சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

நடிப்புக்கு இணையாக பாராட்டை பெற்ற கிஷோர் குமாரின் 5 படங்கள்.. ரஜினியே வியந்து பார்த்த நடிப்பு

சினிமாவைப் பொறுத்தவரை எத்தனையோ நடிகர்கள் வாய்ப்பு தேடி அலைந்திருக்கும் நேரத்தில் அவர்களுக்கு கிடைத்த சான்சை மிஸ் பண்ணாமல் முன்னேறி வருவார்கள். அதிலும் சில பேர் அவர்களுக்கு கொடுத்த கேரக்டரை சரியாக நடித்து பாராட்டைப் பெற்று மக்கள் மனதில் நிலையான ஒரு இடத்தை பெற்றிருப்பார்கள். அப்படித்தான் குணச்சித்திர கேரக்டரில் நடித்து நடிகர் கிஷோர் அதிக பாரத்தை பெற்றிருக்கிறார். இவர் நடித்த பெஸ்ட் படங்களை பற்றி பார்க்கலாம்.

பொல்லாதவன்: வெற்றிமாறன் இயக்கத்தில் 2007 ஆம் ஆண்டு பொல்லாதவன் திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தில் தனுஷ், திவ்யா, டேனியல் பாலாஜி, கிஷோர் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் கிஷோர், செல்வம் என்ற கேரக்டரில் ஒரு நடுத்தரமான மனசாட்சி உள்ள வில்லனாக நடித்திருப்பார். இவருடைய நடிப்பு மிகவும் வியந்து பார்க்கும் அளவிற்கு பாராட்டுகளை பெற்றது. இப்படம் இவருக்கு அடுத்தடுத்து வாய்ப்பை பெற்றுக் கொடுத்தது.

Also read: ஒரே படத்தில் நடிகைகளை மயக்கிய ஹீரோக்கள்.. திருமணம் செய்த 5 நட்சத்திர ஜோடிகள்

பொன்னியின் செல்வன்: சமீபத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன் முதல் பாகம் மற்றும் இரண்டாம் பாகம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் ரவி தாசனாக கிஷோர் நடித்திருந்தார். இவருடைய கதை பத்திரம் ஐஸ்வர்யாராயின் விசுவாசராக நடித்திருப்பார். இந்த கதாபாத்திரத்திற்கு இவர் நடித்தார் பொருத்தமாக இருக்கும் என்று மணிரத்தினம் தேடிப்போய் இவரை அழைப்பு விடுத்து நடிக்க வைத்திருக்கிறார்.

வடசென்னை: வெற்றிமாறன் இயக்கத்தில் 2018 ஆம் ஆண்டு வடசென்னை திரைப்படம் வெளிவந்தது. இதில் தனுஷ், ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ், டேனியல் பாலாஜி, கிஷோர் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் அமீரின் கும்பலை சேர்ந்த கேரக்டரில் நடித்திருப்பார். இதில் இவருக்கு கொடுக்கப்பட்டிருக்கும் கதாபாத்திரத்தை கச்சிதமாக நடத்தி பெயர் வாங்கி இருப்பார்.

Also read: விஜய், அஜித் சினிமாவை விட்டுப் போகணும்னு ஆசைப்படும் 5 நடிகர்கள்.. ஒரே ஒரு வாய்ப்புக்காக ஏங்கும் தங்கலான்

கபாலி: பா.ரஞ்சித் இயக்கத்தில் 2016 ஆம் ஆண்டு கபாலி திரைப்படம் வெளிவந்தது. இதில் ரஜினி, ராதிகா ஆப்தே, தன்ஷிகா, கிஷோர், தினேஷ், கலையரசன் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இரண்டாம் தலைவர் வீரசேகரனாக கிஷோர் நடித்திருப்பார். இப்படத்தில் இவர் சொல்லும் டயலாக் ரொம்ப பேமஸ் ஆகிவிட்டது. யாருடா அந்த கபாலி வர சொல்லுடா என்று வில்லனுக்கு உண்டான தோரணையில் சொல்லும் விதம் பார்க்கவே நன்றாக இருக்கும். இவருடைய நடிப்பை பார்த்து ரஜினியை வியந்து பாராட்டி இருக்கிறார். அந்த அளவிற்கு இவருக்கு கொடுத்த கேரக்டரை உள்வாங்கி நடித்திருக்கிறார்.

வெண்ணிலா கபடி குழு: சுசீந்திரன் இயக்கத்தில் 2009 ஆம் ஆண்டு வெண்ணிலா கபடி குழு திரைப்படம் வெளிவந்தது. இதில் விஷ்ணு விஷால், சூரி, கிஷோர் மற்றும் சரண்யா மோகன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படம் கபடி விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும். இதில் கிஷோர் விளையாட்டு சொல்லிக் கொடுக்கும் கோச்சாக அவருடைய டீமை உருவாக்குவார். ஆனால் அந்த டீம் உள்ளவர்கள் இவரை அலட்சியப்படுத்தினால் அடுத்ததாக இன்னொரு டீம் சரியான கோர்ட் இல்லாமல் ஜெயிக்க வேண்டும் என்ற நோக்கில் இருப்பதால் அவர்களுக்கு சொல்லிக் கொடுக்கும் கோச்சாக மாறிவிடுவார். இப்படத்தில் இவருடைய கேரக்டரை கச்சிதமாக நடித்தார்.

Also read: அடிப்பட்ட நடிகர்களை தூக்கி விட்ட 5 இயக்குனர்கள்.. அஜித், சிம்புக்கு ஏணிப்படியாக அமைந்த விஜய் பட இயக்குனர்

Trending News