5 Evergreen Sundar C comedy movies: காமெடி நிறைந்த பொழுது போக்கு திரைப்படம் என்றால் கண்டிப்பாக சுந்தர்சியின் படங்கள் இடம்பெறாமல் போவதில்லை. அந்த அளவுக்கு படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை வயிறு வலிக்க வைத்து விடுவது சுந்தர் சி யின் வெற்றி தந்திரம். எத்தனை முறை இவரது படங்களை பார்த்தாலும் முதலில் பார்ப்பது போன்று ரசிக்க வைத்து விடுவது இவரது படங்களின் தனிச்சிறப்பு. எப்போதுமே மறக்க முடியாத சுந்தர் சி யின் 5 படங்களை காணலாம்.
கலகலப்பு: சுந்தர் சி தான் இருக்கும் அனைத்து திரைப்படத்திலும் வசனங்களை முன்கூட்டியே ஒரு முறைக்கு பலமுறை சொல்லிப் பார்த்து அந்த வசனம் ரசிகர்களுக்கு ஈசியாக வருவது போல் இருந்தால் மட்டுமே பயன்படுத்துவாராம் அந்த அளவு கடின யோசனையுடன் விமல், மிர்ச்சி சிவா,அஞ்சலி, ஓவியா மற்றும் சந்தானம் நடித்த கலகலப்பு படத்தில் ஒவ்வொரு வசனத்தையும் பார்த்து பார்த்து செதுக்கியிருந்தார். எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத திரைப்படமாக காமெடியில் சலசலப்பை உண்டாக்கி இருந்தது இந்த கலகலப்பு.
முறை மாமன்: மணிவண்ணனின் உதவி இயக்குனராக இருந்த சுந்தர் சி இயக்கிய முதல் படம் முறைமாமன். ஜெயராம், குஷ்பூ, கவுண்டமணி, மனோரமா போன்ற முன்னணி நட்சத்திரங்கள் காமெடியில் வெளுத்து வாங்கினர் எனலாம். சிறுசு பெருசு என ஜெயராம் கவுண்டமணி அடித்த லூட்டிகளால் தமிழ் ரசிகர்கள் ஜெயராமை கொண்டாடினர்
வின்னர்: பிரசாந்த், வடிவேல், கிரண் நடித்து வெளிவந்த வின்னர் படத்தின் ஒவ்வொரு காட்சிகளின் வசனங்களையும் ரசிகர்கள் மனதில் பதிய வைத்துவிட்டார் சுந்தர் சி. இப்படத்தில் இடம்பெற்ற கட்டதுரை கைப்புள்ள கேரக்டரை தமிழ் சினிமா ரசிகர்கள் எளிதில் மறக்க முடியுமா?
தலைநகரம்: சுந்தர் சி ஹீரோவாக அறிமுகமான முதல் திரைப்படம் தலைநகரம். அழுத்தமான கதையுடன் காமெடியில் அமர்க்களம் பண்ணி இருந்தார் சுந்தர் சி. “பில்டிங்க ஸ்ட்ராங் பேஸ்மெண்ட் வீக்”, “நானும் ரவுடிதான்” போன்ற வசனங்கள் இளசுகள் அடிக்கடி பயன்படுத்தும் பேவரைட் வசனங்கள் ஆகும்.
உள்ளத்தை அள்ளித்தா: 1996 ஆண்டு கார்த்திக், ரம்பா, மணிவண்ணன், கவுண்டமணி போன்ற முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் உள்ளத்தை அள்ளித்தா. இப்படத்தில் உள்ளது போல் வேறு எந்த படத்திலும் கிட்னாப் சீன் வைத்திருக்க மாட்டார்கள். திரில்லராக அல்ல காமெடியாக!
டேய் கிட்னா நாயே! என்று ஆரம்பித்து படிப்படியாக விலையை குறைத்து கிட்நாப் சம்பவம் அரங்கேற்றி இருந்தது காமெடியின் உச்சம். இந்த காட்சியின் தொடக்கத்திலேயே நடிகர் கார்த்திக் சிரித்து சொதப்ப, கார்த்திக்கின் கண்ணில் கிளிசரின் போட்டு சீன் எடுத்தார்களாம் அப்படி இருந்தும் முகத்தை மறைத்து சிரிப்பை அடக்கிக் கொண்டு நடித்தாராம் கார்த்திக்.
Also read: குஷ்பூ சுந்தர் சி இன் பகிரை கிளப்பும் சொத்து மதிப்பு.. அரண்மனை10 வரை தயாரிப்பதற்கு குவிந்த காசு