வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

நாட்டில் பணவீக்கம் அதிகரிக்க இந்த 5 பொருட்களே காரணம்.. மத்திய நிதித்துறை செயலர் விளக்கம்

நாட்டில் ஐந்து பொருட்கள் தான் பணவீக்கத்தில் பிரச்சனை ஏற்படுத்துவதாக மத்திய நிதித்துறை செயலர் துஹின் காந்த பாண்டே தெரிவித்துள்ளார்.

பணவீக்கம் என்பது சந்தையில் உள்ள பொதுவான விலை உயர்வு. நாட்டின் பணமதிப்பில், பொருட்கள் வாங்கும் திறன் சந்தையில் குறைந்து போவதைக் குறிக்கும் மற்றும் வாங்கும் பொருட்களின் விலை அதிகரிப்பது. அதாவது, அதிக பணம் செலுத்தி, பொருட்களை வாங்கும் நிலையாகும். இது ஒவ்வொரு காலக்கட்டத்தில் வரும். அப்போது இதுகுறித்து அரசு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது வழக்கம்.

பணவீக்கத்துக்கு 5 பொருட்கள்தான் காரணம்

இந்த நிலையில், டில்லியில் ஆங்கில வணிக ஊடகத்தின் சார்பில் உலக தலைமைத்துவ மாநாடு நடைபெற்றது. இதில் பங்கேற்ற மத்திய நிதித்துறை செயலர் துஹின் காந்த பாண்டே பேசியதாவது:

மத்திய அரசின் எத்தனையோ முயற்சிகளுக்கு இடையிலும் நாட்டில் இந்தப் பணவீக்கம் அதிகரித்து விடுகிறது. இதற்கு இந்து பொருட்கள்தான் காரணமாக உள்ளன.

அதன்படி, தக்காளி, வெங்காயம், உருளைக்கிழங்கு, தங்கம் மற்றும் வெள்ளி ஆகிய ஐந்து பொருட்கள்தான். அவைதான் நாட்டில் பணவீக்கப் பிரச்சனையை ஏற்படுத்துகின்றன. நம் நாட்டி மக்கள் தொகை ஏற்கனவே 156 கோடியாக இருக்கும் நிலையில் இதில் 12 கோடி பேர் வேலைக்குச் செல்லும் வயதில் உள்ள மக்களாவர்.

வளர்ந்த இந்தியா என்ற இலக்கை நோக்கி செல்லும் நமது இந்தியாவின் மொத்தமாக உள்ள தொழிலாளர்கள் எண்ணிக்கையில் பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கை என்பது 70 சதவீத்துக்கு மேல் இருக்கிறது என நம்புகிறோம். நமது வளர்ச்சிக்கு எதிராக இருக்கும் தடைகளை சமாளித்து தான் நாம் வளர்ந்தாக வேண்டிய நிலையில் இருக்கிறோம்.

அதன்படி, ஆண்டுதோறும் பருவமழை பெய்ய வேண்டும். கிராமங்களில் வசிக்கும் மக்களின் பொருளாதார நிலை உயரவும் அவர்களின் பொருட்களின் தேவையும் நிவர்தி ஆக வேண்டும்.எனவே நாட்டில் மேற்கொள்ளும் பொருளாதாரா சீர்த்திருத்தங்களை தனியார் மயமாக்கல் என்ற கண்ணோட்த்திலேயே பார்க்க் கூடாது.

அது உருவாக்கும் சமூக முன்னேற்றம், தொழில் செய்ய மேற்கொள்ள உதவும் சூழலையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். இதற்கு அனைவரும் இணைந்து செயல்புரிய வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும், இந்த ஐந்து பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு கடுமையான நடவடிக்கை எடுத்து மக்களின் சுமையைக் குறைக்க வேண்டும் என குரல் எழுந்து வருகிறது.

Trending News