வெள்ளிக்கிழமை, பிப்ரவரி 14, 2025

ஒரே தயாரிப்பு நிறுவனத்திற்கு 500 கோடி பட்ஜெட்டில் பிரதீப்பின் 5 படங்கள்.. கல்லாப்பெட்டி நிரம்பியதும் ஆடும் ஆட்டம்

லவ் டுடே என்ற ஒரு படத்தால் ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களின் கவனத்தை பெற்றவர் பிரதீப் ரங்கநாதன். குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட லவ் டுடே படம் வசூலை வாரிக் குவிக்க இவர் தான் காரணம். இப்போது உள்ள இளைஞர்களுக்கு பிடித்தது போல லவ் டுடே படத்தை எடுத்து வெற்றி கண்டுள்ளார்.

மேலும் இந்த படம் தெலுங்கு சினிமாவில் நல்ல வரவேற்பை பெற்றதால் அங்கும் டப் செய்து வெளியானது. இப்போது ஹிந்தியில் லவ் டுடே படம் ரீமேக் செய்யப்பட உள்ளது. கிட்டத்தட்ட 100 கோடி வசூலை வாரிக் குவித்ததால் லவ் டுடே படத்தின் தயாரிப்பு நிறுவனம் ஏஜிஎஸ் மிகுந்த உற்சாகத்தில் உள்ளது.

Also Read : மீண்டும் பிரதீப்பை லாக் செய்த பிரபல நிறுவனம், ஹீரோ யார் தெரியுமா ? 100 கோடி வசூல் பார்த்த கை சும்மா இருக்குமா!

இப்போது அவர்களது கல்லாப்பெட்டி நிரம்பியதால் பிரதீப் ரங்கநாதனை வேறு ஒரு தயாரிப்பு நிறுவனத்திற்கு கொடுக்க தயக்கம் காட்டி வருகிறார்கள். அதனால் இதே நிறுவனத்திற்கு தற்போது பிரதீப் ஐந்து கதைகள் சொல்லி உள்ளாராம். அந்த ஐந்து கதைகளுமே அந்நிறுவனத்திற்கு பிடித்து உள்ளதாம்.

ஆகையால் ஐந்து படங்களில் ஒரு படத்தில் பிரதீப் ஹீரோவாக நடிக்க சொல்லி உள்ளனர். மீதமுள்ள நான்கு கதைகளில் வேறு ஹீரோக்களை வைத்து எடுத்துக் கொள்ளலாம், நீங்கள் இயக்குங்கள் 500 கோடி பட்ஜெட்டை தாண்டினாலும் பரவாயில்லை நாங்கள் செலவு செய்கிறோம் என்று ஏஜிஎஸ் கூறியுள்ளதாம்.

Also Read : அள்ளிக் கொடுத்த 100 கோடி வசூல் கிள்ளி கொடுத்த தயாரிப்பாளர்.. லவ் டுடே படத்திற்கு பிரதீப் வாங்கிய சம்பளம்

அந்த அளவுக்கு பிரதீப் மீது அந்நிறுவனம் நம்பிக்கை வைத்துள்ளது. அதுமட்டுமின்றி மொத்தமாக பிரதீப்பை வளைத்து போட்டால் நிறைய பணம் சம்பாதிக்கலாம் என்று அந்நிறுவனம் திட்டம் போட்டுள்ளது. மேலும் இந்த படங்களுக்கு பிரதீப்புக்கு அதிக சம்பளம் கொடுக்கப்பட உள்ளதாக பேசப்பட்டுள்ளது.

ஒரு படத்தால் ஓவர் நைட்டில் பேமஸ் ஆன பிரதீப்புக்கு கூரையை பிச்சிக்கொண்ட அதிர்ஷ்டம் கொட்டோ கொட்டு என்று கொட்டுகிறது. மேலும் பிரதீப்பின் அடுத்த ஐந்து படங்களுக்கான அறிவிப்பு இன்னும் சில தினங்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

Also Read : நடிகைகளை கேவலமாக விமர்சித்த பிரதீப்.. வாய்ப்பு தராததால் வம்புக்கு இழுக்கும் கோமாளி பட ஹீரோயின்.!

Trending News