திங்கட்கிழமை, டிசம்பர் 16, 2024

ஜெய் லைன் அப்பில் இருக்கும் 5 படங்கள்.. இதற்கெல்லாம் காரணம் புண்ணியவதி நயன்தாரா தான்

Jai Lineup Movies: ஒரு நேரத்தில் அடுத்தடுத்த படங்களில் தொடர்ந்து நடித்து வந்த ஜெய் சில சர்ச்சைகளில் சிக்கி சின்னாபின்னமானார். அதிலும் காதல், லிவிங் ரிலேஷன்ஷிப் மற்றும் பிளேபாய் என பல விஷயங்களில் இவர் பெயர் டேமேஜ் ஆகி வந்தது. இதனால் சரியாக படங்களில் நடிக்க முடியாமல் குடிப்பழக்கத்திற்கு ஆளாகி இவர் கேரியர் தட்டு தடுமாறி விட்டது.

இந்நிலையில் இவருடைய கேரியரை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று நயன்தாரா இவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற்றுக் கொடுக்கிறார். அந்த வகையில் தற்போது ஜெய் லைனில் ஐந்து படங்கள் காத்துக் கொண்டிருக்கிறது. அதில் அறம் படத்தை எடுத்த இயக்குனர் கோபி நைனார் இயக்கத்தில் கருப்பர் நகரம் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் டீசர் சமீபத்தில் ரிலீஸ் ஆகியது. இதை பார்க்கும் பொழுது வித்தியாசமான கதைகளத்துடன் ஐஸ்வர்யா ராஜேஷ் உடன் இணைந்து நடித்திருக்கிறார். இப்படம் முழுக்க முழுக்க வட சென்னையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருக்கிறது. இப்படம் அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் ரிலீஸ் ஆகப் போகிறது.இதனைத் தொடர்ந்து நயன்தாரா நடிக்கும் அவருடைய 75வது படமான அன்னபூரணி படத்தில் ஹீரோவாக ஜெய் நடித்திருக்கிறார்.

Also read: உன் உடம்புல இரத்தம் சூடா இருக்கு, சண்டை செஞ்சி சம்பவம் பண்ணும் ஜெய்.. மிரளவிடும் கருப்பர் நகரம் டீசர்

இப்படம் அடுத்த மாதம் 1ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. அடுத்ததாக ஜெயின் 32 வது படத்திற்கான படப்பிடிப்பு போய்க்கொண்டிருக்கிறது. இப்படத்தை இயக்குனர் ராம்குமார் லோகநாதன் இயக்குகிறார். மேலும் இப்படத்தில் சிபி சத்யராஜ், பிரேம்ஜி மற்றும் பலர் நடிக்க இருக்கிறார்கள். இப்படத்திற்கான பூஜை முடிந்த நிலையில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

அடுத்ததாக இயக்குனர் அட்லி இயக்கத்தில் ஜெய் நடிப்பதற்கு கமிட் ஆகியிருக்கிறார். இதற்கு முழுக்க காரணம் நயன்தாராவின் பரிந்துரை தான். இவர் தான் ஜெயிக்காக பல இயக்குனர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வாய்ப்பை கொடுத்து வருகிறார். இதற்கு அடுத்து இயக்குனர் வெங்கட் பிரபு எழுதி இயக்கிய பார்ட்டி திரைப்படம் பல வருடங்களுக்கு முன் எடுக்கப்பட்டு அப்படியே கிடப்பில் போடப்பட்டிருக்கிறது.

அந்த வகையில் இப்படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிந்து விட்டது. அதனால் கூடிய விரைவில் இப்படத்தை ரிலீஸ் செய்வதற்கான வேலையை பார்த்து வருகிறார். இதில் சிவா, சத்யராஜ், ஜெயராம், ஷியாம், ரம்யா கிருஷ்ணன் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா மியூசிக் அமைத்திருக்கிறார்.

Also read: புருஷனை உப்புக்கு சப்பாணியாக பயன்படுத்தும் நயன்தாரா.. தலையாட்டி பொம்மையாக இருக்கும் விக்கி

- Advertisement -

Trending News