திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

கேரியர் பெஸ்டாக வெங்கட் பிரபு கொடுத்த 5 படங்கள்.. விஜய் மெர்சலான சூப்பர் ஹிட் படம்

விஜய் படங்கள் என்றாலே எதிர்பார்ப்பிற்கும் மற்றும் ஆரவாரத்திற்கும் பஞ்சம் இல்லை. அத்தகைய சிறப்புகளை பெற்றவர் இவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 இல் நடிக்க இருக்கிறார். இந்நிலையில் விஜய்யையே வெங்கட் பிரபு தன்னுடைய ஒரு படத்தின் மூலம் மெர்சல் ஆக்கி இருக்கிறார்.

மேலும் அந்த படத்தை இயக்கிய வெங்கட் பிரபு அதன் மூலம் கவனம் பெற்றார். இதை தொடர்ந்தே இவர் தற்போது முக்கிய இயக்குனர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளார். மேலும் கேரியர் பெஸ்ட் ஆக இவர் கொடுத்த 5 படங்களை பற்றி இங்கு காணலாம்.

Also read: 30 வயது வித்தியாசம், விஜய்க்கு ஜோடியாகும் விஜய் சேதுபதியின் மகள்.. இளசாக பிடிச்சுட்டு வந்த வெங்கட் பிரபு

சென்னை 28: 2007ல் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவந்த படத்தில் ஜெய், சிவா, பிரேம்ஜி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். நண்பர்களுக்குள்ளே, தெருவில் விளையாடக்கூடிய கிரிக்கெட்டை மையமாக கொண்டு கதை அமைக்கப்பட்டிருக்கும். இப்படம் மக்களிடையே நல்ல விமர்சனத்தை பெற்று அதிக வசூலை பெற்று தந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கோவா: 2010 வெங்கட் பிரபு இயக்கத்தில் அரவிந்த் ஆகாஷ், ஜெய், பிரேம்ஜி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். இப்படம் வாலிப வயதில் ஏற்படும் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ளும் நண்பர்களை மையமாகக் கொண்டு கதை அமைக்கப்பட்டிருக்கும். மேலும் படம் முழுக்க நகைச்சுவை இடம் பிடித்ததால் மக்களிடையே நல்ல விமர்சனத்தை பெற்று தந்தது. ஜாலியாக, இளமையை கொண்டாடும் விதமாக இப்படம் அமைந்திருக்கும்.

Also read: படத்தின் பட்ஜெட்டை சம்பளமாக கேட்டா நியாயமா.? கும்பிடு போட்டு தளபதி 68க்கு ஏஜிஎஸ் போட்ட கணக்கு

சரோஜா: 2008ல் வெங்கட் பிரபு இயக்கத்தில் காமெடி கலந்த திரில்லர் படம் தான் சரோஜா. இப்படத்தில் சிவா, சரண், வைபவ், காஜல் அகர்வால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். மேலும் இப்படத்தை கொண்டு செல்லும் தோரணம் நன்றாக அமைந்திருக்கும். அதை தொடர்ந்து இப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று பாக்ஸ் ஆபிஸ் வசூலை பெற்றுத் தந்தது.

மங்காத்தா: 2011ல் அஜித்தின் நடிப்பில் மாபெரும் வெற்றி கண்ட படம் தான் மங்காத்தா. இதில் அர்ஜுன், திரிஷா, ராய் லஷ்மி ஆகியோர் கூடுதல் சிறப்பை பெற்று தந்தனர். கேம்ப்ளிங்கை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம் மக்களின் வரவேற்பை பெற்றது. மேலும் வெங்கட் பிரபுவின் கேரியர் பெஸ்டாக இப்படம் அமைந்தது. இப்படத்தில் அஜித்தின் நடிப்பை கண்டு விஜய் மெர்சல் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also read: வெளியில் தலை காட்டாமல் இருக்கும் வெங்கட் பிரபு.. தப்பித்தோம் பிழைத்தோம் என ஓடிய லோகேஷ்

மாநாடு: 2021ல் வெங்கட் பிரபுவின் புது முயற்சியில் எடுக்கப்பட்ட படம் தான் மாநாடு. இப்படத்தில் சிலம்பரசன், எஸ் ஜே சூர்யா, கல்யாணி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். மேலும் டைம் லூப்பை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இப்படத்தில் எஸ் ஜே சூர்யா வில்லனாக சிறப்புற நடித்திருப்பார். இப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று பிளாக் பாஸ்டர் ஹிட் கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News