல்ல.. ரெட் ஜெயிண்ட் உதயநிதி இல்லாமல் சாதிக்கும் லியோ

- Advertisement -spot_img

Trending News