திங்கட்கிழமை, ஜனவரி 6, 2025

பிரின்ஸ் தோல்விக்குப்பின் வரிசை கட்டி நிற்கும் சிவகார்த்திக்கேயன் 5 படங்கள்.. ரஜினி ஸ்டைலில் எகிற விட்ட மாவீரன்

சினிமாவில் படிப்படியாக முன்னேறி தற்போது டாப் ஹீரோவாக வளர்ந்து நிற்கும் நடிகர்களில் சிவகார்த்திகேயனும் ஒருவர். அதிலும் மிக குறுகிய காலகட்டத்தில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து முன்னணி நடிகர்களை பொறாமைப்படுத்தியுள்ளார். இந்த நிலையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளிவந்த பிரின்ஸ் படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. இருப்பினும் வரிசை கட்டி காத்திருக்கும் சிவகார்த்திகேயனின் 5 படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ் ஆகிறது.

அயலான்: ஆர் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் விரைவில் ரிலீஸ் ஆக இருக்கும் படம் தான் அயலான். இதில் சிவகார்த்திகேயன் ஒரு விவசாயி கெட்டப்பில் வேற்றுக்கிரக வாசியாக நடித்திருக்கிறார். இவருக்கு கதாநாயகியாக ராகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார். இவர்களுடன் யோகி பாபு, கருணாகரன், பானுப்பிரியா உள்ளிட்டோரும் இணைந்து நடிக்கின்றனர். பல வருடங்களாக ரிலீசாக காத்திருக்கும் இந்த படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

Also Read: தனுஷ் தூக்கிவிட்டு அழகு பார்த்த 6 பிரபலங்கள்.. நன்றி மறந்தாரா சிவகார்த்திகேயன்?

மாவீரன்: இந்த வருட சம்மருக்கு ரிலீஸ் ஆகும் மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக மிஷ்கின் களமிறங்கியுள்ளார். இதில் சிவகார்த்திகேயன் ஒரு கார்டூனிஸ்ட் ஆக நடிக்கிறார். அதிரடி ஆக்சன் படமாக உருவாக்கிக் கொண்டிருக்கும் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி சங்கர் நடிக்கிறார்.

மேலும் சிவகார்த்திகேயன் பிறந்த நாளான இன்று மாவீரன் படத்தின் முதல் சிங்கிள் பாடல் ‘சீனா சீனா’ என்ற பாடலும் வெளியாகி தற்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகிக் கொண்டிருக்கிறது. மேலும் ரஜினி ஸ்டைலில் சிவகார்த்திகேயன் மாவீரன் படத்திற்கான எதிர்பார்ப்பை மேலும் எகிற விட்டிருக்கிறார். இந்தப் படத்தை சம்மர் ட்ரீட்டாக ரிலீஸ் செய்ய உள்ளனர்.

Also Read: ஜெயிலர் படத்தில் வந்த காசை சிவகார்த்திகேயன் என்ன செய்தார் தெரியுமா.? பலரையும் கலங்க வைத்த சம்பவம்

இதைத்தொடர்ந்து இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்திலும் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார். இதன் தொடர்ச்சியாக இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமலஹாசனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் படத்திலும் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்க உள்ளார். அதேபோல் ஏஆர் முருகதாஸ் ப்ராஜெக்ட்டிலும் சிவகார்த்திகேயன் நடிப்பதற்காக ஒப்பந்தம் செய்துள்ளார்.

இந்த 5 படங்கள்தான் அடுத்தடுத்து சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்தடுத்து ரிலீஸ் ஆகப்போகிறது. எனவே டாக்டர், டான் போன்ற படங்களில் 100 கோடியை தட்டி தூக்கிய சிவகார்த்திகேயன், அடுத்ததாக வெளியான பிரின்ஸ் படத்தில் படு தோல்வியை சந்தித்ததால் அதை சரி செய்ய வேண்டும் என்று அடுத்தடுத்த படங்களில் வெறிகொண்டு நடிக்கிறார்.

Also Read: சிவகார்த்திகேயனை ஆலமரமாய் வளர்த்தவிட்ட 6 படங்கள்.. 100 கோடி வசூலை தாண்டிய இரண்டு படங்கள்

Trending News