வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

கத கதையா சொல்லி காக்கா பிடிக்க நினைத்த 5 இயக்குனர்கள்.. தளபதி 69-க்கு லாக் ஆன நெருப்பு குமார்

Thalapathy 69: GOAT படவேலைகள் முடிவதற்குள்ளேயே, தளபதி 69 பஞ்சாயத்து பெரிய விஷயமாக ஆகிவிட்டது. இதற்கு முக்கிய காரணம் இது விஜய் நடிக்க இருக்கும் கடைசி படம் என்பதால் தான். இந்த படம் எந்த விதத்திலும் சோடை போய்விடக் கூடாது என்பதில் விஜய் ரொம்பவும் உஷாராக இருக்கிறார். சினிமாவை விட்டு விலகும் பொழுது தரமான வெற்றியுடன் விலக நினைக்கிறார். விஜய் இந்த படத்திற்காக 5 இயக்குனர்களிடம் கதை கேட்டு இருக்கிறார். அதில் நெருப்பான இயக்குனர் ஒருவரை தான் கடைசியாக லாக் பண்ணி இருக்கிறார். விஜய்க்கு கதை சொன்ன ஐந்து இயக்குனர்களை பற்றி பார்க்கலாம்.

தளபதிக்கு கதை சொன்ன 5 இயக்குனர்கள்

கார்த்திக் சுப்புராஜ்: இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் விஜய் சேதுபதிக்கு தமிழ் சினிமாவில் அடையாளத்தை வாங்கி கொடுத்தவர். இவர் ரொம்பவும் குறுகிய காலகட்டத்திலேயே ரஜினியை பேட்ட படத்தின் மூலம் இயக்கினார். ஜிகர்தண்டா படம் இவருக்கு பெரிய வெற்றி படமாக அமைந்தது. அதைத் தொடர்ந்து சமீபத்தில் எஸ் ஜே சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் நடிப்பில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தை இயக்கினார். இதைத்தொடர்ந்து இவருக்கு தளபதி 69 படத்திற்கு கதை சொல்லும் வாய்ப்பு கிடைத்தது.

ஆர்ஜே பாலாஜி: சினிமாவைப் பற்றி சரியாகத் தெரிந்து கொள்ளாமலேயே உள்ளே வந்தவர் தான் ஆர் ஜே பாலாஜி. ஒன்று இரண்டு படங்களில் நடித்த பிறகு அவர் தேர்ந்தெடுக்கும் கதைகள் எல்லாம் ரொம்பவும் வித்தியாசமாக இருக்கிறது. இப்போதைய சமூக நிலையை நக்கல், நையாண்டி கலந்து சொல்வதில் திறமையானவராக மாறிவிட்டார். ஆர் ஜே பாலாஜி விஜய்க்கு கதை சொல்லி இருக்கிறார். இந்த கதை ஓரளவுக்கு ஓகே ஆகிவிட்டதாக கூட கடந்த வாரத்தில் செய்திகள் வெளியானது.

அந்தோணி பாக்யராஜ்: ஜெயம் ரவி நடித்த சைரன் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் தான் அந்தோணி பாக்யராஜ். விசுவாசம், இரும்புத்திரை போன்ற படங்களுக்கு ரைட்டராக இதற்கு முன்பு பணியாற்றி இருக்கிறார். இவருக்கு விஜய் படத்திற்கு கதை சொல்லும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இளம் இயக்குனராக இருந்தாலும் தன்னுடைய வித்தியாசமான கதையின் மூலம் தளபதி 69 படத்திற்கு இந்த இயக்குனர் அணுகி இருக்கிறார்.

அட்லி: நடிகர் விஜய்க்கு ஆஸ்தான இயக்குனராக இருந்தவர் தான் இயக்குனர் அட்லி. இன்று அட்லி பாலிவுட் வரை சென்றிருப்பதற்கு விஜய் மட்டும் தான் முக்கிய காரணம். ராஜா ராணி படத்திற்கு பிறகு அட்லிக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் கொடுத்தது விஜய் மட்டும் தான். இந்தி சினிமா உலகில் ஜவான் படம் வெற்றி அடைந்ததை தொடர்ந்து, விஜய் நடிக்க இருக்கும் கடைசி படத்தை அட்லி தான் இயக்கப் போகிறார் என சொல்லப்பட்டது.

ஹெச்.வினோத்: சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று போன்ற படங்களின் மூலம் அடையாளப்படுத்தப்பட்டவர் தான் ஹெச்.வினோத். இதைத் தொடர்ந்து அஜித்துடன் நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு என தொடர்ந்து மூன்று படங்களில் பணியாற்றினார். துணிவு இவர்களது கூட்டணியில் பெரிய வெற்றியை பெற்றது. இடைத்தொடர்ந்து தளபதி 69 படத்திற்கு வினோத், விஜய்க்கு கதை சொல்லி இருக்கிறார். அந்த கதை பிடித்து போக இப்போது அந்த படத்தை இயக்கும் வாய்ப்பையும் பெற்றுவிட்டார்.

Trending News