வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

மாஸ் ஹீரோக்கள் இயக்கிய 5 படங்கள்.. 125-வது படத்தில் டைரக்டராக அவதாரம் எடுத்த வில்லாதி வில்லன்

தென்னிந்திய சினிமாவில் புகழின் உச்சிக்கு சென்ற நடிகர்கள் நடிகர்களாக மட்டுமல்லாமல் இயக்குனர்களாகவும் அவதாரம் எடுத்துள்ளனர். அதுவும் அவர்களே இயக்கிய படத்தில் ஹீரோ கதாபாத்திரத்திலும் நடித்து வெற்றி கண்டுள்ளனர்.

நாகேஷ்:1985 ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் காமெடிக்கு பெயர் போனவர் ஆன நாகேஷ் இயக்கிய திரைப்படம் பார்த்த ஞாபகம் இல்லையோ. இவருடைய முகபாவனைகள் நடன அசைவுகள் தருணத்திற்கு ஏற்ப பேசும் வார்த்தைகளைக் கொண்டு அமைந்த நகைச்சுவை காட்சிகள் ஆனது திரைப்படங்களின் வெற்றிக்கு அடிக்கல் ஆக அமைந்தது. பார்த்த ஞாபகம் இல்லையோ என்ற படத்தில் நாகேஷ் அவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அவரே அந்தப் படத்தை இயக்கிய இயக்குனராகவும் அவதாரம் எடுத்திருந்தார்.

Also Read: நாகேஷ், சிவாஜியுடன் நடித்த முதல் மற்றும் கடைசி திரைப்படம்.. சூப்பர் ஸ்டாரோட முடிந்து போன சகாப்தம்

விஜயகாந்த்: 2010 ஆம் ஆண்டு நடிகர் விஜயகாந்த் எழுதிய இயக்கிய ஒரு அதிரடி திரைப்படம் விருதகிரி. இதில் விஜயகாந்த் உடன் மீனாட்சி தீக்ஷத், மாதுரி இடகி மற்றும் அருண்பாண்டியன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். விஜயகாந்த் விருதகிரி எனும் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இதில் தனது நண்பரின் மகளை கடத்தினவர்களை கண்டுபிடித்து அவர்களுக்கு தண்டனை கொடுப்பது போல இப்படமானது அமைந்துள்ளது. விருதகிரி படம் தான் விஜயகாந்த் அவர்கள் இயக்கிய முதல் திரைப்படம் ஆகும்.

சத்யராஜ்: 1995 ஆம் ஆண்டு நடிகர் சத்தியராஜ் இயக்கி நடித்து வெளிவந்த அதிரடி திரைப்படம் வில்லாதி வில்லன். இப்படத்தை இயக்கியதோடு படத்தில் மூன்று முக்கிய வேடங்களிலும் நடித்துள்ளார். இது சத்யராஜ் இயக்கிய முதல் திரைப்படம் ஆகும். இதில் சத்யராஜுடன் நக்மா, ராதிகா, கவுண்டமணி உள்ளிட்ட ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இது சத்யராஜ் நடிப்பில் வெளிவந்த 125 ஆவது திரைப்படம் ஆகும். நடிகர் சத்தியராஜ் வில்லத்தனத்தில் ஆரம்பித்து கதாநாயகனாக மாறி தற்பொழுது குணச்சித்திர நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

சரத்குமார்: 2006 ஆம் ஆண்டு நடிகர் சரத்குமார் நடித்து இயக்கிய திரைப்படம் தலைமகன். இதில் சரத்குமார் உடன் நயன்தாரா, வடிவேலு மற்றும் விஜயகுமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இவர் ஒரு சிறந்த நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனராகவும் இந்த படத்தின் மூலம் அவதாரம் எடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் இன்றளவும் சிறப்பு தோற்றத்திலும், ஹீரோ கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார்.

Also Read: எம்ஜிஆருக்காக பாலச்சந்தரை பகைத்துக் கொண்ட நாகேஷ்.. பூதாகரமாக வெடித்த சண்டை

ரமேஷ் அரவிந்த்: 2015 ஆம் ஆண்டு இயக்குனர் ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் வெளியான ஒரு காமெடி திரைப்படம் உத்தம வில்லன். இதில் கமலஹாசன் இரட்டை வேடத்தில் நடித்து அசத்தியிருப்பார். படத்திற்கு ஜிப்ரான் அவர்கள் இசையமைத்துள்ளார்.

இவ்வாறு இந்த 5 நடிகர்களும் படங்களில் நடிப்பதை தாண்டியும் இயக்குனராக வேண்டும் என்ற ஆசையை நிறைவேற்றிக் கொண்டனர். அதுவும் நடிகர் சத்தியராஜ் அவர்கள் இயக்கி நடித்த வில்லாதி வில்லன் திரைப்படத்தில் மூன்று கதாபாத்திரங்களில் நடித்த அசத்தி இருப்பார்.

Also Read: நாகேஷுக்கு இழைக்கப்பட்ட அநீதி.. கடைசி காலத்தில் கமல் படத்தால் கிடைத்த கௌரவம்

Trending News