வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

எஸ் ஜே சூர்யாவுக்கு வரிசை கட்டி இருக்கும் 5 படங்கள்.. தனுஷ்டன் மோத போகும் நடிப்பு அரக்கன்

Sj Surya Upcoming Movies: தற்போது வரும் படங்களில் ஹீரோக்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் இருக்கிறதோ, அதே அளவிற்கு வில்லன்களுக்கும் முக்கியத்துவம் இருந்து வருகிறது. இப்படி படம் இருந்தால் மட்டுமே அந்த படம் மக்களிடம் ஒரு ஹைப்பை ஏற்படுத்துகிறது. அந்த வகையில் ஹீரோகளுக்கு இணையாக எத்தனையோ வில்லன்கள் நடித்தாலும் சில நடிகர்கள் நெகட்டிவ் கேரக்டரில் நடித்தால் அவர்களுக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்து விடுகிறது.

இந்த லிஸ்டில் தற்போது இடம் பெற்று இருப்பவர் எஸ்ஜே சூர்யா. இவருடைய நடிப்புக்காகவே படத்தை பார்க்க வேண்டும் என்று மக்கள் தியேட்டர்களில் போய் பார்க்க ஆரம்பிக்கிறார்கள். அத்துடன் இவருடைய நடிப்பும், ஒரு வித்தியாசமான வில்லத்தனத்தை காட்டும் அளவிற்கு இவரிடம் மிகப்பெரிய பவர்ஃபுல்லான ஒரு விஷயம் இருக்கிறது.

அந்த வகையில் மாநாடு, மெர்சல், மார்க் ஆண்டனி போன்ற பல படங்கள் உதாரணத்திற்கு சொல்லலாம். அதனாலேயே இவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்துக் கொண்டே வருகிறது. அப்படி எஸ் ஜே சூர்யாவிற்கு வரிசை கட்டி இருக்கும் படங்கள் என்னவென்றால் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் LIC படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் எஸ்ஜே சூர்யா கமிட்டாகி இருக்கிறார்.

Also read: எஸ்ஜே சூர்யா வேண்டாம்னு சொல்லிட்டேன்.. படம் ஹிட்டானதும் சீக்ரெட்டை அவிழ்த்துவிட்ட டாப் இயக்குனர்

இதனை அடுத்து சங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகியுள்ள இந்தியன் 2 படத்திலும் எஸ்ஜே சூர்யா மிரட்டல் ஆன நடிப்பை கொடுத்திருக்கிறார். அடுத்தபடியாக தனுஷ் அவருடைய 50வது படத்தை இயக்கி, நடிக்கும் ரயான் படத்திலும் தனுசுடன் மோதுவதற்கு எஸ்ஜே சூர்யா கமிட் ஆகி இருக்கிறார். அடுத்ததாக தெலுங்கு படமான சரிபோதா சனிவாரம் என்கிற படத்திலும் கமிட் ஆகி இருக்கிறார்.

இப்படத்தை விவேக் அத்தேர்யா இயக்குகிறார். இதில் நானி ஹீரோவாகவும், ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார். இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் எஸ்ஜே சூர்யா நடிக்கிறார். அடுத்ததாக தெலுங்கில் சங்கர் இயக்கி வரும் கேம் சேஞ்சர் படத்திலும் எஸ்.ஜே சூர்யாவின் நடிப்பை பார்க்கலாம். இப்படி தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் கமிட் ஆகி மல்டி ஸ்டார் வில்லனாக அவதரித்து வருகிறார்.

Also read: பணத்தை வாங்கி தயாரிப்பாளர்களை டீலில் விட்ட 5 ஹீரோக்கள்.. அட்வான்ஸ் தொகையை ஏப்பமிட்ட எஸ்ஜே சூர்யா

Trending News