வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

வழக்கறிஞராக போராடி ஜெயித்த ஹீரோக்களின் 5 படங்கள்.. அல்டிமேட் நடிப்பை வெளிகாட்டிய அஜித்

தமிழ் சினிமாவில் ஆரம்பகால கட்டங்களில் இருந்து இன்று வரையிலும் திரைப்படங்களில் நீதிமன்ற காட்சிகள் ஆனது முக்கிய பங்கு வகிக்கிறது என்றே சொல்லலாம். ஏனென்றால் அந்த அளவிற்கு  திரைப்படங்களில் குற்றம் சம்பந்தப்பட்ட காட்சிகள் ஆனது தவிர்க்க முடியாத ஒன்றாகவே உள்ளது. அந்த வகையில் சில ஹீரோக்கள் வழக்கறிஞராக நடித்து தங்களது திறமையால் போராடி ஜெயித்த ஐந்து படங்களை இங்கு காணலாம்.

நான் மகான் அல்ல: இயக்குனர் எஸ் பி முத்துராமன் இயக்கத்தில் 1984 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் நான் மகான் அல்ல. இதில் ரஜினிகாந்த்திற்கு ஜோடியாக ராதா நடித்துள்ளார். இப்படத்தில் ரஜினிகாந்த் திறமையான வழக்கறிஞராக நடித்து குற்றவாளிகளுக்கு எதிராக தனது திறமையால் வாதாடி வெற்றி வாகை சூடி இருப்பார்.

Also Read: ஜெயிலர் படத்தில் சிவகார்த்திகேயன் செய்ய போகும் சம்பவம்.. ரஜினி கொடுத்த அந்த வாய்ப்பு

நல்லவன்: 1988 ஆம் ஆண்டு விஜயகாந்த் இரட்டை வேடங்களில் நடித்து வெளிவந்த திரைப்படம் தான் நல்லவன். இப்படத்தை இயக்குனர் எஸ் பி முத்துராமன் இயக்கியுள்ளார். இதில் விஜயகாந்த் உடன் ராதிகா ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். அதிலும் செய்யாத கொலைக்காக மாட்டிக்கொள்ளும் தனது சகோதரரை தனது  வாதாடும் திறமையால் வென்று வெளியில் கொண்டு வருவார்.

வில்லாதி வில்லன்: 1995 ஆம் ஆண்டு சத்தியராஜ் நடித்து இயக்கிய திரைப்படம் தான் வில்லாதி வில்லன். இப்படம் இவரது நடிப்பில் வெளியான ஒரு அதிரடி திரைப்படம் ஆகும். மேலும் இதில் மூன்று முக்கிய கதாபாத்திரங்களில் சத்தியராஜ் நடித்துள்ளார். அதிலும் படத்தில் வழக்கறிஞராக தனது அல்டிமேட் நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.

Also Read: அப்பொழுது தாறுமாறாக ஓடி ஹிட் ஆனா திரைப்படத்தை தவறவிட்ட விஜயகாந்த்.! என்ன திரைப்படம் தெரியுமா

படிக்காதவன்: 1985 ஆம் ஆண்டு இயக்குனர் ராஜசேகர் இயக்கத்தில் சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், அம்பிகா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வெளிவந்த திரைப்படம் ஆகும். இப்படத்தில் அண்ணன் தம்பிகளாக ஒற்றுமையாக இருக்கக்கூடிய இவர்கள் ஒரு கட்டத்தில் பிரிந்து விடுகின்றனர். இதில் சதி திட்டத்தால் செய்யாத கொலைக்கு கைதாகி உள்ள தனது தம்பியை சிவாஜி கணேசன் தனது  திறமையால் வாதாடி குற்றவாளி இல்லை என நிரூபிப்பார்.

நேர்கொண்ட பார்வை: 2019 ஆம் ஆண்டு இயக்குனர் ஹெச் வினோத் இயக்கத்தில் வெளிவந்த சூப்பர் ஹிட் திரைப்படம். போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்தில் அஜித் குமார், ஷ்ரத்தா ஸ்ரீநாத் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இதில் அஜித் குமார் பெண்ணிற்கு எதிராக நடந்த அநீதியை தட்டிக் கேட்கும் வழக்கறிஞராக தனது அல்டிமேட் நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.

Also Read: நீங்களும் உங்க படமும் ஸ்காட்லாந்தில் கெத்து காட்டும் அஜித்.. வைரலாகும் புகைப்படங்கள்

 

Trending News