போஸ்டர் வெளியிட்டு நிறுத்தப்பட்ட அஜித்தின் 5 படங்கள்.. மிரட்டலான காங்கேயன் போஸ்டர்

ஒரு படத்தை எடுத்து முடிப்பதும், ஒரு குழந்தை பிறப்பதும் சமம் என நிறைய தயாரிப்பாளர்கள் சொல்லுவார்கள். இதற்கு காரணம் ஒட்டு மொத்த நடிகர்கள் மற்றும் டெக்னீசியன் வேலை ஒன்று கூட்டி ஒரு படம் எடுப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல.

படம் எடுத்து முடித்து ரிலீஸ் செய்ய முடியாமல் எத்தனையோ கதைகள் கிடப்பில் போடப்பட்டிருக்கின்றன. அதேபோன்றுதான் ஓரளவுக்கு உறுதியாகி படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் போதே நிறுத்தப்பட்ட படங்களும் இருக்கின்றன. போஸ்டர் ரிலீஸ் ஆகி பாதியில் நிறுத்தப்பட்ட படங்கள் நடிகர் அஜித்குமாருக்கும் உண்டு அப்படிப்பட்ட ஐந்து படங்களை பற்றி பார்க்கலாம்.

ஏறுமுகம்: நடிகர் அஜித்குமார் மற்றும் இயக்குனர் சரண் கூட்டணியில் அமர்க்களம் படம் பயங்கர வெற்றியை பெற்றது. அதை தொடர்ந்து இவர்கள் இருவரும் ஏறுமுகம் என்னும் படத்தில் இணைந்தார்கள். 40% படப்பிடிப்பு முடிந்த நிலையில் அஜித் இந்த படத்தின் கதை தனக்கு திருப்தியாக இல்லை என சொல்லிவிட்டார். அஜித் விலகிய பிறகு இந்த படத்தில் விக்ரம் இணைந்து படம் பெயர் ஜெமினி என மாற்றப்பட்டது.

சாருமதி: வான்மதி, அமராவதி போன்ற படங்கள் லிஸ்டில் வந்திருக்க வேண்டிய படம் தான் சாருமதி. இந்த படத்திற்கு தேவா இசை அமைத்து பாடல்கள் கூட வெளியானது. அதன் பின்னர் அஜித் குமார் இந்த படத்தில் இருந்து விலகி விட்டார். அத்தோடு பட குழுவினர் இந்த படத்தையும் கிடப்பில் போட்டு விட்டனர்.

இதிகாசம்: சிட்டிசன் படத்திற்கு பிறகு இயக்குனர் சரவண சுப்பையா உடன் இணைந்து அஜித் பணியாற்றி இருக்க வேண்டிய படம் இதிகாசம். வெள்ளை குதிரை மேல் ராஜா கெட்டப்பில் அஜித் உட்கார்ந்திருக்கும் இந்த படத்தின் போஸ்டர் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது. ஆனால் தனிப்பட்ட காரணங்களால் இந்த படம் முடிக்கப்படாமல் கைவிடப்பட்டது.

திருடா: இயக்குனர் ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் அஜித் மற்றும் த்ரிஷா நடித்திருக்க வேண்டிய படம் திருடா. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன் அஜித் குறுந்தாடி வைத்துக்கொண்டு ஸ்டைலான டாக்டராக போஸ் கொடுத்திருப்பார்.

காங்கேயன்: போஸ்டரிலேயே அஜித் மிரட்டி இருந்த படம் தான் காங்கேயன். இந்த படத்தில் அஜித்குமார் நான்கு வேடங்களில் நடிக்க இருப்பதாக கூட அப்போது தகவல்கள் வெளியானது. பிரபல இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில், ஏ ஆர் ரகுமான் இசையில், வைரமுத்து வரிகளில் உருவாகி இருக்க வேண்டிய இந்த படம் படப்பிடிப்பு தொடங்கப்படாமல் கைவிடப்பட்டது.

Next Story

- Advertisement -