வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

இந்த ஆண்டு மாஸ் ஓபனிங் கொடுத்த 5 படங்கள்.. வாத்தி தனுஷை முந்தினாரா பத்து தல சிம்பு

2023 தொடக்கத்திலிருந்து நிறைய படங்கள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் டாப் ஹீரோக்களான விஜய், அஜித் போன்ற நட்சத்திரங்களின் படங்களும் வெளியாகி இருந்தது. அந்த வகையில் இந்த ஆண்டு மாஸ் ஓபனிங் கொடுத்த ஐந்து படங்களை பார்க்கலாம். மேலும் அதில் வாத்தி தனுஷை பத்து தல சிம்பு முந்தினாரா என்பதும் தெரியவந்துள்ளது.

வாரிசு : தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் விஜய் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான திரைப்படம் வாரிசு. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். இந்த வகையில் வாரிசு படம் தமிழ்நாட்டில் முதல் நாளில் 19 கோடி கலெக்ஷன் செய்து முதலிடத்தை பிடித்துள்ளது.

Also Read : விஜய், கமலை போல வாரி வழங்கிய வெற்றிமாறன்.. உச்சகட்ட மகிழ்ச்சியில் விடுதலை படக்குழு

துணிவு : வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் துணிவு. இப்படம் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியானது. துணிவு படமும் முதல் நாளில் 17 கோடியை தாண்டி வசூல் செய்து மாஸ் ஓபனிங்கை கொடுத்திருந்தது.

வாத்தி : தனுஷ் ஆசிரியராக நடித்து தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியான திரைப்படம் வாத்தி. மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை தான் பெற்றது. ஆனால் வாத்தி படம் முதல் நாள் வசூலில் கிட்டத்தட்ட 10 கோடி வசூல் செய்திருந்தது.

Also Read : தனுஷ்- அனிருத் இடையில் அதிகரித்த விரிசல்.. பல கோடியை விட்டு எறிந்த சம்பவம்

பத்து தல : சிம்பு, கௌதம் கார்த்திக் ஆகியோர் நடிப்பில் நேற்று வெளியான திரைப்படம் பத்து தல. சிம்பு தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வரும் நிலையில் பத்து தல படத்தின் எதிர்பார்ப்பும் அதிகமாக இருந்தது. ஆனால் இயக்குனர் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. பத்து தல படம் முதல் நாளில் 5 லிருந்து 6 கோடி வரை வசூல் செய்திருந்தது. இதன் மூலம் வாத்தியை விட சிம்பு பின்வாங்கி உள்ளார்.

அகிலன் : ஜெயம் ரவி, பிரியா பவானி சங்கர், தன்யா ரவிச்சந்திரன் மற்றும் பலர் நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் அகிலன். பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு ஜெயம் ரவி அகிலன் படத்தை பெரிதும் நம்பி இருந்தார். இந்நிலையில் ஜெயம் ரவியின் கேரியரில் மாஸ் ஓபனிங் ஆக இப்படம் 3 கோடி வசூல் செய்திருந்தது.

Also Read : இரண்டு நாயகிகளோடு குத்தாட்டம் போட்ட 5 ஹீரோக்கள்.. அசராமல் சிம்பு அடித்த லூட்டி

Trending News