வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

2022-ல் அசோக் செல்வன் கொடுத்த 5 தோல்வி படங்கள்.. மொத்தமாக ஊத்தி முடிய வெங்கட் பிரபுவின் மன்மத லீலை

அசோக் செல்வன் திறமையான நடிகராக இருந்தும் தற்போது வரை அவரின் நடிப்பு திறனுக்கு ஏற்ற படம் அமையவில்லை என்ற தான் சொல்ல வேண்டும். இந்த ஆண்டு 2022 இல் அவருக்கு நிறைய படங்கள் வெளியானாலும் எதுவுமே வெற்றி பெறவில்லை. அவ்வாறு அசோக் செல்வன் தொடர்ந்து கொடுத்த 5 தோல்வி படங்களை இப்போது பார்க்கலாம்

மன்மத லீலை : வெங்கட் பிரபு மாநாடு என்ற மிகப்பெரிய வெற்றி படத்தை கொடுத்த பிறகு அவரது இயக்கத்தில் அசோக் செல்வன் நடிப்பில் வெளியான திரைப்படம் மன்மத லீலை. முழுக்க முழுக்க காதல் படமாக வெளியான இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் இருந்து நெகடிவ் விமர்சனங்கள் வந்ததால் படம் தோல்வியை சந்தித்தது.

Also Read : 3 வருடம் என் பக்கத்தில் வராதீங்க.. அதிர்ச்சி தகவலை வெளியிட்ட அசோக் செல்வன்

நித்தம் ஒரு வானம் : அசோக் செல்வன், ரிது வர்மா, அபர்ணா பால முரளி மற்றும் பல நடிப்பில் கார்த்திக்கு இயக்கத்தில் வெளியான திரைப்படம் நித்தம் ஒரு வானம். இந்த படத்தில் நடிகர் ஜீவாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படம் வந்ததே தெரியாத அளவுக்கு திரையரங்குகளில் ஓடியது.

வேழம் : 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் அசோக் செல்வன், ஜனனி, ஐஸ்வர்யா மேனன் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் வேழம். இந்தப் படத்தை சந்தீப் ஷ்யாம் இயக்கியிருந்தார். அசோக்செல்வனின் இந்த படத்திற்கும் மோசமான விமர்சனங்கள் தான் கிடைத்தது.

Also Read : வளரத் துடிக்க போராடும் 5 இளம் நடிகர்கள்.. அப்படி முத்திரை குத்தப்பட்ட அசோக் செல்வன்

சில நேரங்களில் சில மனிதர்கள் : விஷால் வெங்கட் இயக்கத்தில் இந்த ஆண்டு தொடக்கத்திலேயே அசோக் செல்வன், நாசர், மணிகண்டன் மற்றும் பல பிரபலங்கள் நடித்த வெளியான திரைப்படம் சில நேரங்களில் சில மனிதர்கள். மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான இந்தப் படம் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தான் தந்தது.

ஹாஸ்டல் : சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் அசோக் செல்வன், பிரியா பவானி சங்கர் பல முக்கிய பிரபலங்கள் நடிப்பில் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியான திரைப்படம் ஹாஸ்டல். ஹாஸ்டல் படமும் அசோக் செல்வனை காலை வாரிவிட்டது. போட்ட வசூலை கூட இந்த படம் எடுக்க முடியவில்லை.

Also Read : அசோக் செல்வன், பிரியா பவானி சங்கர் செய்யும் அட்டூழியம்.. ஹாஸ்டல் படம் எப்படி இருக்கு.?

Trending News