ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

வாரிசுகளை வளர்க்க முடியாமல் துடிக்கும் 5 அப்பாக்கள்.. மணிரத்தினம் வரை போய் தோற்ற லவ்வர் பாய்

5 fathers who are struggling to raise heirs in tamil cinema:  எந்த ஒரு தந்தையும் தனக்குப் பின் தன் புகழும் மதிப்பும் தனது வாரிசுக்கு தன்னைவிட பல மடங்கு கிடைக்க வேண்டும் என்று ஆசை கொள்வதில் தவறு ஏதுமில்லை. தமிழ் சினிமாவில் புகழின் உச்சம் தொட்ட  பிரபலங்களின் வாரிசுகள் ஜொலிக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.  அப்படியான ஐந்து அப்பாக்களை காணலாம்.

பாரதிராஜா-மனோஜ்: தமிழ் சினிமாவின் வரையறையை உடைத்து சினிமாவுக்கு புது அத்தியாயம் எழுதியவர் இயக்குனர் இமயம் பாரதிராஜா. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளிலும் முடிசூடா மன்னனாக திகழ்ந்த பாரதிராஜாவின் மகன் மனோஜ் அவர்கள் தாஜ்மஹால் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.  அல்லி அர்ஜுனா, சமுத்திரம் போன்ற படங்களில் நடித்திருந்தாலும் முன்னணி நடிகராக வர இயலாமல் போனது.

பாக்யராஜ்- சாந்தனு: 80ஸ் மற்றும் 90ஸ் பாக்கியராஜிற்கு என்று தனி பெண் ரசிகர்கள் அதிகமாக இருந்த காலம் அது.  அந்த அளவு குடும்ப பாங்கான திரைக்கதையை அற்புதமாக வெளிப்படுத்துவதில் வல்லவர். பாக்யராஜ் அவரின் மகன் சாந்தனு நடனத்தில் தனது தனித்திறமை நிரூபித்தாலும் அவருக்கான கதாபாத்திரங்கள் அமையாது போகவே திரையில் காலம் கடந்தும் ஜொலிக்க இயலாமல் தடுமாறி வருகிறார்.

பாண்டியராஜன்- பிருத்விராஜ்: நடிகர் மற்றும் இயக்குனர் பாண்டியராஜனின் மகனான பிருத்விராஜ் தனது தந்தையின் “கைவந்த கலை” படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். அவர் அப்பாவின் இயக்கத்தில் சில படங்களில் நடித்திருந்தாலும்  பாண்டியராஜன் அளவிற்கு திரையில் அங்கீகாரம் கிடைக்காமல் மிகவும் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறார். 18 வருடங்களுக்குப் பின் இவர் நடித்த ப்ளூ ஸ்டார் படம் இவருக்கும் பாக்கியராஜ் மகன் சாந்தனுக்கும்  திருப்புமுனையாக இருக்கும் என நம்புவோம்

பி வாசு- சக்தி: 90 s காலகட்டம் தொடங்கி இன்றைய சந்திரமுகி வரை முன்னணி இயக்குனராக இருப்பவர் பி. வாசு இவரது மகன் சக்தி, “தொட்டால் பூ மலரும்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஏற்ற இறக்கங்கள் நிறைந்த இவரது சினிமா வாழ்க்கையில்  மதுவிற்கு அடிமையானதால் பல பட வாய்ப்புகளை இழந்து தனது நற்பெயரை அவரே கெடுத்துக் கொண்டார்

கார்த்திக்- கௌதம் கார்த்திக்: மணிரத்தினத்தின் கடல் படத்தின் மூலம் அறிமுகமான இந்த சாக்லேட் பாய் சர்ச்சையான கதைகள் என்றாலும் ஓகே சொல்லி நடித்து விடுவார். இருந்தாலும் இவர் தனது தந்தை அக்னி நட்சத்திரம் கார்த்திக் போல் திரையில் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துக் கொள்ள முடியாமல் போராடி வருகிறார்.

தற்போது அதே மணிரத்தினத்துடன் தக் லைப்பில் இணைந்துள்ளார் கௌதம் கார்த்திக்  தோற்கிரமோ ஜெயிக்கிறமோ முக்கியம் இல்ல மக்கள் நம்மள நினைக்கிறாங்கிறது தான் முக்கியம். அந்த வகையில ரசிகர்கள் தன் மனதிற்கு பிடித்த நடிகர்களையும் அவரது வாரிசுகளையும் விட்டுக் கொடுக்காமல் அவர்களுக்கு உரிய சப்போட்ட அளித்து தான் வருகிறார்கள் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

Trending News